வியாழன், நவம்பர் 06, 2008

பாடல்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலேஉண்டான காதல் அதிசயம்பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்படர்கின்ற காதல் அதிசயம்(பூவுக்குல்)ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமேஅலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமேமின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமேஉடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்நினைத்தால் நினைத்தால் அதிசயமே(கல்தோன்றி)(பூவுக்குள்)பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமேஉலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமேவான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமேநங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமேஅசையும் வளைவுகள் அதிசயமே
(கல்தோன்றி)(பூவுக்குள்)

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts