தற்செயலாக இணையத்தில் நீங்கள் பக்கத்தில் காணும் வரைபடத்தை காண
நேரிட்டது. இன்று மார்க்கெட்டில் சூடான கணிணி பாஷை எது? எந்த கணிணி
புரோகிராமிங் மொழி முந்தி செல்கின்றது? எது பிந்துகின்றது என்பவற்றை
இது அழகாய் காட்டுகின்றது. ஜாவா கொஞ்ச நாட்களாகவே
சூப்பர்ஸ்டார் தான்.2005-ல் அதற்கு "பாபா" நேரம் போலும். அவ்வருடம் சி
அதை முந்தி டாப்பிலிருந்தது. எனினும் பீனிக்சாய் எழும்பி அசைக்கமுடியா
கணிணி மொழியாய் ஜாவா இன்று நிற்கின்றதாம். கடந்த வருடம் மூன்றாவது
இடத்திலிருந்த சி++-ஐ ஒரே அடியாய் அடித்து தள்ளிவிட்டு விசுவல்பேசிக்
இந்த வருடம் மூன்றாம் இடத்திற்கு வந்துவிட்டது. ஒரு வரிகூட எழுத
தெரியாவிட்டாலும் என்னமோ எனது அபிமான கணிணிமொழியான பிஎச்பி-
க்கு நாலாவது இடம் தான்.அது ரொம்ப ஏறுவதும் இல்லை.ரொம்ப
இறங்குவதும் இல்லை.ஸ்டெடி பார்டி.அதற்கு அப்புறம் தான் பெர்ல், பைதான்
-லாம் வருகின்றது. நோட்டம் விட்டதில் 100-க்கும் மேல் இது மாதிரி கணிணி
மொழிகள் உள்ளனவாம்.உங்களுக்கும் தெரியட்டுமேன்னு இங்கே
பட்டியலிட்டேன்.அநியாயம் என்னன்னா எனக்கு நன்னா தெரிந்த
கணிணிமொழியான அதன் தாய்மொழியாம் பைனரியை இப்பட்டியலில்
காணோம்.