வியாழன், நவம்பர் 10, 2016

இந்திய வரலாற்றில் இது முதன்முறையல்ல !...

இந்தியாவில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்ய்பட்டிருப்பது தான் தற்போது மிக பெரிய விடயமாக எல்லா இடங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கு முன்னரே இரண்டு முறை ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் விடயம் நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்!
கடந்த 1946ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடையாத காலகட்டத்தில், கணக்கில் காட்டப்படாத பண புழக்கத்தை தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியானது 1000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது.
பின்னர் 1954 ஆம் ஆண்டு 5000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நோட்டுகளை கொள்ளைகாரர்களும், கடத்தல்காரர்களும் கடத்தி செல்ல சுலபமாக இருப்பதாக பிரச்சனைகள் எழுந்தது. இதனால் 5000 ரூபாய் நோட்டுகளுக்கும் கடந்த 1978 ஆண்டு அரசு தடை விதித்தது.

அதன் பின்னர் 38 ஆண்டுகள் கழித்து தற்போது தான் மீண்டும் இந்தியாவில் ருபாய் நோட்டுகளுக்கு தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : http://news.lankasri.com/india/03/113101?ref=youmaylike2

வியாழன், செப்டம்பர் 15, 2016

என்ன தான் இருக்கு இந்த 4G- ல்

நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.
இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.
இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.
இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
6). "4G" இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.

புதன், ஆகஸ்ட் 10, 2016

தமிழர் திருமணத்தில் தாலி நுழைந்த கதை -ஒவ்வொரு தமிழனும் அறியனும் !

திருமணமுறை பற்றி …………………………
தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது .
சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை .
சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல் ஆனது .
பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்சங்கமறுவியகாலத்தில் ….
கரணம் என்றால்கிரியை” -முறையில் திருமணம் .
ஏன் சங்கமருவியகாலத்தில் திருமணம் கிரியை முறையில் மக்கள் மத்தில் சாட்சி வைத்து செய்ய வேண்டி நேர்ந்தது ?
சங்க காலத்தின் இறுதியில் அந்த தூய காதல் அசுத்தப்பட்டமையே காரணம் .
நானும் அவனும் புணர்ந்த காலை குறுக்கு பார்த்திருந்த தான் பொய்ப்பின் நான் எது செய்வேன் யாருமில்லை தானே கள்வன்இது ஒரு அபலைப்பெண்ணின் குரல் .
இந்த அடிகள் கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் பெண்ணை கைகழுவி விடும் போக்கு அதிகரித்தமையை காட்டுகிறது.
ஆகவே கிரியை முறை திருமணம் தேவைப்பட் டது .
தாலி பற்றி …………………..
தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாக பிறந்தது
தாலிகம் என்றால் பனை மரம் என்று பொருள் படும் .
அதாவது பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் காட்டுவார்கள் .
தாலி பொருளாகுபெயராகத்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது .
பின்னைய காலங்களில் மனித சிந்தனை நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை இன்றைய பவுனாக அதாவது தங்கமாக மாறியுள்ளது.
தமிழனின்பண்பாடு கலாசாரம் போன்றவற்றை விபரிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கருத்து அதில் ஒரு நெகிழ்ச்சித்தன்மை உண்டு .
ஆக மொத்தத்தில் சங்கமருவிய காலமான கி.பி.3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.6ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியிலேயே திருமண கிரியை முறைகள் நடைமுறையில் இருந்தன என அறியக்கிடக்கின்றது .
.
நன்றி : குணா - http://www.yarllk.com/2081

வெள்ளி, மே 06, 2016

எப்படி இருந்த பழமொழி ... இப்படி ஆயிருச்சே ..,

1. "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

சரியான பழமொழி :

"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,

நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

விளக்கம் :

இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.

கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.

2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - .

3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.

சரியான பழமொழி :

படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்

4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் -

5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு.

சரியான பழமொழி :

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு -

மூலம் : www.facebook.com

புதன், மார்ச் 23, 2016


You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts