சனி, மார்ச் 09, 2013

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கான சில எச்சரிக்கைகள்



# லென்ஸ்களை உரிய திரவத்தில்தான் சுத்தப்படுத்த வேண்டும். குழாய்த் தண்ணீரில் கழுவக் கூடாது. நீந்தும்போதோ, குளியல் தொட்டியில் குளிக்கும்போதோ, ஷவரில் நனையும்போதோ லென்ஸைக் கழற்றிவிடவும்.
# தொடர்ந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவைப்படும்போது லென்ஸை மருத்துவரின் பரிந்துரைப்படி மாற்ற வேண்டும். கண்ணில் நீர் படும்படியான எந்தச் சூழலிலும் லென்ஸை அகற்றிவிடவும்.
# கண்ணில் லென்ஸைப் பொருத்துவதற்கு முன்னர் கைகளை நன்கு சோப் போட்டுக் கழுவவும். பிறகு சுத்தமாக ஈரம் போகத் துடைத்த பிறகே லென்ஸைத் தொடவும்.
# ஒவ்வொரு முறையும் லென்ஸைக் கழுவும் திரவம் புதிதாக இருக்கட்டும்.
# உப்பு நீரால் ஒருபோதும் லென்ஸைக் கழுவாதீர்கள்.
# லென்ஸைப் பாதுகாக்கும் குடுவையை உரிய திரவத்தில் முறையாகக் கழுவவும்.
# எட்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாக அணியக் கூடாது. இடையிடையே ஓய்வு அளிக்க வேண்டும். தூங்கும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
# பார்வை மங்கலானாலோ, வலி ஏற்பட்டாலோ, வீக்கம் அல்லது எரிச்சல் இருந்தாலோ, உடனடியாகக் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
# புகை மண்டிய இடங்களைத் தவிருங்கள்.
புதிதாக லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டியவை
# உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.
# அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
# முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.
# மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.
# லென்ஸ் தவறி விழுந்தாலும் கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
# நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.
# கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
# லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது.

ஆதாரம் & நன்றி : http://tech.lankasri.com/view.php?203609F220eZnBd34eaSmOln4cbdQWAAcddceUMQAdbc4RlOmae43dBnZ3e023F90602

வியாழன், பிப்ரவரி 21, 2013

ஏன் உறங்குகிறோம் தெரியுமா உங்களுக்கு?

தினமும் உறங்குகிறோம், விடுமுறை நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் உறங்கி மகிழ்கிறோம். உறங்குவது என்பது ஆனந்தமான விடயம் தான். ஆனால் நாம் ஏன் உறங்குகிறோம் என்று தெரியுமா? உறக்கம் நமக்கு ஏன் அவசியம் தெரியுமா?    
இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரிய வேண்டும் என்றால் ‘ஸ்லீப் பார் கிட்ஸ்’ இணையதளம் பக்கம் போய் பார்க்கலாம்.

தூங்குவது மிகவும் முக்கியமானது என்று சொல்லும் இந்த தளம் தூக்கம் தொடர்பான விடயங்களை சிறுவர்களுக்கு புரிய வைப்பதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது.

சின்ன பூச்சி முதல் பெரிய திமிங்கிலம் வரை எல்லா உயிரினங்களும் தூங்குகின்றன, ஒரு சில விலங்குகள் தினமும் 20 மணி நேரம் கூட தூங்குகின்றன என்று சொல்லும் இந்த தளம் நாம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தூக்கம் அவசியம் என்கிறது.

இந்த அறிமுக குறிப்புகளோடு தூக்கம் பற்றி அறிந்து கொள்ள வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் தூக்கம் பற்றி வரிசையாக கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை தருகிறது.

நாம் ஏன் தூங்கிறோம்? என்பது தான் முதல் கேள்வி!.

படித்ததை நினைவில் வைத்து கொள்ளவும், பாடத்தில் கவனம் செலுத்தவும், பிரச்ச்னைகளுக்கு தீர்வு கண்டு புதியவை பற்றி யோசிக்கவும் மூளைக்கு ஓய்வு தேவை என்பதாலும், தசைகளும் எலும்புகளும் வளரவும் அவற்றின் காயங்கள் ஆறவும் உடல் ஆரோக்கியத்தோடு இருந்து உடல்நலக்குறைவை எதிர் கொள்ளவும் உடலுக்கு ஓய்வு தேவை என்பதாலும் தூங்குகிறோம் என்று இந்த கேள்விக்கு வரிசையாக பதில் அளிக்கிற‌து.

அடுத்த கேள்வி, தூக்கத்தின் போது என்ன நடக்கிறது?

இதற்கு முதலில் தூக்கத்தின் சுழற்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறது. ஆம் தூக்கம் என்ப‌து ஐந்து கட்டங்க‌ளை கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டமும் 90 நிமிடங்கள் கொண்டது.

முதல் இரண்டு கட்டத்தில் தூக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆழமான தூக்கமாக அது இருப்பதில்லை.

மூன்றாவது மற்றும் நான்காவது கட்டத்தில் ஆழமான தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறோம். இதயத்துடிப்பும் சுவாசமும் சீராகி உடலும் ஓய்வில் ஆழ்கிறது.

ஐந்தாவது கட்டத்தில் மூளை விழித்து கொண்டு கனவுகள் வருகின்றன. இந்த சுழற்சியானது ஒவ்வொரு முறை தூங்கும் போதும் ஐந்து அல்லது ஆறு முறை மீண்டும் மீண்டும் நிகழ்கின்ற‌ன.

எல்லாம் சரி நாம் ஏன் இரவில் தூங்கிறோம்? இந்த கேள்விக்கும் இதே பகுதியில் பதில் இருக்கிறது!

ஒளி தான் எப்போது தூங்க வேண்டும் எப்போது விழித்திருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது. காலையில் கண் விழித்ததும் சூரிய ஒளி விழிக்க வேண்டிய நேரம் என்பதை மூளைக்கு உணர்த்தி விடுகிறது.
பின்னர் பகல் மாறி இரவு வரும் போது மூளையில் மெலாடோனின் என்னும் ரசாயனம் சுரந்து கண்களை தூக்கம் தவழச்செய்கிற‌து.
சிறுவர்களை பொறுத்த வரை பத்து முதல் பதினோறு மணி நேரம் தூக்கம் தேவை என்கின்றனர். அப்போது தான் பள்ளியில் பாடத்தில் கவனம் செலுத்த முடியும்.
ஆரோக்கியமாக இருக்க முடியும், புதிதாக‌ யோசிக்க முடியும், இல்லை என்றால் படித்ததெல்லாம் மறந்து போகும், சரியாக முடிவெடுக்க முடியாது, குழப்பமாக இருக்கும், சொன்னதை கேட்க முடியாது.
இப்படி தூக்கத்தின் அவசியத்தை சொல்லும் இந்த தளம் நீங்கள் சரியாக தூங்குகீறிர்களா என்று அறிந்து கொள்வதற்காக தூக்கத்திற்கான டைரியை உருவாக்கி கொள்ளவும் உதவுகிறது. தூக்கத்தை கணக்கிடுவதற்கான கால்குலேட்டரும் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்படியே நன்றாக தூங்குவதற்கான வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. தூங்க முடியாமல் தவித்தால் என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் இடம் பெற்றுள்ள‌ன.
கனவுகள் இல்லாமல் தூக்கம் உண்டா என்ன? கனவுகள் பற்றிய விளக்கமும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. தூக்கம் பற்றி தெரிந்து கொள்ள உதவும் இந்த தளம் தூக்கம் தொடர்பான புதிர்களும் விளையாட்டுகளும் இருக்கின்ற‌ன.
ஆக இந்த தளத்தின் மூலமாக தூக்கத்தை நன்றாக புரிந்து கொண்டு சுறுசுறுப்பாக இருக்கலாம்.

ஆதாரம் & நன்றி : http://tech.lankasri.com/view.php?222009F220eZnBB34eeUOOlnccbdQWAAcdddeKMMCbbc4llOmae44dBnn20023990602

திங்கள், ஜனவரி 21, 2013

வீரம்

ஆதாரம் & நன்றி : தங்க மலர் (18-01-2013 பக்கம் : 11, தின தந்தி)

புதன், டிசம்பர் 12, 2012

12-12-12, 12:12:12

Frds, 2dy date is 12-12-12, 12:12:12 as a special one in our Life never c & never before, ve precious day-Pojaraj

செவ்வாய், நவம்பர் 27, 2012

நிலவேம்பு [Nilavembu]

நிலவேம்பு

கசப்புச் சுவையுடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும் உடைய சிறுசெடி இனமாகும். கொப்பும் கிளையுமாக 2 1/2 அடி வரை வளரும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. காய்ச்சலைப் போக்கவும், பசி உண்டாக்கவும் தாதுவைப் பலப்படுத்தவும், முறை நோயைப் போக்கும் குணமும் உடையது. எல்லா மண்ணிலும் தானாகவே வளரக்கூடியது.




வேறு பெயர்கள்: சாகண்ட தித்தம், நித்தார கோசா, கிராதித்தம், கிரார்த்தம், பூ நிம்பர், சாரி தீர்த்தம், கயிராதோ, லேமசனம், சிலேத்து மாதி சோபாக்னி.

ஆங்கிலப் பெயர் : Andrograpis paniculata, Nees

Sanskrit Name:Kalmegh, Bhunimba
Assamese: Chiorta
Arabic: Quasabhuva
Marathi: kadu kirayata,Oli-kiryata
Bengali: Kālmegh (কালমেঘ)
Oriya: ଭୂଇଁନିମ୍ବ (Bhuinimba)
Chinese: Chuan Xin Lian (穿心蓮)
English: Green chirayta, creat, king of bitters, andrographis, India echinacea
Persian: Naine-havandi
Gujarati: Kariyatu
Sanskrit: Kālamegha (कालमेघ), Bhūnimba (भूनिम्ब)[2]
Hindi: Kirayat

Tamil: Nilavembu, Sirunangai, Siriyanangai (நிலவேம்பு)

Kannada: Nelabevu
Malayalam: NilavEpp (നിലവേപ്പ്) , Kiriyathth (കിരിയത്ത്)
Telugu: Nelavemu (నేలవేము) or Nelavepa
Malayasian: Hempedu Bumi
Indonesian: Sambiloto
Thai: Fa Thalai Chon (ฟ้าทะลายโจร), literally meaning 'the heavens strike the thieves'
Lao: La-Sa-Bee
Sinhalese: Hīn Kohomba / Heen Kohomba (හීන් කොහොඹ), හීන් බිම් කොහොඹ

மருத்துவக் குணங்கள்:
நில வேம்பு இலை, கண்டங்கத்திரி வேல் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து, சுக்கு 10 கிராம், சேர்த்து அரைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர, மலேரியா காய்ச்சல் குணமாகும்.

நிலவேம்பு இலையுடன், குப்பை மேனி, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பசும் பாலிலோ அல்லது ஆட்டுப் பாலிலோ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மஞ்சள் காமாலை குணமாகும்.
நில வேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்திக்கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவாக மூன்று வேளை குடித்து வர, குழந்தைகளுக்கு வருகின்ற எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.


Courtesy : http://bsubra.wordpress.com/2007/07/19/mooligai-corner-herbs-naturotherapy-manathakkali-nilavembu/

புதன், அக்டோபர் 10, 2012

ஔவையார் [Avvaiyar]


The Avvaiyars (Tamil: ஔவையார்) "respectable women" was the title of more than one poet who was active during different periods of Tamil literature. The Avvaiyar were some of the most famous and important female poets of the Tamil canon. Abithana Chintamani states that there were three female poets titled Avvaiyar.

Among them, Avvaiyar I lived during the Sangam period (c. 1st and 2nd century CE) and had cordial relation with the Tamil chieftains Paari and Athiyaman. She wrote 59 poems in the Puṟanāṉūṟu.

Avvaiyar II lived during the period of Kambar and Ottakoothar during the reign of the Chola dynasty in the 13th century. She is often imagined as an old and intelligent ...

ஔவையார் ஆத்திசூடி [Avvaiyar Aathichoodi]

உயிர் வருக்கம்ஆத்திசூடிEnglish translation
அறம் செய விரும்புDesire doing righteous deeds
ஆறுவது சினம்Calm your anger
இயல்வது கரவேல்Help others in whatever ways you can
ஈவது விலக்கேல்Never stop being charitable
உடையது விளம்பேல்Never proclaim/boast about what you have
ஊக்கமது கைவிடேல்Never give up hope
எண் எழுத்து இகழேல்Don't despise learning
ஏற்பது இகழ்ச்சிAccepting alms (begging) is despicable
ஐயமிட்டு உண்Share food with others (to the needy)
ஒப்புர வொழுகுAct virtuously
ஓதுவது ஒழியேல்Never give up learning
ஒளஒளவியம் பேசேல்Never talk jealous words
அஃகஞ் சுருக்கேல்Never cheat on grains (Food)

வியாழன், செப்டம்பர் 20, 2012

வாழ்வில் வெற்றிபெற தியானம் செய்!!

அனைவரும் வாழ்வில் வெற்றிபெற பலவகையில்  முயற்சி  செய்து கொண்டு  தான் இருக்கின்றோம். அவ்வாறு நாம் வெற்றிப்பெற  தியானம்  நமக்கு பெரிதும் துணைப் புரிகின்றது. தியானம் எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

எப்படி தியானம் செய்வது?

முக்கியமாக மூன்று விஷயங்களில் கவனமாக இருந்தால் நாம் செய்யும் தியானமானது நிச்சயம் எளிதில் கைகூடும். இதிலும் நமது பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்.

01.தியானம் செய்ய நமக்கு தேவையானது உடலிலும், உள்ளத்திலும் தூய்மையான  எண்ணம் இருக்க வேண்டும்.

02.தியானமானது எளிதில் கிடைக்ககூடிய விஷயமில்லை எனவே பொறுமை மிகவும் அவசியம், அதனை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது.

03.தியானத்தை ஒருபோதும் சோம்பலின் காரணமாக கைவிடுதல் கூடாது. விடாமுயற்சியுடன் தொடரவேண்டும். நல்ல காலத்திலும், கெட்ட காலத்திலும்,உடல் நலமாக இருக்கும் போதும்,உடல் நலமில்லாத போதும் தியானத்தை மட்டும் தவறவிடக்கூடாது.

04.நாம் தியானம் செய்ய மிகச் சிறந்த காலம், பகலும், இரவும் ஒன்றுகூடும் அந்திவேளை. இந்த வேளையில்தான்  நமது உடலின் அலைகள்  அமைதியாகவும்  ஆழமாகவும் இருக்கும். எனவே இவ்வேளையில் தியானம் செய்வது முழுமையாக நமக்கு உதவும்.

05.தியானம் செய்ய ஒரு பாய் மற்றும் சுத்தமான ஒரு துணி ஆகியவற்றை சுத்தமான தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொண்டு தியானம் செய்யவேண்டும். நிமிர்ந்து முதுகினை சாய்க்காமல் மற்றும் எதன் மீதும் சாயாமல் தியானிப்பது சிறந்தது.

06.தியானம் செய்யும் போது தலையும், தோள்களும், இடுப்பும் நேர்க் கோட்டில்  இருக்குமாறு நிமிர்ந்து உட்கார வேண்டும்.அதே சமயம் முதுகெலும்பைத் தளர்ந்த நிலையிலே வைத்திருக்க வேண்டும். எந்த பொழுதும் முதுகெலும்பின் மீது தேவையில்லாத பாரத்தினையும், அழுத்தத்தினையும் தரக்கூடாது.

07.நம்மை நாம் முழுமையாக உணர்தல் வேண்டும்.நமது கால் விரல்களில் இருந்து தொடங்கி,உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் முழுமையாக உள்ளதாக நினையுங்கள். இவ்வாறு ஒவ்வொரு பகுதியும் முழுமையானதாகவும்,எந்த குறையும் இல்லாததாகவும் நினைத்து தலை பகுதி வரை மேலேற வேண்டும். பின்பு முழு உடலும் முழுமையாக உள்ளதாக நினைத்துக் கொள்ளவேண்டும்.

08. இவ்வாறு செய்து முடித்த பிறகு இரு நாசிகள் (மூக்கின் துவாரம்) வழியாக மூச்சை நீளமாக உள்ளிழுத்து பின் அதை வெளியே விடவேண்டும். மூச்சு வெளியேறியவுடன் உடல்தாங்கும் வரை மூச்சை உள்ளிழுக்காமல் வெளியே நிறுத்தி வைக்கவேண்டும். இவ்வாறு நான்கு முறை மூச்சு பயிற்சி செய்யவேண்டும்.

09.இதன் பின் மனதுக்கு அமைதி தரும் பிரார்த்தனை செய்யவேண்டும். இந்த 'மகா உலகத்தை படைத்த பரம்பொருளின் மகிமையினை எண்ணிக்கொண்டு அந்த பரம்பொருள் என்னை ஒளிரச் செய்வார்' என பலமுறை கூறியப்படியே பதினைந்து நிமிடங்கள் தியானிக்கவேண்டும்.

10. நமது மனதினை நம்முன் விரிந்து கிடக்கும் அமைதியான ஒரு நீர்ப் பரப்பாகவும், வந்துபோகும் எண்ணங்கள் அதில் தோன்றும்  நீர்க்குமிழியாகவும்  கற்பனை செய்துக்கொள்ளவேண்டும். எப்பொழுதும் எண்ணங்களை அடக்கிக்கொள்ள கூடாது. அவை தானாகவே எழும்பி அடங்கக்கூடியது.

இறுதியாக 'நான் மனம் அல்ல, நான் சிந்திப்பதை நானே உணர்கிறேன். என்மனம் செயல்படுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்' என்ற உயர்ந்த கருத்தினை நாம் பற்றிக்கொண்டால் இறுதியில் மனம்வேறு, நாம் வேறு என்பதை உணரமுடியும்.

இந்த நிலையினை நாம் அடைந்துவிட்டால், மனமானது நம்முடைய  வசம் வந்துவிடும்.  இந்த நிலையினை நாம் எட்டிவிட்டால் நாம் விரும்பும் எதனையும் நம் வசமாக்கிகொள்ளலாம்.

இதன் மூலம் நாம் விரும்பும் அனைத்தையும் வெற்றிக் கொள்ளலாம். வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் நல்ல சிந்தனையையும்  இந்த உலகிற்கு தரமுடியும்.

அனைவரும் தியானத்தை சிறுபொழுது என்றாலும் விடாமல் செய்து வாழ்வில் வெற்றிபெற வேண்டுகின்றேன்.
மூலம் & நன்றி : http://arivu-kadal.blogspot.in/2012/07/blog-post_20.html

புதன், செப்டம்பர் 12, 2012

தமிழர்களின் அறிவியல்..!

பிறப்பும் வாழ்வும்

“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”
- திருமந்திரம் – 725

இதே போல இந்த உடம்பினுள் 96 வேதியியல் தொழில்கள் அல்லது செயல்பாடுகள் நடக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். அதாவது இந்த உடம்பும் உள்ளமும் இதனுள் இயங்குகிற உயிரும் ஆரோக்கியமாக செயல் புரியும்போது இந்த 96 செயல்களும் பிசகின்றி சீராக இயங்குகின்றன.

“முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்ப மதிளுடையக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடையக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஒட்டெடுத் தார்களே!”

தமிழ் சித்தர்கள் பழங்காலத்திலேயே உடல், உயிர் என்ற இரண்டிலும் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்கள். அந்த தெளிவில்தான் மானுடம் மேம்படச் சிந்தனைத்திறனை அறிவியல் பார்வையோடு சித்தர் இலக்கியத்தின் மூலம் இன்றும் வியந்து நிற்கிற வகையில் காட்டியிருக்கிறார்கள்.

உழவு:
கரும்பு தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகவும் இருந்திருக்கிறது. திருவிழாக் காலங்களில் வீடுகளை வாழை மரத்தாலும், கரும்புக் கழிகளாலும் (தோகையோடு கூடிய கரும்பு) கட்டி அலங்காரம் செய்தார்கள். வெல்லம், சர்க்கரை விற்ற வணிகருக்கு பணித வாணிகர் என்பதே பெயர். பணித வாணிகள் நெடு மூலன் என்ற பெயரை மதுரைக்கருகில் இருக்கிற குகையொன்றில் பிராமி எழுத்தின் அமைப்பில் கண்டுபிடித்தனர் ஆய்வாளர்கள். இது கி.மு 2200 ஆண்டுகளுக்கு முந்தியது என கடைச்சங்கச் செய்தி தெரிவிக்கிறது. அப்படியாயின் அதற்கு முன்பே தமிழர்களுக்கு கரும்பு பயிர் செய்கையும், கரும்பிலிருந்து வெல்லம், சர்க்கரை எடுக்கிற தொழில் நுட்பமும் தெரிந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் ஐரோப்பியர் களுக்குக் கரும்பு தெரியாது. கி.பி.15ஆம் நூற்றாண்டில் தான் கரும்பும் வெல்லமும் மேலை நாட்டினருக்குத் தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் அவர்கள் சீனியை கொண்டு வந்தார்கள்.

“ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன்காப்பு” (குறள் 1038)

இன்றைக்கு விஞ்ஞானம் விரிவடைந்தாலும் இன்றும் இதே ஐந்து கோணங்களில்தான் விவசாயம் நடக்கிறது. மேலும் சாதாரண பழமொழிகளில் கூட விவசாய அறிவியலை வைத்திருக்கிறான். இதற்கேற்ப ஏறக்குறைய 20 பழமொழிகளை எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

உடை:

“உடுக்கைக் இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு” (குறள் 788)

இன்றைக்கு ஆங்கிலப் பெயரோடு பயன்படுத்தப்படுகின்ற உள் மற்றும் வெளி ஆடைகளுக்கானத் தமிழ்ப் பெயர்களில் தனித்துவமும் இருக்கின்றன. அவற்றைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.

பெண்களின் உடை: பிரா - கச்சு, மிடி - வட்டுடை, ஜாக்கெட் - வடகம்,
(வடகத்தோடு உருத்ததூசும் - கம்ப ராமாயணம்)
பெட்டிகோட் - பாவாடை, சல்வார்கமீஸ் - தழை,
மினி - சிதர், சுவிம்மிங் டிரஸ் - புட்டகம், (நீந்துடை - புட்டகம் பொருந்துவ புனைவாதுரும் - பரிபாடல்) கவுன் - கொய்யகம், ஜட்டி - அரணம், நைட்டி - இரவணி, டூபீஸ் - ஈரணி, வெட்டிங்டிரஸ் - கூறை.

ஆண்களின் உடை: பனியன் - குப்பாயம்
(துதி மயிர்த்துகில் குப்பாயம் - சீவகசிந்தாமணி) பேண்ட் - கச்சம், டை - கிழி,
பெல்ட் - வார், சட்டை - மெய்ப்பை.

ஆசிரியர் மற்றோர் இடத்தில்...
“அதே நேரத்தில் வேட்டியை ‘வேஷ்டி’ என்றும்,
சேலையை சாரி என்றும் பேசுவதும்,
எழுதுவதும் மொழியே இல்லாதவர்களின்
வேலையாகும்” எனச் சாடுகிறார்.

உணவு :
‘உணவு மனிதனுக்கு அவசியமானது. அது உடல் வலிமை பெறவளர்ச்சியுற இன்றியமையாதது. அதனால்தான் புறநானூறு என்ற பழந்தமிழ் நூலில்,

‘‘நீரின்றி யமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புற-18; 17-20)

எனச் சொல்லப்பட்டது. உண்டி கொடுத்தோரை (உணவு) உயிர் கொடுத்தவர் என்பதே அப்பாடல்.

குறிஞ்சி நிலம்: தேன், தினைமா, கிழங்கு, பறவைகள், ஊன் வேட்டையில் கிடைத்த உணவுகள். முல்லை நிலம்: சோளம், கேழ்வரகு, நெய், தயிர், வெண்ணெய், மோர், அவரை, துவரை

மருத நிலம் : பல்வகைச் சோறு, காய்கறிகள்

நெய்தல் நிலம்: மீன், நண்டு, இறால், கணவாய், காய்ந்த மீன் (கருவாடு), நெய் கலந்த ஊன், வறுத்த ஊன், சுட்டமான், பால்சோறு, நெய்சோறு என அறுசுவை உணவையும் உண்டனர். இதுபோக ஈழத்துணவும் வந்ததாகப் பட்டினப்பாலைபகர்கிறது.

இதிலிருந்து இரு செய்திகள் தெரிகின்றன. ஒன்று உணவு வகைகள் சங்க காலத்தில் இறக்குமதியாகி இருக்கின்றன. இன்னொன்று ஈழத்திலிருந்து தமிழர்களே தமிழர்களுக்கு உணவு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும்.

இலக்கியம்:
ஒரு பிரெஞ்சு பேராசிரியரிடம் ‘எது இலக்கியம்’ என்று கேட்டபோது வந்தபதில்: ‘‘நாட்டை, மொழியை, மக்களை முன்னே வைத்து செய்யப் பெறும் எழுத்துக்களே தலைசிறந்த இலக்கியங்கள்’’ என்பதே. தமிழில் தமிழை, மனிதர்களை உயர்த்தும் இலக்கியங்களே அதிகமாக இருக்கின்றன. ஆகவேதான் அதன் ஆளுமை இன்றைய விஞ்ஞான எந்திர வாழ்விலும் ஊடுறுவ முடிகிறது.
ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கிய நூல்கள் முதன்முதலில் அச்சேறிய வரலாற்றைக் குறிப்பிட்டு இருக்கிறார். ‘திருக்குறள் மூலபாடம்’ எனும் தலைப்பில் முதன்முதலில் கி.பி.1812இல் அச்சான திருக்குறள் பற்றியும், அதன் முகப்பு அட்டை, கடவுள் வாழ்த்துப் பகுதி இவைகளை படத்துடனும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
வாசிப்பு மனிதனை பூரணமாக்கும். மேலைநாட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல் படிக்கிறார்கள். நூல் படிக்கப் படிக்க அறிவின் வேல் கூர்மையாகும். அந்த அறிவைப் பெறுவதற்குத் தாய்மொழி தமிழ் மிகமிகஅவசியமாகும்.
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அந்நூலின் முன்னுரையில்

‘வழக்கொழிந்து மாண்டு போன மொழிகளாலும், பயன்மிக உள்ளது. சாம்பலின் தலைபோல் அவற்றின் தன்மை வாழ்கின்றது. ஆயினும், இன்றும் வாழும் பண்டைய மொழிகளே சிறப்பு உடையன. வைரம் பாய்ந்த அம்மரங்களிலிருந்து பூக்க இருக்கும் கனிகள் எத்தனையோ! எனவே, தமிழர்கள் தங்கள் மொழி குறித்துக் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையினை ஒழிக்க வேண்டும்.’

தமிழிசை:
"12ஆம் நூற்றாண்டு முதல் தோன்றிய சமஸ்கிருத சங்கீத நூல்கள் சங்கீதத்திற்கு இலக்கணம் கூற முயன்றாலும் பழக்கத்தில் உள்ள இசை மரபிற்கும் இவர் கள் கற்பித்த இலக்கணத்திற்கும் தொடர்பின்றி இசை உலகில் பெரும் குழப்பங்கள் உண்டு பண்ணி வந்துள்ளன. ஆகவே, இசையின் அடிப்படை இலக்கணத்தை நாடி நம் தமிழிசையின் பிறப்பிடத்திற்குச் செல்ல வேண்டியவர்கள் ஆகிறோம்'' என்று இசைப் பேரரசி டாக்டர் சேலம் எஸ். விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இவரின் கருத்தை உறுதி செய்வதுபோல் இசைப்பேரறிஞர் வா.சு.கோமதிசங்கரய்யர் ‘இசைத்தமிழ் இலக்கண விளக்கம்’ எனும் நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற தமிழ்நாட்டுப் பண்களின் சிறப்பை உணர்ந்த வடநாட்டு பண்டிதர் ஒருவர் முப்பத்தாறு பண்களையும் எடுத்து அவற்றிற்கு வட மொழிப்பெயரை இட்டுப் பரப்பி உள்ளார். ஆனால் ஒன்பது நிறங்களின் (இராகங்கள்) பெயர்களை மாற்றாமல் விட்டமையால் அவைகள் தமிழில் இருப்பதே, அவை தமிழிலிருந்து பெயர்ந்தது என்பது உறுதியாகிறது.

தாவரவியல்:
‘‘ஒன்று அறிவதுவே உற்று அறிவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.’’
(தொல்காப்பியம் - பொருள் - 1526)


தாவரங்கள் உயிருள்ளவை என்றும், அவற்றுக்கு ஓர் அறிவே உள்ளது என்றும் முன்னோடியாகத்தான் கண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தாவரங்களுக்கு பல்வேறு வகையான காரணப்பெயர்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் மரம், செடி, கொடி, புல்,
பூண்டு என்பன அடங்கும். இவற்றையும் தமிழனின் தாவர விஞ்ஞானம் காரணத்தோடு அறிவியல் பார்வையில் வகைப்படுத்துகிறது. ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை இலையாகாமல் ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது. அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை’ என்றாகின்றது. தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப்படுகின்றன. இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது.

மண்ணியல்:
மண்ணைக்கூடப் பழந்தமிழ் மக்கள்
1. ஆற்றுமண்,
2. சேற்றுமண்,
3. காட்டுமண்,
4. உதிரிமண்,
5.மலை மண்,
6. குளத்துமண்
என வகைப்படுத்தினார்கள்.
இது தொடர்பாக வேறொரு செய்தியும் உண்டு. கோயில் கட்டப்படும் நிலத்தை நன்கு உழுது அதில் நவதானியம் விதைக்க வேண்டும். அந்த விதை மூன்று நாட்களில் முளைத்தால் அது நல்ல நிலம்; ஐந்து நாட்களில் முளைத்தால் ஏறக்குறைய நல்ல பூமி; எட்டு நாட்களுக்குப் பிறகு முளைத்தால் அது மட்டமான பூமி.

நன்றி : Sivakumar

சனி, செப்டம்பர் 08, 2012

கான்டக்ட் லென்ஸ்சினால் கண்கள் குருடாகும் அபாயம்

தற்போது லட்சக்கணக்கான மக்கள் கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அகாந்தாமோபோ என்ற நுண்ணுயிர் பாக்ட்டீரியா தாக்குதலால் கண் பார்வை பாதித்து குருடாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாக்ட்டீரியா, தூசி மற்றும் கடல் நீர், நீச்சல் குளம் போன்றவற்றில் உள்ள தண்ணீரின் மூலம் பரவுகிறது. கான்டக்ட் லென்ஸ் மூலம் இந்த கிருமி கண்களுக்குள் மிக எளிதாக புகுந்து விடுகிறது.
அந்த லென்ஸ்சில் படிந்திருக்கும் இக்கிருமி கண், வெண் படலத்துக்குள் சென்று அதை தின்று விடும். மேலும் அங்கு தங்கி தனது இனப் பெருக்கத்தை மேற்கொள்கிறது. இந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நமைச்சல் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும்.
கண்களில் இருந்து நீர் வடியும். சிறிது சிறிதாக பார்வை மங்கும், கண்ணின் மேல் இமையில் வீக்கம் ஏற்படும். கடுமையாக வலி ஏற்படும். இந்த நோய் முற்றிய நிலையில் சில வாரங்களில் கண் பார்வை முற்றிலும் இழந்து குருட்டு தன்மை ஏற்படும்.
இவற்றை குணப்படுத்த கண் சொட்டு மருந்துகளை 20 நிமிடத்துக்கு ஒரு முறை என 3 வாரத்திற்கு போட்டு வரவேண்டும். இந்த நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கண்வெண் படலம் மாற்று ஆபரேசன் செய்து கொள்ளலாம்.
மூலம் : http://www.maalaimalar.com/2012/09/08141938/contact-lens-fault-to-eyes.html

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

அதிகமாக கோபப்படுபவர்களுக்காக

இந்த உலகில் கோபப்படாமல் இருப்பவர்களை பார்க்கவே முடியாது. அனைவருக்குமே கோபம் என்னும் குணம் இருக்கும்.
ஆனால் சிலருக்கு கோபம் வந்தால் என்ன செய்வதென்றே தெரியாது. அந்த நேரத்தில் அவர்கள் கட்டுப்பாடின்றி வாய்க்கு வந்தவாறெல்லாம் பேசிவிடுவர்.
அந்த வார்த்தைகள் அனைத்தும் மிகவும் கடுமையானதாக இருக்கும். பின்னர் என்ன தான் தவறு என்று பின்னர் நினைத்து, மன்னிப்பு கேட்டாலும் அது பயனற்றதாக இருக்கும். மேலும் உடலில் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, வராத வியாதிகளைக் கூட வரவழைக்க நேரிடும்.
அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கோபத்தை நாம் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே கோபம் வரும் போது, அவற்றை குறைக்க சில எளிய டிப்ஸ் இருக்கிறது.
அது என்னவென்று படித்துக் பார்த்து, அதை நம்பி செய்து வாருங்கள், கோபம் கண்டிப்பாக குறைந்துவிடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உறவுகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

1. கோபம் வந்து விட்டால் உடனே பத்து வரை எண்ணிக் கொண்டு வரலாம். அதாவது கோபம் வரும் போது சற்று அமையாக இருந்து, மூச்சை உள்வாங்கி, பின் மூச்சை வெளிவிடும் போது மெதுவாக மனதிற்குள் 1,2,3 என்று பத்து வரை மெதுவாக சொல்லலாம். இது சிறுபிள்ளைத்தனமாக தெரியலாம். ஆனால் உண்மையில் இவ்வாறு செய்தால் கோபம் குறைந்துவிடும்.

2. எப்போது டென்சனாக இருக்கிறீர்களோ அப்போது யார் பேசினாலும் கோபம் வரும். ஆகவே அந்த நேரத்தில் சற்று தூரம் நடக்கலாம் அல்லது ஓடலாம். இதனால் மூளைச்செல்கள் சற்று ரிலாக்ஸ் ஆகி உள்ளமும் சந்தோஷமாக இருக்கும்.

3. கோபம் வரும் நேரம், எப்போதும் உடனடியாக பேச வேண்டும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் அப்போது பேசும் பேச்சுக்கள் மற்றவர்களது மனதை பாதிக்கும். ஆகவே அந்த நேரத்தில் சற்று அமைதியாக இருந்து, யோசித்து என்ன பேச வேண்டுமோ, அவை அனைத்தையும் நினைத்துப் பார்த்து பிறகு பேசுங்கள்.

4. மன்னிப்பு மிகவும் சக்தி வாய்ந்த சாதனம். ஒருவர் உங்களுக்கு ஏதேனும் தவறையோ அல்லது தீங்கோ ஏற்படுத்திவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் கோபத்திற்கு அனுமதிக் கொடுத்தால், பின்னர் பாசிட்டிவ் ஃபீலிங் அனைத்தும் நெகட்டிவ்வாக மனதிற்குள் தோன்ற ஆரம்பித்துவிடும்.
ஆனால் அதுவே மன்னித்து விட்டால் அப்போது நீங்கள் ஒரு பெரிய மனிதர்களாக அனைவருக்கும் தெரிவீர்கள். பின்னர் நீங்களே உங்கள் கோபத்தின் மீதே கோபம் கொண்டு வெறுத்துவிடுவீர்கள்.

5. பதற்றமாக இருக்கும் நேரம் ஏதேனும் நகைச்சுவையைப் பார்க்கலாம். அதிலும் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் நகைச்சுவை நடிகர்கள் நடித்த சீன்களை பார்த்தால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆகும். மேலும் டென்சனும் அகலும்.

6. எப்போதெல்லாம் டென்சன் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட வேண்டும். அதாவது மூச்சுப்பயிற்சி, பிடித்தப் பாடல்களைக் கேட்பது, மனதிற்குள் சில வாக்கியங்களான "டேக் இட் ஈஸி", "ஆல் இஸ் வெல்" போன்றவற்றை மனதிற்குள் சொல்லலாம். இவை அனைத்தும் மனதை சற்று தெளிவுறச் செய்யும்.

மூலம் : http://tech.lankasri.com/view.php?223009F220eZnBB34eeyOOldccbdQMAAcdddyIMWKbbc4llOmae44dBnn30033990602

புதன், ஆகஸ்ட் 29, 2012

Microsoft - Logos [லோகோக்கள்]

Microsoft இன் லோகோக்கள் பலதடவைகள் மாற்றப்பட்டுள்ளன.அண்மையிலும் Microsoft லோகோவை மாற்றியுள்ளது.


மூலம் : http://www.venkkayam.com/2012/08/microsoft.html

புதன், ஜூன் 06, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)


1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத  நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான  செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது  லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில்,
முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம்  ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும்,  வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ்  வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான  இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான்  உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும்,  அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது  வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால்
தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள்
 தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க  வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக்  அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

திங்கள், மே 14, 2012

8th Picnic to Kollimalai on 13-05-2012 [Sunday]

A picnic can be defined simply as a pleasure excursion at which a meal is eaten outdoors (al fresco or en plein air), ideally taking place in a beautiful landscape such as a park, beside a lake or with an interesting view and possibly at a public event such as before an open air theatre performance, and usually in summer. Descriptions of picnics show that the idea of a meal that was jointly contributed and was enjoyed out-of-doors were essential to a picnic from the early 19th century. Picnics are often family-oriented but can also be an intimate occasion between two people or a large get-together such as Friends Picnics, Company picnics, etc.,

*04:30 am [14-05-2012 Sun] – We begin our 8th Pinic, with our friends Chithambaram, Maniannan, Karthi, Pojaraj, Vetri, Vijian [Expect Shampu] and Kathir [Driver].

* 04:50 am - Poojai @ Puthumariamman Kovil, Kasiplayam, Gobichettipalayam

* 05:40 am - Morning refreshment @ Villarasampatti, Erode.

* 07:00 am - Namakkal

* 08:00 am - Beginning 70+ hair pin bends.

* 09:00 am - Breakfast on the way of Semmedu

[]

* 09:45 am – Reach Kolli Malai

Kolli Malai (Tamil: கொல்லி மலை) is a small mountain range located in central Tamil Nadu in Namakkal district of India. The mountains are about 1000 to 1300 m in height and cover an area of approximately 280 km². The Kolli Hills has 70 hair pin bends to reach the top of the hills. The Kolli Hills are part of the Eastern Ghats, which is a mountain range that runs mostly parallel to the east coast of South India. The mountains are relatively untouched by commercial tourism and still retain their natural beauty.


* 10:00 am – 12:15 pm - AKASA GANGAI WATER FALLS (Ganges of the Sky)
Akasa Gangai
(Tamil: ஆகாய கங்கை) is an enchanting 300 feet waterfall of river Aiyaru, located near Arappaleeshwarar temple. Thousands of steps lead down to the falls. It is situated in a beautiful valley surrounded by the mountains at all sides. Enroute, the natural beauty of the valley and the vegetation-covered peaks.

The location is ideal for trekking and the breeze is pleasant, the cascade of silvery water touching and brushing the innumerable herbs which are abound in Kollihills keeps everyone spell bound and fresh with its herbal qualities.

We [Pojaraj, Vetri and Vijian] enjoy lot and took Rich Bath.

[]

Note Good health condition,   Gents [10 – 50 yrs,], Ladies [10 – 35 yrs], Children [above 7 yrs] are possible to stepping towards the Akasa Gangai, Because, there will be a minimum of 1000 steps Up and down  to see the falls.








* 12:30 pm – Arapaleeswarar Kovil

The entire range of the Kolli Hills gets a religious importance because of the Arapaleeswarar Temple. Such is the importance of this temple that the ancient Tamil literature speaks of this temple in glorious terms. This temple is said to have been built by Valvil Ori in the 1st or 2nd century when he ruled the area. Lord Shiva is the main deity here and Aramvalartha Nayaki had separate Vimanam.

[]

* 01: 00 – 01:45 pm –  Ettukai Amman

Ettukai Amman is an ancient temple situated in the Kolli malai. This small temple attracts tourists on no moon days.

[]
* 02:30 pm – Lunch Break @ Boat house
[ Thanks to Shampu, Vijiyan and their respected Family]

* 03:15 – 03:45 pm – Boat House

Boat house in Kolli hills is one of the most visited spot by all tourist peoples. This is situated at Vasalurpatty near Solakkadu-Thinnanurpatty road. Actually it is a lake near kolli hills with permanent water source. Boating such as pedal boating is available where just can have lots of fun. We [Chitha, Karthi, Kathir, Poj and Vetri] pedaling with drizzles.

* 04:00 – 05:00 pm – Botanical Garden

Botanical Garden is another place of importance in Kolli mallai. It is situated three kilometers away from Semmedu formed at the old Tampcol site. This garden has a Park, Eco friendly cottages, Rose Garden, Herbal Park and a view point. The Children's park is situated just above the fountain in the Botanical Garden with statues of animals, see saw, wave slide, deluxe circular swing, merry go round, etc are in the Children`s park. There is also a porch room for flowers show in this park. This Botanical Garden is maintained by the government and has a large variety of local and regional plants. You will find a beautiful range of colorful flowers, medicinal herbs and plants. There is a pineapple research farm where hybrid species are grown.

* 05:15 pm –Semmedu Market, We drink a Mooligai soup [Aatty Kaal Kizhangu] and brought fine apples.
Finally we missed out some places [Siddhar Kugai, Masilla arivi, Selur View Point, Santhana Parai, etc.,]
* 10:30 pm - respective Home.

So far,

1. 00-00-2002 [Sunday] – Ooty & Then Thiruppathi
2. 27-05-2003 [Sunday] – Kodaikanal & Palani
3. 30-05-2004 [Sunday] – Guruvayoor & Thiruchur
4. 22-05-2005 [Sunday] – Thekkadi, Suruli Falls, Kutchnur Saneshwar Kovil
5. 29-04-2006 [Sunday] – Samundeshwar Kovil, Mysore & Krishnaraja sekar Dam
6. 27-06-2010 [Sunday] - Yercaud & 1008 shivalinghas
7. 04-06-2111 [Sunday] - Munnar

திங்கள், ஏப்ரல் 23, 2012

அதிர்ஷ்டத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?


அதிர்ஷ்டத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

இதோ இவர்கள் என்ன நினைத்தார்கள்.  

மனித வாழ்க்கை பகுத்தறிவை விட அதிர்ஷ்டத்தாலேயே ஆளப்படுகிறது.

-  ஹுயூம்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் அதிர்ஷ்டம் வந்து ஒரு முறை கதவைத் தட்டும் ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது அவன் காதில் வி்ழுவதே இல்லை. - மார்க் டுவெய்ண்.

 அதிர்ஷ்டங்களை உண்டாக்கி கொள்வது நாம் ஆனால் அதை விதி என்று சொல்கிறோம்.    -  ஆல்ராய்

அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பை தொடர்ந்தே செல்லும். - கோல்ட்ஸ்மித்

அதிர்ஷ்ட சக்கரம் எப்போதும் சுற்றிக்கொண்டுள்ளது மேலே உள்ளது கீழே 
கீழே உள்ளது மேலே - கன்ஃபூஷியஸ்

 அதிர்ஷ்டம் மனிதர்களை மாற்றி விடுகிறதா?   இல்லை,  அவர்களை வெளிப்படுத்துகிறது. - ரிக்கோபோனி

அதிர்ஷ்டம் மெலிந்தவர்களை தண்டிக்கும் தடி தைரியமானவர்க்கு ஊன்றுகோல் - லோவெல்

அதிர்ஷ்டத்தை நம்பாதே ஒழுக்கத்தை நம்பு - பப்ளியஸ் சிரஸ்

வெளிநாட்டினர் சொன்னார்கள் சரி
நம்மவர் !  சொன்னார்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.  (குறள் 594)

ஆதாரம் : 

http://eniyavaikooral.blogspot.in/search?updated-min=2011-01-01T00:00:00%2B05:30&updated-max=2012-01-01T00:00:00%2B05:30&max-results=8

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts