புதன், செப்டம்பர் 27, 2017

ஐசிசி புதிய விதிகள் 28-09-17 முதல் அமல்

சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் சுவாரஸ்யத்தையும்விறுவிறுப்பையும் கொண்டு வருவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (.சி.சி.) நிபுணர்களுடன் ஆலோசித்து விதிமுறைகளில் மாற்றம் செய்வது உண்டு.
அந்த வகையில் தற்போது கிரிக்கெட்டில் முக்கியமான சில விதிமுறைகள் மாற்றப்படுகிறதுஅது நாளை (வியாழக்கிழமைமுதல் அமலுக்கு வருவதாக .சி.சிநேற்று அறிவித்ததுஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியா– ஆஸ்திரேலியா தொடரின் போது புதிய விதிகள் பயன்படுத்தப்படாது என்று ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
.சி.சி.யின் புதிய விதிமுறை விவரம் வருமாறு:–
*டெஸ்ட் கிரிக்கெட்டில், 80 ஓவர்களுக்கு பிறகு கூடுதலாக இரண்டு டி.ஆர்.எஸ்வாய்ப்பு வழங்கப்படும் நடைமுறை நீக்கப்படுகிறதுஅதாவது இனி நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உதவும் டி.ஆர்.எஸ்தொழில்நுட்பத்தை ஒரு இன்னிங்சில் இரு அணியும் தலா 2 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்அப்பீல் சரியாக இருக்கும் பட்சத்தில் அது வழக்கம் போல் நீடிக்கும்முன்பு இருந்த கூடுதல் வாய்ப்பு கிடையாது.
சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலும் இனி டி.ஆர்.எஸ்பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறதுஇதில் ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா ஒரு டி.ஆர்.எஸ்வாய்ப்பு வழங்கப்படும்.
*பேட்ஸ்மேன் அடிக்கும் ஷாட்டை எல்லைக்கோடு அருகே தாவி குதித்து கேட்ச் செய்ய முயலுகையில்பந்தை பிடிக்கும் போது பீல்டரின் கால்கள் கட்டாயம் எல்லைக்கோட்டின் உள்பகுதியில் இருக்க வேண்டும்மாறாக எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்து (நீண்ட தூரம் ஓடி வரும் போது இவ்வாறு நடப்பது உண்டு) ‘ஜம்ப்’ செய்து கேட்ச் செய்தபடி உள்ளே வந்தால்அது அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டுபவுண்டரியாக கணக்கில் கொள்ளப்படும்.
*ரன்அவுட்டில் இருந்து தப்பிக்க ஓடும் பேட்ஸ்மேன் கிரீசுக்குள் பேட்டை வைத்து விட்ட பிறகு அவரது பேட் தரையில் இருந்து சற்று மேலே தூக்கிக்கொண்டு இருந்தாலோ அல்லது கிரீசை தொட்ட பிறகு பேட்ஸ்மேனின் தொடர்பில் இருந்து பேட் நழுவி இருந்தாலோ அந்த சமயத்தில் ஸ்டம்பை தாக்கும்பட்சத்தில் அது ரன்அவுட் ஆக தீர்ப்பு வழங்கப்பட்டு வந்ததுஇந்த முறையில் அதிரடி திருத்தம் செய்யப்படுகிறதுஒரு முறை பேட்டை கிரீசுக்குள் வைத்து விட்டால் போதும்அதன் பிறகு பேட் அந்தரத்தில் இருந்தாலும் இனி ரன்அவுட் செய்ய முடியாதுஇது பேட்ஸ்மேனுக்கு கூடுதல் அனுகூலமாக அமையும்ஸ்டம்பிங்குக்கும் இந்த விதி பொருந்தும்.
*பேட்ஸ்மேன் ஷாட் அடிக்கும் போதுஅருகில் நிற்கும் பீல்டரின் ஹெல்மெட்டிலோ அல்லது விக்கெட் கீப்பர் ஹெல்மெட்டிலேயே பந்து பட்டு எழும்பும் போது அதை கேட்ச் செய்தால் பேட்ஸ்மேன் அவுட் என்றே அறிவிக்கப்படுவார்இந்த மாதிரி பந்து பட்டு வரும் போது ரன்அவுட் அல்லது ஸ்டம்பிங்கும் செய்யலாம்.
*களத்தில் நிற்கும் பீல்டர்கள் தங்களது அப்பீலை வாபஸ் பெறும் போதுஅவுட் ஆனதாக வெளியேறும் பேட்ஸ்மேனை நடுவர் எந்த நேரத்திலும் திரும்ப அழைக்கலாம்அதாவது முன்பு பேட்ஸ்மேன் எல்லைக்கோட்டை கடந்து விட்டால் திரும்ப அழைக்க முடியாதுஇனி அப்படி கிடையாதுபேட்ஸ்மேன் எல்லைக்கோட்டை கடந்திருந்தாலும் அடுத்த பந்தை வீசுவதற்குள் அழைக்க முடியும்.
*பேட்டுகளின் அளவுகளில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகிறதுபேட்டின் நீளம்அகலங்களில் எந்த மாற்றமும் இல்லைஆனால் பேட் விளம்பின் தடிமன் 40 மில்லிமீட்டரை தாண்டக்கூடாதுஇதே போல் ஒட்டுமொத்த பேட்டின் தடிமன் 67 மில்லிமீட்டருக்கு மேல் இருக்கக்கூடாதுபேட்டை அளவீடு செய்ய நடுவரிடம் கருவிகள் வழங்கப்படும்.
*டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் தலா 6 மாற்று ஆட்டக்காரர்களை (முன்பு 4 வீரர்கள்அறிவிக்கலாம்.
*20 ஓவர் கிரிக்கெட் மழையால் பாதிக்கப்பட்டு, 10 ஓவருக்கும் குறைவான போட்டியாக மாற்றப்படும்போதுஒரு பவுலர் குறைந்தபட்சம் 2 ஓவருக்கு குறையாமல் பந்து வீச வேண்டும்இதன்படி பார்த்தால் 5 ஓவர் ஆட்டமாக மாற்றப்படும் போதுஇரண்டு பவுலர்கள் தலா 2 ஓவர்களை வீச முடியும்.
*ஸ்டம்பு மீது வைக்கப்பட்டிருக்கும் பெய்ஸ்ல் பந்து பட்டு தெறிக்கும் போது சில சமயம் விக்கெட் கீப்பரையோ அல்லது அருகில் நிற்கும் பீல்டரையே பதம் பார்த்து விடுகிறதுதென்ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சருக்கு பெய்ல்ஸ் தாக்கி கண் பாதிக்கப்பட்டுஅத்துடன் அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்ததுஇந்த மாதிரியான காயங்களை தவிர்க்கும் வகையில்பெய்ல்ஸ் அதிக தூரம் பறக்காத வகையில் அதை ஸ்டம்புடன் ஒரு சிறு பிணைப்பு மூலம் இணைப்பது என்ற பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளதுஅதே சமயம் பந்து தாக்கி பெய்ல்ஸ் விழாமலும் இருந்து விடக்கூடாதுஇந்த புதிய வசதி கொண்ட பெய்ல்சை உபயோகிப்பது குறித்து சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம்.
*வீரர்களின் நடத்தை விதிமுறை மேலும் கடுமையாக்கப்படுகிறதுகளத்தில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் வீரரை உடனடியாக வெளியேற்ற நடுவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறதுஇது கால்பந்தில் வீரரை சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றுவது போன்றதாகும்.
அதாவது நடுவரை தாக்குவதுமிரட்டுவதுவேண்டுமென்றே இடிப்பதுவீரர்களுடனோ அல்லது வேறு நபர்களுடனோ உடல்ரீதியாக மோதலில் ஈடுபடுவதுஇதர வன்முறைகள் ஆகியவற்றை லெவல்–4 வகை குற்றமாக கருதி சம்பந்தப்பட்ட வீரரை நடுவர் உடனடியாக களத்தை விட்டு வெளியே அனுப்பலாம்.
மேற்கண்டவாறு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
வங்காளதேசம்– தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்செப்ஸ்ட்ரூமில் நாளை தொடங்குகிறதுஇதே போல் பாகிஸ்தான்இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் அபுதாபியில் நாளை ஆரம்பிக்கிறதுஇவ்விரு தொடர்களும் .சி.சி.யின் புதிய விதிக்குட்பட்டு நடைபெறும்.


Source : http://www.dailythanthi.com/Sports/Cricket/2017/09/27021932/Cricket-introducing-red-cards-from-September-28-so.vpf


You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts