வியாழன், ஏப்ரல் 30, 2009

விண்டோஸில் வித்தைகள்

வித்தை-1: விண்டோஸில் எந்த இடத்திலும் "CON" என்ற பெயரில் நீங்கள் ஃபோல்டர் உருவாக்க முடியாது.

வித்தை-2: விண்டோஸில் வேர்ட் பைல் ஓப்பன் செய்து =rand(200,99)என டைப் செய்து என்டர் கீ யை அழுத்தினால்...பாருங்கள் அதிசயத்தை.

வித்தை-3: விண்டோஸில் ஒரு நோட்பேட் பைல் ஓப்பன் செய்து அதில் Bush hid the facts என்று எழுதி அதனை சேவ் செய்து சிறிது நேரம் கழித்து ஓப்பன் செய்து பாருங்கள்...ஆச்சர்யம் காத்திருக்கிறது.

சாப்பிட்டவுடன் தவிர்க்கப்படவேண்டிய ஏழு பழக்கங்கள்...

சாப்பிட்டவுடன் உடனே புகைபிடிப்பது:

சாப்பிட்டவுடன் உடனே புகைபிடிப்பது ஒரே சமயத்தில் பத்து சிகரெட்டுகளை புகைபிடிப்பதற்கு சமம் என அறிவியல் பூர்வமாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது. இது கேன்சர் நோயக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கிறது

சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது:

உணவு சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவதால் வயற்றினுள் காற்று அதிகமாக நிரப்பப்படுகிறது. எனவே சாப்பிட்டபின் 1-2 மணி நேரங்கள் கழித்து பழங்கள் சாப்பிடுவது நலம்.

சாப்பிட்டவுடன் டீ குடிப்பது:

உணவு சாப்பிட்ட உடன் டீ குடிப்பதை தவிர்ப்பது நலம். தேயிலையில் உள்ள அமிலங்கள் உணவில் கலந்து சாப்பிட்ட உணவு ஜீரணமாவதை கடினமாக்குகிறது.

சாப்பிட்டவுடன் இடுப்புபட்டையை(பெல்ட்)தளர்த்துதல்:

சாப்பிட்டவுடன் அணிந்திருக்கும் இடுப்புபட்டையை தளர்த்துவதால் குடல் அடைத்துக்கொள்ளவும்,முறுக்கப்படவும் வாய்ப்புகளுண்டு.


சாப்பிட்டவுடன் குளிப்பது:

சாப்பிட்வுடன் குளிப்பதால் கை,கால் பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் வயிற்றுப்பகுதிகளில் உள்ள இரத்த ஓட்டம் குறைந்து ஜீரணமாவதை பாதிக்கிறது.


சாப்பிட்டவுடன் நடப்பது:

சாப்பிட்டவுடன் நடந்தால் நூறு ஆண்டுகள் வாழலாம் என்று கூறுவதுண்டு.முற்றிலும் தவறு.
சாப்பிட்டவுடன் நடப்பதால் உணவு செரிமானத்தின் போது உணவிலுள்ள சத்துக்கள் முழுமையாக உட்கிரகிகப்படுவதில்லை.


சாப்பிட்டவுடன் தூங்குவது:

சாப்பிட்டவுடன் தூங்குவதால் குடலில் வாயு பிரச்சினை.

நினைப்பது

எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய்.

IPL - 2 Team Standings position as on 30-04-09 @ 11.45am (IST)

செவ்வாய், ஏப்ரல் 28, 2009

திங்கள், ஏப்ரல் 27, 2009

IPL - 2 Team Standings position as on 27-04-09 @ 11.45am (IST)

Sno Team Played Won Lost Tied No Result Points Run Rate

1 Hyderabad 3 3 0 0 0 6 1.627
2 Delhi 3 3 0 0 0 6 0.684
3 Mohali 4 2 2 0 0 4 0.271
4 Chennai 4 1 2 0 1 3 1.067
5 Mumbai 3 1 1 0 1 3 0.175
6 Kolkata 4 1 1 1 1 3 -0.887
7 Jaipur 4 0 2 1 1 3 -1.7
8 Bangalore 5 1 4 0 0 2 -0.596

மைக்ரோசாப்ட் கால்குலேட்டர்

மைக்ரோசாப்ட் கால்குலேட்டரில் கீழே உள்ள கணக்கீட்டை முயற்சித்துப் பாருங்கள்.

1. 2704/50 = 54.08 விடை சரியாக இருக்கிறது.

2. 2704/51 = 53.01960784 இதுவும் விடை சரியாக இருக்கிறது.

3. 2704/52 = 1 இங்குதான் பிரச்சினை, இதற்கான விடை கிடைப்பதில்லை.

மைக்ரோசாப்ட் கால்குலேட்டர் ஒரு ??? !!!.

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

IPL - 2 Team Standings position as on 24-04-09 @ 12.00pm (IST)

IPL - 2 @ South Africa Standings as on 24-04-09

Teams MP W L NRR PTS

Deccan Chargers 2 2 0 +2.158 4
Delhi Daredevils 2 2 0 +0.985 4
Mumbai Indians 2 1 0 +0.950 3
Rajasthan Royals 3 1 1 -1.875 3
Chennai Super Kings 3 1 2 +1.067 2
Royal Challengers
Bangalore 3 1 2 -0.683 2
Kolkata Knight
Riders 3 1 1 -0.887 2
Kings XI Punjab 2 0 2 -1.779 0

Thanks to : http://www.maxtelevision.com/ipl2009_external/ipl_standings.php

வியாழன், ஏப்ரல் 16, 2009

பழமொழிகள்


அகல உழுகிறதை விட ஆழ உழு.
அகல் வட்டம் பகல் மழை.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு
அடாது செய்தவன் படாது படுவான்.
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? .

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
ஆழமறியாமல் காலை இடாதே.
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி,
ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, இராச திசையில் கெட்டவணுமில்லை
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
இளங்கன்று பயமறியாது
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
இறுகினால் களி , இளகினால் கூழ்.
இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.


ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈர நாவிற்கு எலும்பில்லை.


உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.


ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.


எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
[நெருப்பில்லாது புகையாது]
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
எதார்த்தவாதி வெகுசன விரோதி.
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
எலி அழுதால் பூனை விடுமா?
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
எறும்பு ஊர கல்லுந் தேயும்.


ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்கு கோபம்.


ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?


ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.


ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஒள
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

புதன், ஏப்ரல் 08, 2009

தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்தது

தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்து காட்டியுள்ளது. நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. மழை குறுக்கிட்டதால் வெலிங்டன் டெஸ்ட் "டிராவில்' முடிய, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நழுவியது. நியூசிலாந்து சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் "டிரா' ஆனது. மூன்றாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 379, நியூசிலாந்து 197 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 434 ரன்கள் எடுத்த இந்திய அணி, நியூசிலாந்தின் வெற்றிக்கு 617 ரன்களை நிர்ணயித்தது. இமாலய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

டெய்லர் சதம்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந் தது. ரோஸ் டெய்லர், பிராங்க்ளின் ஆட்டத்தை தொடர்ந்தனர். தனி ஆளாகப் போராடிய டெய்லர், டெஸ்ட் அரங்கில் 4 வது சதம் கடந்தார். 16 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் குவித்த இவர், ஹர்பஜன் சுழலில் போல்டானார். 5 வது விக்கெட்டுக்கு டெய்லர், பிராங்க்ளின் ஜோடி 142 ரன்கள் சேர்த்தது.

சச்சின் மிரட்டல்: ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பதை அறிந்த கேப்டன் தோனி, சச்சினை பந்து வீச அழைத்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. சச்சின் சுழலில், மெக்கலம் (6), பிராங்க்ளின் (49) அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து வந்த சவுத்தி (3) சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

பறிபோன வெற்றி: உணவு இடைவேளைக்குப் பின் 30 நிமிடம் தான் ஆட்டம் நடந்தது. இதற்குப் பின் லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆட்டம் தடைபட்டது. அப்போது நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது. 336 ரன்கள் பின்தங்கியிருந்தது. கேப்டன் வெட்டோரி (15), ஓ பிரையன் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. இருப்பினும் மழை காரணமாக போட்டி "டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்திய தரப்பில் ஹர்பஜன் 4, சச்சின், ஜாகிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

வரலாற்று சாதனை: வெலிங்டன் டெஸ்ட் வெற்றி பறிபோனாலும், ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 1967-68 ம் ஆண்டு மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை (3-1) வென்றிருந்தது.

சூப்பர் கேப்டன் : கேப்டன் தோனி தலைமை யிலான இந்திய அணியின் வெற்றி நடை தொடர்கிறது. இதுவரை டெஸ்ட் போட்டி களில் இவரது அணி தோல்வி அடைந்தது இல்லை. இதுவரை 7 போட்டிகளுக்கு தலைமை வகித்த தோனி, 5 வெற்றி, 2 "டிராவை' பதிவு செய்துள்ளார். இவரது தலைமையின் கீழ், இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் (1-0), தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை (1-0) வென்றுள்ளது.

ரூ. 15 லட்சம் பரிசு : இந்திய அணியின் புதிய சாதனைக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பாராட்டும், பரிசுத் தொகையும் அறிவித்து உள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில்,"" நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் (3-1) மற்றும் டெஸ்ட் (1-0) தொடர்களை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் களில் பங்கேற்ற வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சமும், அணி உதவியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும்,'' என்றார்.

எல்லாமே காம்பிர் : வெலிங்டன் டெஸ்டின் 2வது இன்னிங்சில் 167 ரன்கள் குவித்து அசத்திய காம்பிர், ஆட்ட நாயகன் விருது பெற்றார். இத்தொடரில் 2 சதம் ஒரு அரை சதம் உட்பட 445 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதும் வென்றார். இது குறித்து காம்பிர் கூறுகையில்,""அன்னிய மண்ணில் முதன் முதலாக சிறப்பாக செயல்பட்டது திருப்தி அளிக்கிறது. சச்சின் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் நெருக்கடியின்றி விளையாடுமாறு அறிவுறுத்தினர். இதனால் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப் படுத்த முடிந்தது,'' என்றார்.

வெற்றியில் அனைவருக்கும் பங்கு : நியூசிலாந்து மண்ணில் பெற்ற சாதனை வெற்றியில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்கிறார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,"" அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் சரியான அளவில் இடம் பெற்றிருந்தனர். அனுபவ வீரர்கள் இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி ஆலோசனை வழங்கினர். வெற்றிக்கு ஒரு வீரர் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. காம்பிர் இத்தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார். சீனியர் வீரர்களான சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோரின் செயல்பாடு அணிக்கு பக்கபலமாக அமைந்தது. பின் வரிசை வீரர்களும் இத்தொடரில் சிறப்பாக பேட் செய்து அசத்தினர். இந்திய பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். ஜாகிர், இஷாந்த், ஹர்பஜன் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். இந்த வெற்றி கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. கூடுதலாக 10 ஓவர்கள் கிடைத்திருந்தால் வெலிங்டன் டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி இருப்போம். கடைசி நாளில் மழை பெய்யும் என எங்களுக்கு தெரியும். இருப்பினும் இயற்கையை யாரும் உறுதிபட கூற முடியாது. அதனால் 2வது இன்னிங்சை சற்று தாமதமாக "டிக்ளேர்' செய்தேன். குறைந்தது 110 ஓவர்கள் வீச முடியும் என எண்ணினேன். ஆனால் மழை சூழ்நிலையை மாற்றி விட்டது,'' என்றார்.

பறிபோன 100வது வெற்றி : மழை குறுக்கிட்டதால், இந்தியாவின் 100 வது டெஸ்ட் வெற்றி பறிபோனது. இதுவரை 429 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 99 டெஸ்ட் வெற்றிகளை பதிவு செய்து உள்ளது. வெலிங்டனில் நேற்று இந்தியா வெற்றி பெற்றிருந்தால், டெஸ்டில் வெற்றி சதம் அடித்திருக்கலாம்.

ஜனாதிபதி பாராட்டு : நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பாராட்டு தெரிவித்துள்ளார். இதில், ""நியூசிலாந்தில் புதிய சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களின் சாதனைகளால் இந்தியா பெருமை அடைகிறது. இனி வரும் தொடர்களிலும் அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என பாராட்டியுள்ளார்.
நன்றி : தினமலர் 08-04-2009

செவ்வாய், ஏப்ரல் 07, 2009

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங் கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி "டிராவில்' முடிந்தது.

மூன்றாவது டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது (ஏப்ரல் 03 - 07 '2009).


டிராவிட் உலக சாதனை : வெலிங்டன் டெஸ்டில் புதிய உலக சாதனை படைத்தார் இந்தியாவின் ராகுல் டிராவிட். நேற்றைய 2வது இன்னிங்சில் நியூசிலாந்தின் துவக்க வீரர் டிம் மெக்லன்டாசை கேட்ச் பிடித்து வெளியேற்றியதன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக "கேட்ச்' பிடித்த "பீல்டர்' என்ற பெருமை பெற்றார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக்கின் (181 "கேட்ச்') சாதனையை முறியடித்தார் டிராவிட். இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், 183 "கேட்ச்' பிடித்துள்ளார்.

டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த "டாப்-5' வீரர்கள்: (போட்டி/கேட்ச்) : டிராவிட் இந்தியா 134*183, மார்க்வாக் ஆஸி., 128/181, பிளமிங் - நியூசி., 111/171, லாரா - வெ.இண்டீஸ் 131 /164, மார்க் டெய்லர் - ஆஸி., 104/157
கடந்து வந்த பாதை : 144 "கேட்சுகள்'- வலது கை பவுலர்கள் மூலம் பிடித்தவை
* 39 - இடது கை பவுலர்கள் மூலம் பிடித்தவை
* 88- இந்திய மண்ணில் பிடித்தவை
* 95 -அன்னிய மண்ணில் பிடித்தவை
* 55- அனில் கும்ளே பந்துவீச்சில் பிடித்தவை
* 45-ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிடித்தவை
* 79- கங்குலி தலைமையின் கீழ் பிடித்த "கேட்சுகள்' : * அதிக பட்சமாக ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கரை, 6 முறை "கேட்ச்' பிடித்துவெளியேற்றியுள்ளார் டிராவிட்.
* கடந்த 2004-05 ம் ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில், டிராவிட் 13 "கேட்சுகள்' பிடித்தார். இதுவே ஒரு டெஸ்ட் தொடரில் இவர் பிடித்த அதிக "கேட்சுகள்'.
* இரண்டு முறை (2002, 2004) ஆண்டுக்கு 26 " கேட்சுகள்' பிடித்து அசத்தியுள்ளார் டிராவிட்.

மகிழ்ச்சியான அனுபவம் : நியூசிலாந்து வீரர் மெக்லன்டாசை "கேட்ச்' பிடித்து வெளியேற்றிய டிராவிட் பந்தை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறியது: கேட்சுகள் பிடிப்பது ரன் சேர்ப்பதை விட எனக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். ஆட்டத்தின் வெற்றிக்கு அதிக "கேட்ச்' பிடிப்பதும் முக்கியம் என்பதை கடந்த 12-13 ஆண்டுகளாக எனது டெஸ்ட் வாழ்க்கையில் அறிந்துள்ளேன். இச்சாதனையை நான் எட்டியதற்கு வெங்கடேஷ் பிரசாத், ஜாகிர் கான், அனில் கும்ளே, ஜாகிர் கான் உள்ளிட்ட திறமை வாய்ந்த இந்திய பவுலர்கள் முக்கிய காரணம். சூப்பர் "கேட்ச்' பிடிப்பது என்பது சிரமமான விஷயம்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் சச்சின் பந்து வீச்சில், டேமியன் மார்டினை "கேட்ச்' பிடித்து வெளியேற்றினேன். இது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தவிர, கடந்த 2001 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சென்னை டெஸ்டில், ஹர்பஜன் வீசிய பந்தில், மார்க் வாக்கை வெளியேற்றினேன். இந்த இரண்டு நிகழ்வுகளும் எனது கிரிக்கெட் வாழ்வில் நீங்காத நினைவுகளாக உள்ளன. இவ்வாறு டிராவிட் கூறினார்.

நன்றி : தினமலர் 07-04-2009

Thanks to : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=1921&Value3=I

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts