வியாழன், அக்டோபர் 30, 2008

குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்...
சிரிக்கும் குழந்தையை தேடித்தேடி ரசிக்கிறேன்...
நீதானடி என் தெய்வம்..’’

நன்றி : http://www.karkibava.com

புதன், அக்டோபர் 29, 2008

சில்லென்று ஒரு காதல்

படம் : சில்லென்று ஒரு காதல்இசை :ஏஆர்ரகுமான்பாடியவர் :நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்நடிப்பு :சூர்யா, ஜோதிகா & பூமிகாஇயக்கம்:என்.கிருஷ்ணாஎழுதியவர்:வாலிவரிகள்(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வாநான் நானா கேட்டேன் என்னை நானேநான் நீயாம் நெஞ்சம் சொன்னதேமுன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா

(கோரஸ்)ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்ஜல் ஜல்ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறிசுந்தர மல்லிகைசந்தன மல்லிகைசிந்திய புன்னகை வண்ணம் மின்ன(ஒ ஓ )

(பெண்)பூ வைத்தாய் பூ வைத்தாய்நீ பூவைக்கோர் பூ வைத்தாய்மண பூ வைத்து பூ வைத்தபூவைக்குள் தீ வைத்தாய்(ஒ ஓ)

(ஆண்)தேனி - நீ -நீ மழையில் ஆடநாம் - நாம் -நாம் நனைந்து வாடஎன் நாளத்தில் உன் ரத்தம்ஆடைக்குள் உன் சத்தம்உயிரே ஒ

(பெண்)தோழி ஒரு சில நாழி தனியென ஆனால் தரையினில் மீன்முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாநான் நானா கேட்டேன் என்னை நானே

(ஆண்)நான் நானா கேட்டேன் என்னை நானே

(பெண்)முன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா(ஆண்)நிலவிடம் வாடகை வாங்கிவிழி வீட்டினில் குடி வைக்கலாமாநாம் வாழும் வீட்டுக்குள்வே ராரும் வந்தாலே தகுமா?

(பெண்)தேன் மழை தேக்கத்தில் நீ தான்உந்தன் தோள்களில் இடம் தரலாமாநான் சாயும் தோள் மேல்வேர்யாரும் சாய்ந்தாலேதகுமா?

(ஆண்)நீரும் செங்குள சேறும்கலந்தது போலேகலந்திடலாம்

(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா(ஆண்)நான் நானா கேட்டேன் என்னை நானேநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே

(பெண்)முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூப் பூவாய் பூப்போம் வா

(கோரஸ்)ரங்கோ ரங்கோலிகோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்ஜல் ஜல்ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்கோலம் போட்டவள் கைகள் மாறிசுந்தர மல்லிகைசந்தன மல்லிகைசித்திர புன்னகை வண்ணம் மின்ன(ஒ ஓ )

வெள்ளி, அக்டோபர் 10, 2008

ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை

ராமன்

தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன்.

சீதை

வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள்.
தசரதன்
பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி சட்டம் சமீபத்தில் வந்ததது தான். தன் மகன் மேல் அதிக பாசம் கொண்டிருந்தவன். தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியம் காக்க உயிர் துறந்தவன்.

லக்ஷமணன்

சகோதர பாசம். சகோதர மதிப்பு. தம்பியுடையான படைக்கு அஞ்சான். அண்ணி தாயுக்கு சமம் என்பதை உணர்த்தியவன். இதற்கு நேர் எதிர் வாலி.தம்பி மனைவியை அபகரித்தவன்.

பரதன்

தாய் செய்தது தவறு என்று எடுத்துக் காட்டியவன். அண்ணனுடைய நாற்காலிக்கு ஆசை படாதவன்.
கைகேயி - முதல் பாதி
தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்தவனாக இருந்தாலும் ராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கஷ்டம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம்.
கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.

கூனி-மந்தரை

யார் வீட்டில் உண்கிறோமோ அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது

சூர்பனகை

திருமணமான ஆணின் மீது ஆசை கொள்ளக் கூடாது

ராவணன்

இசையில் தேர்ந்தவன். தெய்வ பக்தி கொண்டவன். பிறர் மனை நோக்குதல் பாவம் என்று உணர்த்த ஒரு பாத்திரம். அப்படியே அவளை கடத்தி வந்த தப்பு செய்தாலும் கடைசி வரை அவளை தொடாமல் கண்ணியம் காத்தவன். பாடம் - ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது. ஒரு ஹீரோ கதையில் இருந்தால் ஒரு வில்லனும் உண்டு. அதற்கு அடிவகுத்தவை இக்கதைகள். இன்னும் சினிமாவில் இதே தொடர்கின்றன. ராமாயணத்தில் வந்த ஒவ்வொரு வரியையும் வைத்து ஆயிரம் படங்கள் வந்தாயிற்று.

மண்டோதரி

கணவன் தவறான பாதையில் சென்றாலும் கடைசி வரை எப்படியாவது அவனை நேர்வழிக்கு கொண்டு வர முடியும் என்று நம்பியவள். அதில் தோற்று பாடம் கற்பித்தவள்.

கும்பகர்ணன்

தவறே செய்திருந்தாலும் சகோதரன் பக்கம் நின்றவன். சகோரத்துவத்தில் இது ஒரு வகை.லக்ஷமணனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.

விபீஷணன்

தவறே செய்திருந்தாலும் தர்மத்தின் பக்கம் நின்றவன். சகோதரத்தில் இதுவும் ஒரு வகை தான். இது துரோகமா என்று வாதிட முடியும். ஆனால் கடைசியில் ராவணன் குலம் தழைத்தது இவனால் தான். தர்மத்தின் பக்கம் நின்றதால் இவன் பரதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.

வாலி

தம்பி மனைவியை தன் மனைவியாக எண்ணுவது தவறு.

சுக்ரீவன்

அண்ணனால் தவறாக எண்ணப்பட்ட ஒரு பாத்திரம். அண்ணன் மகனை இளவரசனாக்கி சகல மரியாதையோடு நடத்தியவன்.

அனுமான்

தலைவன் - தொண்டனுக்கு இடையில் இருக்கும் ஒரு அற்புத பந்தம்.சேவையில் உயர்ந்தவன். தன் தலைவன் மீது அசரா நம்பிக்கை கொண்டவன். தன் தலைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதிலும் தன் தலைவனையே கண்டவன்.

புஷ்பகவிமானம்

இன்றைய விமானத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்திட்ட ஒரு கற்பனை கதை.
வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது
நல்ல பட்டிமன்ற தலைப்பு. வாலி ஒரு குரங்கு. ராமன் மனிதன். வேட்டையில் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை ராமன். ராமன் ஒரு ஹீரோ என்பதால் மறைந்திருந்து கொன்றது சற்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.
ராமாயணத்தில் வரும் பல துணைகதைகளும் நல்ல விஷயங்களை சொல்லவே முயன்றிருக்கின்றன.
இறைவனை நம்பாதவர்களுக்கு - ராமாயணத்தை நல்ல கதையாக கருதலாம். அதில் சொன்ன நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.
காலம் காலமாக மக்கள் மனதில் நின்றுவிட்ட கதை. கதையில் அடிப்படை கோளாறு இருந்தால் என்றோ மறைந்து போயிருக்கும். நமக்கு பல சந்தேகங்கள் தோன்றலாம். ஆனால் மூலக்கதை அறியாமல் கேட்டதை வைத்த இந்த கதை வளர்ந்திருக்கிறது.

நன்றி : ஈதேனீ மன்றம், http://wiki.pkp.in/forum/t-95805/#post-280147

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts