செரி காட்டர்
ஸ்காட்டின் என்பவர் சுயமுன்னேற்றம் பற்றி நிறைய ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அவர்
மனிதராயிருக்க பத்து விதிகள் என கீழ்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்.
ஒன்றாம்
விதி : நீங்கள்
ஒரு உடலைப் பெறுவீர்கள். (நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, வாழ்க்கை முழுவதும் அது
உங்களுடையதுதான். ஆகவே,அதை
ஏற்றுக்கொள்ளுங்கள். உள்ளே இருப்பதுதான் முக்கியம்.)
இரண்டாம்
விதி: உங்களுக்கு
பாடங்கள் கிடைக்கும்
மூன்றாம்
விதி: தவறுகள்
என்பதே கிடையாது. எல்லாமே பாடங்கள்தான்.
நான்காம்
விதி: கற்று
முடியும்வரை பாடங்கள் தொடரும்.
ஐந்தாம்
விதி: கற்றல்
முடிவதில்லை.
ஆறாம்
விதி: இருக்கும்
இடத்தைவிட சிறந்தது எதுவுமில்லை.
ஏழாம்
விதி: பிறர்
உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளே!
எட்டாம்
விதி: உங்கள்
வாழ்க்கையை எப்படி அமைக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.
ஒன்பதாம்
விதி: உங்களுக்கான
பதில்கள் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
பத்தாம்
விதி: இவை
அனைத்தையும் பிறக்கும்போது மறந்துவிடுவீர்கள்.
( நாம்
அனைவரும் இத்தகைய குணங்களோடுதான் பிறக்கிறோம். ஆனால் நமது ஆரம்பகால அனுபவங்கள்
நம்மை நமது ஆன்ம பலத்தை இழக்கச் செய்து பொருளியல் உலகினுள் திருப்பி விடுகின்றன.
நாம் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் கொண்டவர்களாகிறோம்.)