புதன், மார்ச் 31, 2010

விக்கி_2010 My Dear Vickey

My Dear Vickey

நீ என்றும் எங்கள் நினைவுகளுடன் [03-01-2010 ஞாயிற்றுக்கிழமை]














'பிக் பாங்' சோதனை வெற்றி : பிரபஞ்ச ரகசியம் தெரியும்?

பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.'அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.



குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.



இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.



இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் .



நன்றி : http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1859

திங்கள், மார்ச் 22, 2010

ஐ.பி.எல்., அணிகள் விலைகள் & புள்ளிப்பட்டியல் 21-03-10

பத்து அணிகளின் மதிப்பு (ரூபாயில்)
அணிகள் மதிப்பு உரிமையாளர்
1.மும்பை இந்தியன்ஸ் 503.55 கோடி முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ்)
2.பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் 502.20 கோடி விஜய் மல்லையா (யு.பி.குரூப்)
3.டெக்கான் சார்ஜர்ஸ் 481.50 கோடி வெங்கட்ராம் ரெட்டி(டெக்கான் கிரானிக்கல்)
4.சென்னை சூப்பர் கிங்ஸ் 413.55 கோடி சீனிவாசன்(இந்தியா சிமென்ட்ஸ்)
5.டில்லி டேர்டெவில்ஸ் 378 கோடி கிராந்தி மல்லிகார்ஜுன ராவ்(ஜி.எம்.ஆர்.ஹோல்டிங்)
6.கிங்ஸ் லெவன் பஞ்சாப் 342 கோடி பிரித்தி ஜிந்தா, நெஸ் வாடியா (பாம்பே டையிங்)
7.கோல்கட்டா நைட் ரைடர்ஸ் 337.95 கோடி ரெட் சில்லீஸ் (ஷாருக்கான், ஜுகி சாவ்லா, ஜெய் மேத்தா)
8.ராஜஸ்தான் ராயல்ஸ் 301.50 கோடி எமர்ஜிங் மீடியா(ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா)
9.புனே 1700 கோடி அபிஜித் சர்க்கார் (சகாரா நிறுவனம்)
10.கொச்சி 1520 கோடி சைலேந்திர கெய்க்வாட் (ரெண்டஸ்வஸ் நிறுவனம்

புள்ளிப்பட்டியல் 21-03-10

டில்லி அணியிடம் வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
பெங்களூரு 4 3 1 6 +1.212
டெக்கான் 4 3 1 6 +0.450
மும்பை 3 2 1 4 +1.520
சென்னை 4 2 2 4 +0.448
கோல்கட்டா 4 2 2 4 --0.906
டில்லி 5 2 3 4 -0.920
பஞ்சாப் 3 1 3 2 -0.276
ராஜஸ்தான் 4 1 3 2 -0.953
* சென்னை-பஞ்சாப் இடையிலான போட்டி வரை


நன்றி : http://sports.dinamalar.com/InnerPage.aspx?Page=2

Teams Mat Won Lost Tied N/R Pts Net RR For Against
Royal Challengers Bangalore 4 3 1 0 0 6 +1.212 587/68.4 582/79.2
Deccan Chargers 4 3 1 0 0 6 +0.450 681/80.0 645/80.0
Mumbai Indians 3 2 1 0 0 4 +1.520 581/60.0 483/59.1
Chennai Super Kings 4 2 2 0 0 4 +0.448 649/79.1 620/80.0
Kolkata Knight Riders 4 2 2 0 0 4 -0.906 540/79.2 617/80.0
Delhi Daredevils 5 2 3 0 0 4 -0.919 754/97.0 862/99.1
Kings XI Punjab 4 1 3 0 0 2 -0.276 645/80.0 656/78.4
Rajasthan Royals 4 1 3 0 0 2 -0.953 609/80.0 581/67.5

Source : http://www.cricinfo.com/ipl2010/engine/series/418064.html?view=pointstable

சனி, மார்ச் 20, 2010

2010 DLF IPL Points Table, Standings as on 19-03-10

Teams MP Win Loss NR RR Points
Mumbai Indians 02 02 00 00 +2.550 04
Bangalore 03 02 01 00 +1.463 04
Chennai Super Kings 03 02 01 00 +0.604 04
Deccan Chargers 03 02 01 00 +0.433 04
Kolkata Knight Riders 03 02 01 00 -0.641 04
Delhi Daredevils 04 02 02 00 -1.027 04
Kings XI Punjab 03 00 03 00 -0.380 00
Rajasthan Royals 03 00 03 00 -1.995 00

Source : http://indianpremierleague-ipl.blogspot.com/2008/04/iplt20-9th-match-live-score-deccan.html

திங்கள், மார்ச் 08, 2010

உங்களையே நீங்கள் அறியுங்கள்: தமிழருவி மணியன்

உங்களையே நீங்கள் அறியுங்கள்;​ இன்பம் வெளியே இல்லை;​ நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்றார் எழுத்தாளர் தமிழருவி மணியன்.

"மனிதனை இயக்கும் மனதில் இருந்துதான் எண்ணம் தோன்றுகிறது. அதிலிருந்துதான் வார்த்தை,செயல் எல்லாமே உருவாகிறது. ஆகவே மனம் எவ்வழியோ அவ்வழியே வாழ்வும் இருக்கும்".

கோயிலின் கருவறையில் உள்ள கடவுள் ஏன் கல்லில் காட்சி அளிக்கிறார்? கூட்டினால் கிடைப்பதானே கலை? ஆனால், சிற்பமோ கழித்தலில் கண்டெடுக்கப்படுவது. கல்லில் வேண்டாதவற்றை கழித்துக்கொண்டே வந்தால் கடவுள் தெரியும்; நம்மில் வேண்டாதவற்றை கழித்துக்கொண்டே வந்தால் அந்தக் கடவுள் நமக்குள்ளும் தெரியும்.

மனதில் இருக்கும் வேண்டாதவற்றை அகற்ற வேண்டும் என்றால் முதலில் நாம் நம்மை அறிய வேண்டும். நமக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்து, கேள்விகளைக் கேட்கும்போதுதான் அதற்கான விழிப்புணர்வு உண்டாகும். வெளியே தேடினால் இன்பமும் துன்பமும் இணைந்த விஞ்ஞானம் தோன்றும்; உள்ளே தேடினால் இன்பத்தை மட்டுமே கொடுக்கின்ற மெய்ஞானம் தோன்றும். ஆகையால், உங்களுக்குள்ளே உள்ள உங்களைக் கண்டறியுங்கள்; கடவுளைக் கண்டடைவீர்கள்"

நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=207916&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=உங்களையே%20நீங்கள்%20அறியுங்கள்:%20தமிழருவி%20மணியன்

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts