திங்கள், டிசம்பர் 30, 2013

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும் ?

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும் ? 1. வருமானம் 2. ஒத்துழைப்பு 3. மனித நேயம் 4. பொழுதுபோக்கு 5. ரசனை 6. ஆரோக்கியம் 7. மனப்பக்குவம் 8. சேமிப்பு 9. கூட்டு முயற்சி 10.குழந்தைகள் கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன? 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். 14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். 16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். 17. ஒளிவு மறைவு கூடாது. 18. மனைவியை நம்ப வேண்டும். 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும். 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது. 21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும். 22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும். 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும். 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது. 27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். 29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும். 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும். 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும். 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும். 34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது. 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும். மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். 2. காலையில் முன் எழுந்திருத்தல். 3. எப்போதும் சிரித்த முகம். 4. நேரம் பாராது உபசரித்தல். 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது. 8. அதிகாரம் பணணக் கூடாது. 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது. 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும். 11. கணவனை சந்தேகப்படக் கூடாது. 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது. 13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும். 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது. 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும். 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும். 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது. 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும். 20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும். 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும். 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும். 24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும். 25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும். 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது. 27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும். 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும். 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது. 32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது? பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள். 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள். 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம். 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல். 4. விரும்பியதைப் பெற இயலாமை. 5. ஒருவரையொருவர் நம்பாமை. 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை. 7. உலலாசப் பயணம் போக இயாலாமை. 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை. 9. விருந்தினர் குறைவு. 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல். 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை. 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு. 13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல். 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு. பத்து கட்டளைகள்: 1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள். 2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள். 3.இன்சொல் கூறுங்கள். ‘நான்’, ‘எனது’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள். 4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள். 5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள். 6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள். 7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள். 8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். 9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள். 10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள். வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம். https://www.facebook.com/gurutamilnews

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts