வியாழன், டிசம்பர் 31, 2009

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.


நன்றி : http://www.dinakaran.com/healthnew/healthinnerdetail.aspx?id=243&id1=9

வியாழன், டிசம்பர் 17, 2009



Courtesy : http://epaper.dinamani.com/epapermainarchives.aspx?queryed=1&eddate=12%2f16%2f2009#

புதன், டிசம்பர் 09, 2009

ஒரு நாள் போட்டிகளில் மாற்றம்? * 40 ஓவராக குறைப்பு

ஒரு நாள் போட்டிகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. தற்போது உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி., ஆலோசித்து வருகிறது.

கிரிக்கெட்டின் புதிய பரிமாணமான "டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்குப் பின், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வமில்லை. இதனால் புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) உள்ளது. ஒரு நாள் போட்டிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் நோக்கில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி முடிவு செய்துள்ளது. 12 பேர் கொண்ட இக்கமிட்டியின் தலைவராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிளைவ் லாயிட் உள்ளார்.

ஓவர்கள் குறைப்பு: தற்போது நடைமுறையில் உள்ள 50 ஓவர்களை 40 ஆக குறைக்க ஐ.சி.சி., ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் 25 ஓவர் முதல் 40 ஓவர் வரை உள்ள மந்த நிலையை மாற்ற முடியும். தவிர, "டுவென்டி-20' போட்டிகளை போல, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிற்கும் சாதகமான சூழ்நிலை உருவாகும்.

12 ஓவர்கள்: ஒரு நாள் போட்டிகளில் பவுலர்கள் அதிகபட்சமாக 10 ஓவர் மட்டுமே வீச முடியும். இதனை மாற்றம் செய்து, இரண்டு பவுலர்கள் மட்டும் தலா 12 ஓவர்களை வீச அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு பவுலர்களுக்கு தலா 10 ஓவர்களும், ஐந்தாவது பவுலர் 6 ஓவர் மட்டுமே வீச முடியும். இதன் மூலம் திறமையான பவுலர்களை அணியின் கேப்டன்கள் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் 25 ஓவர்களுக்கு ஒரு முறை புதிய பந்தை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி.,கிரிக்கெட் கமிட்டி எடுத்துள்ள இம்முடிவுகள், விரைவில் நடைமுறைப்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.


நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4510&Value3=A

செவ்வாய், டிசம்பர் 08, 2009

"நம்பர்-1" இடத்துக்கு முன்னேறி இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறி இந்திய அணி அசத்தியுள்ளது. இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் வந்த இலங்கை அணியின் சோகம் இந்த முறையும் தொடர்ந்தது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் "டிராவில்' முடிந்தது. இதனையடுத்த கான்பூர் மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
சூப்பர் கேப்டன்:
மீண்டும் ஒரு முறை தன்னை சிறந்த கேப்டனாக நிரூபித்துக் காட்டியுள்ளார் தோனி. 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இவரது தலைமையில் இந்திய அணி "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், 2 சதங்களையும் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
சேவக் அதிரடி:
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நாயகனாக ஜொலித்தார் இந்திய துவக்க வீரர் சேவக். மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல துவக்கம் ஏற்படுத்திக் கொடுத்த இவர், வெற்றியை உறுதி செய்தார். மற்றொரு துவக்க வீரர் காம்பிரின் செயல்பாடும் சிறப்பானதாக அமைந்தது.
அனுபவ அசத்தல்:
இத்தொடரில் இடம் பெற்ற அனுபவ வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமண் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளித்துள்ளனர். காம்பிருக்குப் பதில் மும்பை டெஸ்டில் இடம் பெற்ற தமிழக வீரர் முரளி விஜய் சிறந்த துவக்க வீரராக தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
வேகம் மிரட்டல்:
பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி, பவுலிங்கிலும் மிரட்டியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பிய ஜாகிர், ஸ்ரீசாந்த் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை அளித்தனர். ஹர்பஜன், ஓஜாவின் சுழற் பந்து வீச்சு பக்கபலமாக அமைந்தது. கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு இத்தொடரில் வெற்றியை எட்டிய இந்திய அணி, அடுத்தடுத்த தொடர்களில் வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கலாம்.
இலங்கை சோகம்:
இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் வந்த இலங்கை அணிக்கு சோகமே மிஞ்சியது. தொடரையும் இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தில்ஷன், ஜெயவர்தனா, சங்ககரா ஆகியோர் மட்டுமே ஆறுதல் அளித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமரவீரா சொதப்பினார்.
முரளி ஏமாற்றம்:
முரளிதரனை நம்பி வந்த இலங்கை அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மூன்று போட்டிகளில் பங்கேற்ற இவர், 9 விக்கெட்டுகள் கைப்பற்றினாலும் அணியின் வெற்றிக்கு கைகொடுக்க வில்லை. ஹெராத் (11 விக்.,) ஆறுதல் அளித்தார். வேகப்பந்து வீச்சாளர்களான வலகேதரா, தம்மிகா பிரசாத், குலசேகரா சோபிக்க தவறினர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிய இலங்கை அணி இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்திய அணிக்கு பாராட்டு:
டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக "நம்பர்-1' இடத்தை கைப்பற்றி சாதனை புரிந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, நேற்று லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சபாநாயகர் மீரா குமார் கூறுகையில்,"" டெஸ்ட் அரங்கில் புதிய சாதனையை எட்டி மக்கள் மனதை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் தோனி, சேவக் உள்ளிட்ட வீரர்களுக்கு எனது சார்பிலும் லோக்சபா சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் தொடர்களில் இந்திய அணி வெற்றிகள் குவிக்க வாழ்த்துகிறேன்,''என்றார்.
நாக்பூரில் இந்திய அணி:
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்தியா மற்றும் இலங்கை அணியினர் நேற்று நாக்பூர் வந்தடைந்தனர். இரண்டாவது போட்டி வரும் 12ம் தேதி மொகாலியில் நடக்கிறது.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4507&Value3=I

இந்தியா “நம்பர்-1′: இலங்கையை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு நேற்று பொன்னான நாள். தனது 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ரேங்கிங் பட்டியலில் “நம்பர்-1′ இடம் பெற்று சாதித்தது. இப்பெருமையை பெற மும்பை டெஸ்ட் வெற்றி முக்கிய காரணமாக அமைந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஜாகிர் கான் வேகத்தில் மிரட்ட, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என வென்று, கோப்பையை சூப்பராக கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் “டிரா’ ஆனது. கான்பூர் டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மிக முக்கியமான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 393 ரன்கள் எடுத்தது. பின் சேவக் (293), தோனியின் (100*) அதிரடி ஆட்டம் கைகொடுக்க, இந்தியா 9 விக்கெட்டுக்கு 726 ரன்கள் எடுத்து “டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் 333 ரன்கள் முன்னிலை பெற்றது. இக்கட்டான நிலையில் களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து திணறியது.
ஜாகிர் 5 விக்.,:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரிலேயே ஜாகிர் கான் “ஷாக்’ கொடுத்தார். இவரது வேகத்தில் இலங்கை கேப்டன் சங்ககரா 137 ரன்களுக்கு அவுட்டானார். பின் ஹெராத்(3), குலசேகராவை (19) வெளியேற்றிய ஜாகிர், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசி கட்டத்தில் முரளிதரன் கொஞ்சம் அதிரடி காட்டினார். ஜாகிர் கான் ஓவரில் 3 பவுண்டரி விளாசிய இவர், அதிக நேரம் நீடிக்கவில்லை. ஹர்பஜன் சுழலில் முரளிதரன்(14) சிக்க, இந்திய ரசிகர்கள் <உற்சாகத்தில் மிதந்தனர். இலங்கை அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
முதலிடம்:
இன்று காலை ஆட்டம் துவங்கியதில் இருந்து இலங்கை அணி வெறும் 7.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. இதையடுத்து சுமார் 40 நிமிடங்களில் மகத்தான வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் 124 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. கடந்த 1932ல் லார்ட்சில், இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் இந்தியா விளையாடியது. தற்போது 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று அசத்தியுள்ளது.
முதல் இன்னிங்சில் 293 ரன்கள் விளாசிய இந்தியாவின் சேவக், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் முதலாவது "டுவென்டி-20' போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் நடக்கிறது.
ஸ்கோர் போர்டு:
முதல் இன்னிங்ஸ்
இலங்கை 393
இந்தியா 726/9 (டிக்ளேர்)
இரண்டாவது இன்னிங்ஸ்
இலங்கை
பரணவிதனா எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்ரீசாந்த் 54(144)
தில்ஷன் எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 16(27)
சங்ககரா (கே)தோனி(ப)ஜாகிர் 137(261)
ஜெயவர்தனா(கே)தோனி(ப)ஜாகிர் 12(24)
சமரவீரா(கே)லட்சுமண்(ப)ஜாகிர் 0(13)
மாத்யூஸ்(கே)தோனி(ப)ஓஜா 5(8)
பிரசன்னா எல்.பி.டபிள்யு.,(ப)ஓஜா 32(42)
குலசேகரா (கே)லட்சுமண்(ப)ஜாகிர் 19(68)
ஹெராத்(கே)ஓஜா(ப)ஜாகிர் 3(10)
முரளிதரன்(கே)தோனி(ப)ஹர்பஜன் 14(9)
வலகேதரா-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 17
மொத்தம் (100.4 ஓவரில் ஆல் அவுட்) 309
விக்கெட் வீழ்ச்சி: 1-29(தில்ஷன்), 2-119(பரணவிதனா), 3-135(ஜெயவர்தனா), 4-137(சமரவீரா), 5-144(மாத்யூஸ்), 6-208(பிரசன்னா), 7-278(சங்ககரா). 8-282(ஹெராத்), 9-307(குலசேகரா), 10-309(முரளிதரன்).
பந்து வீச்சு: ஹர்பஜன் 34.4-5-80-2, ஓஜா 23-4-84-2, ஜாகிர் 21-5-72-5, ஸ்ரீசாந்த் 13-4-36-1, சேவக் 9-2-24-0.
——
ஜனாதிபதி பாராட்டு
டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பாராட்டு செய்தியில்,""முதலிடம் பெற தகுதிவாய்ந்த அணியாக திகழ்கிறது. இது இந்திய வீரர்களின் திறமையை பிரதிபலிக்கிறது,'' என குறிப்பிட்டுள்ளார்.

கனவு நனவானது: தோனி
"நம்பர்-1' இடம் பெற்றதன் மூலம் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களாக முதலிடம் பிடிக்கும் நோக்கத்துடன் சிறப்பாக விளையாடினோம். அணியின் கூட்டு முயற்சியால் இலக்கை எட்டியுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் 2 டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க உள்ளோம். இதனால் முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்.

கங்குலி, கும்ளேக்கு பங்கு: கவாஸ்கர்:
முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அணியின் எழுச்சியில் முன்னாள் வீரர்களான கங்குலி, கும்ளேக்கு பங்கு உண்டு. போராடும் குணத்தை இவர்களிடம் இருந்து தான் சக வீரர்கள் கற்று தேர்ந்தனர். முதலிடத்தை தக்க வைக்க வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இது தான் சிறந்த அணி: சச்சின்
முதலிடத்தை பெறுவதற்கு நான் மட்டுமல்ல நாடே காத்திருந்தது. இப்பெருமையை பெறுவதற்கு கடந்த 18 மாதங்களாக வீரர்கள் கடுமையாக உழைத்தனர். கிறிஸ்டன் தவிர நீக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வெங்கடேஷ் பிரசாத்(பவுலிங்), ராபின் சிங்(பீல்டிங்) ஆகியோருக்கும் பங்கு உண்டு. இந்திய சார்பில் இதுவரை பங்கேற்ற அணிகளில் தோனி தலைமையிலான அணி தான் மிகச் சிறந்தது. துவக்க வீரர் முதல் 7வது வீரர் வரை சிறப்பாக பேட் செய்கிறார். அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை.

மறுபரிசீலனை முறை: சங்ககரா
மும்பை டெஸ்டில் அம்பயரின் தவறான தீர்ப்பு காரணமாக இரண்டு முறை தில்ஷன் அவுட்டானார். இது குறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறுகையில்,""சில தவறான முடிவுகளால் 500 ரன் வாய்ப்பு, நிறைய விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு நழுவியது. இதற்கு அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை பின்பற்றப்படாததே காரணம்,'' என்றார். இதே கருத்தை வலியுறுத்திய முரளிதரன் கூறுகையில்,""ஐ.சி.சி., விரைவாக விழித்துக் கொண்டு, அனைத்து போட்டிகளிலும் அம்பயர் மறுபரிசீலனை முறையை அமல்படுத்த வேண்டும்,''என்றார்.
இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,""அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை நூறு சதவீதம் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொரு முறையி<லு<ம் சாதக மற்றும் பாதக அம்சங்கள் இருக்கும். பயன் அடைந்தால் நல்ல முறை என்பர். பாதிக்கப்பட்டால் பழித்துக் கூறுவர்,''என்றார்.

ஹர்பஜன் "50'
நேற்று முரளிதரனை வெளியேற்றிய ஹர்பஜன், டெஸ்ட் அரங்கில் இலங்கைக்கு எதிராக 50வது விக்கெட்டை பெற்ற இரண்டாவது இந்திய வீரரானார். முன்னதாக கும்ளே 74 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

எட்டாவது முறை
நேற்றைய போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சொந்த மண்ணில் எட்டாவது முறையாக இலங்கை அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை ஏமாற்றம்
இதுவரை ஏழு முறை (1982/83, 86/87, 90/91, 93/94, 97/98, 2005/06, 2009/10) இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, 17 டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா 10 போட்டியில் வெற்றி கண்டது. ஏழு போட்டி "டிராவில்' முடிந்தது. இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த இலங்கை அணிக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
* இந்தியா, இலங்கை அணிகள் இந்திய மண்ணில் ஏழு டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. இதில் இந்திய அணி ஐந்து முறை (1986/87, 90/91, 93/94, 2005/06, 09/10) தொடரை வென்றது. இரண்டு முறை தொடர் டிராவில் முடிந்தது.

சேவக் அதிரடி:
இத்தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் இந்திய வீரர் சேவக் முன்னிலை வகிக்கிறார். இவர் மூன்று டெஸ்டில் விளையாடி 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 491 ரன்கள் குவித்துள்ளார். இத்தொடரில் 190 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள்:
இந்தியா:
வீரர் போட்டி சதம்/அரைசதம் ரன்கள்
சேவக் 3 2/1 491
டிராவிட் 3 2/1 433
காம்பிர் 2 2/0 282
தோனி 3 2/0 214
சச்சின் 3 1/1 197
இலங்கை:
ஜெயவர்தனா 3 1/0 373
பிரசன்னா 3 1/0 297
தில்ஷன் 3 2/0 248
சங்ககரா 3 1/0 241
பரனவிதனா 3 0/2 200

ஹர்பஜன் துல்லியம்
இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இந்தியாவின் ஹர்பஜன் சிங் முன்னிலை வகிக்கிறார். இவர் மூன்று டெஸ்டில் விளையாடி அதிகபட்சமாக 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இத்தொடரில் 6 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள்:
இந்தியா
வீரர் போட்டி விக்கெட்
ஹர்பஜன் 3 13
ஜாகிர் 3 10
ஓஜா 2 9
ஸ்ரீசாந்த் 2 8
இலங்கை:
ஹெராத் 3 11
முரளிதரன் 3 9
வெலகேதரா 3 6

நன்றி : தினமலர்



வெள்ளி, டிசம்பர் 04, 2009

சேவக் (284*) 16 ரன் எடுத்தால் உலக சாதனை...

239 பந்து 40 பவுண்டரி 7 சிக்சர் அடித்து நொறுக்கினார் சேவக் (284*) 16 ரன் எடுத்தால் உலக சாதனை...

* டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் (334, 304), லாரா (400*, 375), சேவக் (319, 309) மட்டுமே தலா இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளனர். சேவக் இன்றைய ஆட்டத்தில் 16 ரன் எடுத்தால், 3 முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.

* டெஸ்ட் போட்டிகளில் தனது 17வது சதம், 6வது இரட்டை சதம் விளாசிய சேவக் 6000 ரன்களையும் கடந்தார்.

* 6000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர்கள் வரிசையில் சேவக் 3வது இடம் (123 இன்னிங்ஸ்) பிடித்தார். கவாஸ்கர் 117 இன்னிங்சிலும், சச்சின் 120 இன்னிங்சிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

* இலங்கைக்கு எதிராக சேவக் அடித்த 2வது இரட்டை சதம் இது. கடந்த ஆண்டு காலேவில் நடந்த டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 201 ரன் விளாசியிருந்தார்.

* இந்தியா ஒரே நாளில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகவும் (443/1) இது அமைந்தது. கான்பூர் டெஸ்டில் 417 ரன் எடுத்த சாதனை நேற்று தகர்ந்தது.

* அதிவேக இரட்டை சதங்களில் 2வது இடம் (168 பந்து)

நன்றி : http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts