# லென்ஸ்களை உரிய திரவத்தில்தான் சுத்தப்படுத்த வேண்டும். குழாய்த் தண்ணீரில் கழுவக் கூடாது. நீந்தும்போதோ, குளியல் தொட்டியில் குளிக்கும்போதோ, ஷவரில் நனையும்போதோ லென்ஸைக் கழற்றிவிடவும்.
# தொடர்ந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவைப்படும்போது லென்ஸை மருத்துவரின் பரிந்துரைப்படி மாற்ற வேண்டும். கண்ணில் நீர் படும்படியான எந்தச் சூழலிலும் லென்ஸை அகற்றிவிடவும்.
# கண்ணில் லென்ஸைப் பொருத்துவதற்கு முன்னர் கைகளை நன்கு சோப் போட்டுக் கழுவவும். பிறகு சுத்தமாக ஈரம் போகத் துடைத்த பிறகே லென்ஸைத் தொடவும்.
# ஒவ்வொரு முறையும் லென்ஸைக் கழுவும் திரவம் புதிதாக இருக்கட்டும்.
# உப்பு நீரால் ஒருபோதும் லென்ஸைக் கழுவாதீர்கள்.
# லென்ஸைப் பாதுகாக்கும் குடுவையை உரிய திரவத்தில் முறையாகக் கழுவவும்.
# எட்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாக அணியக் கூடாது. இடையிடையே ஓய்வு அளிக்க வேண்டும். தூங்கும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
# பார்வை மங்கலானாலோ, வலி ஏற்பட்டாலோ, வீக்கம் அல்லது எரிச்சல் இருந்தாலோ, உடனடியாகக் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
# புகை மண்டிய இடங்களைத் தவிருங்கள்.
புதிதாக லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டியவை
# உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.
# அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
# முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.
# மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.
# லென்ஸ் தவறி விழுந்தாலும் கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
# நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல்
இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.
# கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
# லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது.ஆதாரம் & நன்றி : http://tech.lankasri.com/view.php?203609F220eZnBd34eaSmOln4cbdQWAAcddceUMQAdbc4RlOmae43dBnZ3e023F90602
0 comments:
கருத்துரையிடுக