வியாழன், நவம்பர் 10, 2016

இந்திய வரலாற்றில் இது முதன்முறையல்ல !...

இந்தியாவில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்ய்பட்டிருப்பது தான் தற்போது மிக பெரிய விடயமாக எல்லா இடங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கு முன்னரே இரண்டு முறை ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் விடயம் நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்!
கடந்த 1946ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடையாத காலகட்டத்தில், கணக்கில் காட்டப்படாத பண புழக்கத்தை தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியானது 1000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது.
பின்னர் 1954 ஆம் ஆண்டு 5000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நோட்டுகளை கொள்ளைகாரர்களும், கடத்தல்காரர்களும் கடத்தி செல்ல சுலபமாக இருப்பதாக பிரச்சனைகள் எழுந்தது. இதனால் 5000 ரூபாய் நோட்டுகளுக்கும் கடந்த 1978 ஆண்டு அரசு தடை விதித்தது.

அதன் பின்னர் 38 ஆண்டுகள் கழித்து தற்போது தான் மீண்டும் இந்தியாவில் ருபாய் நோட்டுகளுக்கு தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : http://news.lankasri.com/india/03/113101?ref=youmaylike2

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts