செவ்வாய், ஏப்ரல் 07, 2009

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங் கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி "டிராவில்' முடிந்தது.

மூன்றாவது டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது (ஏப்ரல் 03 - 07 '2009).


டிராவிட் உலக சாதனை : வெலிங்டன் டெஸ்டில் புதிய உலக சாதனை படைத்தார் இந்தியாவின் ராகுல் டிராவிட். நேற்றைய 2வது இன்னிங்சில் நியூசிலாந்தின் துவக்க வீரர் டிம் மெக்லன்டாசை கேட்ச் பிடித்து வெளியேற்றியதன் மூலம், டெஸ்ட் அரங்கில் அதிக "கேட்ச்' பிடித்த "பீல்டர்' என்ற பெருமை பெற்றார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக்கின் (181 "கேட்ச்') சாதனையை முறியடித்தார் டிராவிட். இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட், 183 "கேட்ச்' பிடித்துள்ளார்.

டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த "டாப்-5' வீரர்கள்: (போட்டி/கேட்ச்) : டிராவிட் இந்தியா 134*183, மார்க்வாக் ஆஸி., 128/181, பிளமிங் - நியூசி., 111/171, லாரா - வெ.இண்டீஸ் 131 /164, மார்க் டெய்லர் - ஆஸி., 104/157
கடந்து வந்த பாதை : 144 "கேட்சுகள்'- வலது கை பவுலர்கள் மூலம் பிடித்தவை
* 39 - இடது கை பவுலர்கள் மூலம் பிடித்தவை
* 88- இந்திய மண்ணில் பிடித்தவை
* 95 -அன்னிய மண்ணில் பிடித்தவை
* 55- அனில் கும்ளே பந்துவீச்சில் பிடித்தவை
* 45-ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிடித்தவை
* 79- கங்குலி தலைமையின் கீழ் பிடித்த "கேட்சுகள்' : * அதிக பட்சமாக ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கரை, 6 முறை "கேட்ச்' பிடித்துவெளியேற்றியுள்ளார் டிராவிட்.
* கடந்த 2004-05 ம் ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில், டிராவிட் 13 "கேட்சுகள்' பிடித்தார். இதுவே ஒரு டெஸ்ட் தொடரில் இவர் பிடித்த அதிக "கேட்சுகள்'.
* இரண்டு முறை (2002, 2004) ஆண்டுக்கு 26 " கேட்சுகள்' பிடித்து அசத்தியுள்ளார் டிராவிட்.

மகிழ்ச்சியான அனுபவம் : நியூசிலாந்து வீரர் மெக்லன்டாசை "கேட்ச்' பிடித்து வெளியேற்றிய டிராவிட் பந்தை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறியது: கேட்சுகள் பிடிப்பது ரன் சேர்ப்பதை விட எனக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். ஆட்டத்தின் வெற்றிக்கு அதிக "கேட்ச்' பிடிப்பதும் முக்கியம் என்பதை கடந்த 12-13 ஆண்டுகளாக எனது டெஸ்ட் வாழ்க்கையில் அறிந்துள்ளேன். இச்சாதனையை நான் எட்டியதற்கு வெங்கடேஷ் பிரசாத், ஜாகிர் கான், அனில் கும்ளே, ஜாகிர் கான் உள்ளிட்ட திறமை வாய்ந்த இந்திய பவுலர்கள் முக்கிய காரணம். சூப்பர் "கேட்ச்' பிடிப்பது என்பது சிரமமான விஷயம்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் சச்சின் பந்து வீச்சில், டேமியன் மார்டினை "கேட்ச்' பிடித்து வெளியேற்றினேன். இது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தவிர, கடந்த 2001 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சென்னை டெஸ்டில், ஹர்பஜன் வீசிய பந்தில், மார்க் வாக்கை வெளியேற்றினேன். இந்த இரண்டு நிகழ்வுகளும் எனது கிரிக்கெட் வாழ்வில் நீங்காத நினைவுகளாக உள்ளன. இவ்வாறு டிராவிட் கூறினார்.

நன்றி : தினமலர் 07-04-2009

Thanks to : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=1921&Value3=I

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts