செவ்வாய், அக்டோபர் 19, 2010

100 வயதில் பிஎச்டி படிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி !

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் 100 வயதாகும் சுதந்திரப் போராட்ட வீரர், பி.எச்.டி. ஆய்வு மேற்கொள்ள பெயர் பதிவு செய்துள்ளார். 100 கோடி ஜனத்தொகை கொண்ட நம் நாட்டில் மிகவும் வயதான பி.எச்.டி. மாணவர் இவர்தான். கவுகாத்தியில் வசிப்பவர் போலாராம் தாஸ். இந்த வாரக் கடைசியில் இவருக்கு 100வது பிறந்த நாள் வருகிறது. போலாராம் தாஸ் 19 வயது இளைஞனாக இருந்தபோது, 1930&ல் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

அதற்காக 2 மாதம் சிறை தண்டனை பெற்றார். இதன் பின்னர் வணிகவியல், சட்டப்படிப்பு படித்தார். 1945ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1971ம் ஆண்டில் அரசு பதிவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு தாஸ், ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் மாஜிஸ்திரேட்டாகவும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். அவரது மனைவி பெயர் மந்தாகினி. 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிஎச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுவது போலாவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. ஒன்றே மனிதத்துவம், ஒரே கடவுள் என்ற மதங்களின் தத்துவ அடிப்டையிலான நம்பிக்கை மற்றும் ஆர்வம் குறித்து அசாமின் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வை இப்போது செய்து வருகிறார். அதில் பெறப் போகும் பட்டம்தான் தனது 100 ஆண்டு பிறந்த நாள் பரிசு என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் தாஸ்.

தாஸ் பி.எச்.டி. ஆய்வு மாணவராக சேர்ந்துள்ள கவுகாத்தி பல்கலை.யின் துணைவேந்தர் ஓ.கே. மெட்ஹி கூறுகையில், “100 வயதில் ஆய்வு படிப்பை படிக்கும் மாணவரை பார்ப்பது உண்மையில் அரிது. தாசை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அவரது இந்த முயற்சி, தன்னம்பிக்கை, சமுதாய சேவை ஆகியவை இளைய சமுதாயத்துக்கு உத்வேகத்தை அளிக்கும்Ó என்றார்.

ஆதாரம் : http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=18268&id1=12

திங்கள், அக்டோபர் 18, 2010

காமன்வெத் சாதனையார்கள் - 2010





Source : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage

புதன், அக்டோபர் 13, 2010

சச்சின் - டெஸ்ட் அரங்கில் 6 வது முறையாக இரட்டை சதம்

12-10-10, 214 ரன்கள் குவித்த சச்சின், டெஸ்ட் அரங்கில் 6 வது முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சக வீரர் சேவக், இலங்கையின் அட்டபட்டு, ஜெயவர்தனா, பாகிஸ்தானின் மியாண்தத் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். தவிர, அதிக முறை இரட்டை சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 4 வது இடத்தை கைப்பற்றினார்.

டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள்:
வீரர் போட்டி இரட்டை சதம்
பிராட்மேன் (ஆஸி.,) 52 12
லாரா (வெ.இண்டீஸ்) 131 9
ஹம்மண்ட் (இங்கிலாந்து) 85 7
சங்ககரா (இலங்கை) 91 7
சேவக் (இந்தியா) 81 6
அட்டபட்டு (இலங்கை) 90 6
ஜெயவர்தனா (இலங்கை) 113 6
மியாண்தத் (பாக்.,) 124 6
சச்சின் (இந்தியா) 171 6

மகளுக்கு அர்ப்பணம்

பெங்களூரு டெஸ்டில், அடித்த இரட்டை சதத்தை தனது மகள் சாராவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இது குறித்து சச்சின் கூறுகையில்,""இன்று (அக்.12) எனது மகள் சாராவுக்கு 13 வது பிறந்த நாள். இந்த நாளில், நான் அடித்த இரட்டை சதத்தை எனது மகள் சாராவுக்கு பரிசாக அளிக்க விரும்புகிறேன்,'' என்றார்.

ஆதராம் : http://www.dailythanthi.com/article.asp?NewsID=600367&disdate=10/13/2010

திங்கள், அக்டோபர் 11, 2010

சச்சின் 14 ஆயிரம் ரன்கள்: டெஸ்டில் புதிய சாதனை

டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து, புதிய உலக சாதனை படைத்தார் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஹாரிட்ஸ் பந்தை பவுண்டரிக்கு அடித்த சச்சின், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=7275&Value3=I

வியாழன், அக்டோபர் 07, 2010

சச்சினுக்கு இரட்டை ஐ.சி.சி., விருது* சிறந்த டெஸ்ட் வீரர் சேவக்

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். சிறந்த டெஸ்ட் வீரராக சேவக் தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2009, ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 2010, ஆகஸ்ட் 10ம் தேதி வரையிலான காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறந்த வீரர்களை ஓட்டெடுப்பு மூலம் 25 பேர் அடங்கிய குழு தேர்வு செய்தது. நேற்று பெங்களூருவில் நடந்த வண்ணமயமான விழாவில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை சச்சின் பெற்றார்.

முதல் முறை:இவ்விருதுக்கான காலக் கட்டத்தில் சச்சின் 10 டெஸ்ட் போட்டிகளில் 1064 ரன்கள்(81.84 சராசரி) எடுத்துள்ளார். 17 ஒரு நாள் போட்டிகளில் 914 ரன்கள்(65.28 சராசரி) எடுத்துள்ளார். தவிர, குவாலியர் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். இப்படி சிறப்பாக செயல்பட, ஐ.சி.சி., ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை முதல் முறையாக கைப்பற்றினார். இவர், தென் ஆப்ரிக்காவின் ஹஷிம் ஆம்லா, இங்கிலாந்தின் ஸ்வான் மற்றும் சேவக்கை முந்தி இவ்விருதை வென்றார். தவிர, மக்களின் மனம் கவர்ந்த வீரர் விருதையும் பெற்றார்.

கிறிஸ்டன் காரணம்:இது குறித்து சச்சின் கூறுகையில்,""எனது 21வது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஐ.சி.சி., விருதை பெற்றுள்ளேன். இதனை பெற கடினமாக பாடுபட்டுள்ளேன். நாட்டுக்காக விளையாடுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வெற்றிக்கு பயிற்சியாளர் கிறிஸ்டன் முக்கிய காரணம். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திறம்பட செயல்பட, சிறந்த பயிற்சி அளித்தார். வலை பயிற்சியின் போது, அவரே பல முறை பவுலிங் செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனது கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் கனவு. இதற்காக கடினமாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
எனக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய பத்மபூஷன் விருதையும் முதல் ஐ.சி.சி., விருதையும் ஒப்பிட விரும்பவில்லை. ஆனாலும், பத்ம பூஷன் விருது உண்மையிலேயே "ஸ்பெஷல்' கவுரவம்.
இவ்வாறு சச்சின் கூறினார்.

கேப்டன் தோனி:ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை இந்தியாவின் சேவக் பெற்றார். ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் கைப்பற்றினார். ஐ.சி.சி., உலக டெஸ்ட் லெவன் அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், சேவக், சங்ககரா, ஸ்வான், ஆம்லா, கேடிச், ஸ்டைன், காலிஸ், ஆண்டர்சன், போலிஞ்சர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு நாள் போட்டிக்கான உலக லெவன் அணிக்கு கேப்டனாக பாண்டிங் தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் சச்சின், வாட்சன், ஹசி, டிவிலியர்ஸ், தோனி, வெட்டோரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


சிறந்த "டுவென்டி-20' வீரர் விருதை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் பெற்றார். இவர், கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் 56 பந்தில் 116 ரன்கள் விளாசியதை மறக்க முடியாது.


சிறந்த அம்பயர்:வளர்ந்து வரும் வீரருக்கான விருதை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பெற்றார். விளையாட்டு உணர்வை வெளிப்படுத்திய அணிக்கான விருதை நியூசிலாந்து கைப்பற்றியது. சிறந்த அம்பயருக்கான விருதை பாகிஸ்தானின் ஆலீம் தார் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றார். ஆஸ்திரேலியாவின் ஷெல்லி நிட்ச்கே, ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதை கைப்பற்றினார்.



நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=7248&Value3=I

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts