சனி, ஜனவரி 30, 2010

Manish Pandey Catch of The Century !!

கர்நாடகா & மும்பை அணிகளிடையே மைசூரில் நடந்த ரஞ்சி இறுதிப் போட்டியில், கர்நாடக வீரர் மணிஷ் பாண்டேவின் அற்புதமான கேட்ச் ‘நூற்றாண்டின் சிறந்த கேட்ச்’ என பிரமிப்புடன் பார்க்கப்படுகிறது. மும்பை அணியின் 2வது இன்னிங்சில் அபிஷேக் நாயர் (50 ரன்) தூக்கி அடித்த பந்தை, சூப்பர் மேன் போல அப்படியே அந்தரத்தில் பறந்து மணிஷ் பாண்டே பிடித்த விதத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நேரடி ஒளிபரப்பில் மிஸ் செய்தவர்கள், யூ டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பார்த்து வாய் பிளக்கிறார்கள். கடந்த வாரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 வீடியோவில் இந்த கேட்ச் இடம் பிடித்துள்ளது. லட்சக்கணக்கான இணையதள ரசிகர்கள் இந்த வீடியோவை மொய்த்தபடி உள்ளனர். இந்தியாவின் ஜான்டி ரோட்ஸ் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மணிஷ், கடந்த ரஞ்சி சீசனில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் (882 ரன், 4 சதம், 5 அரைசதம், சராசரி 63.00) பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நகம் கடிக்க வைத்த பைனலில் மணிஷ் அதிரடியாக 144 ரன் (151 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அசத்தினார். பரபரப்பான அந்த போட்டியில் மும்பை 6 ரன் வித்தியாசத்தில் வென்றது.
தென் ஆப்ரிக்க அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதவுள்ள வாரியத் தலைவர் அணிக்கு மணிஷ் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியிலும் இவர் மிக விரைவில் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.


Visit this youtube : http://www.youtube.com/watch?v=TQAD_ygfS_g

Courtesy : http://www.dinakaran.com/sportsdetail.aspx?id=4802

வெள்ளி, ஜனவரி 29, 2010

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி






மும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக வீரர் பத்ரிநாத், கர்நாடகாவின் அபிமன்யூ மிதுன், மேற்குவங்கத்தின் விரிதிமன் சகா வாய்ப்பு பெற்றுள்ளனர். காயம் காரணமாக டிராவிட், யுவராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.




இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் அடுத்த மாதம் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட் வரும் பிப். 6ம் தேதி நாக்பூரிலும், இரண்டாவது டெஸ்ட் வரும் பிப்., 14ம் தேதி கோல்கட்டாவிலும் துவங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று, மும்பையில் தேர்வு செய்யப்பட்டனர்.




மீண்டும் லட்சுமண்: சமீபத்திய வங்கதேச தொடரின் போது "மிடில்-ஆர்டர்' வீரர்களான டிராவிட் (தாடை), லட்சுமண் (இடது கை), யுவராஜ் சிங் (மணிக்கட்டு), ஸ்ரீசாந்த் காயம் அடைந்தனர். இதில் காயம் குணமடைந்த லட்சுமண், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

2 தமிழக வீரர்கள்: தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக மேற்குவங்க அணியின் விக்கெட் கீப்பர் விரிதிமன் சகா அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றுள்ளார். இதேபோல், கர்நாடகாவின் அபிமன்யூ மிதுன் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களை தவிர, தமிழக வீரர்களான பத்ரிநாத் மற்றும் முரளி விஜய் 15பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.


கைப் ஏமாற்றம்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கைப், விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ""தற்போது முதல் டெஸ்டில் விளையாடும் வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது டெஸ்டில் விளையாடும் வீரர்கள் தேர்வு, காயமடைந்துள்ள வீரர்களின் உடற்தகுதி "ரிப்போர்ட்டை' அடிப்படையாக கொண்டு அமையும். தோனியும் அவ்வப்போது காயத்தால் அவதிப்படுகிறார். இதனை கருத்தில் கொண்டு தான் கூடுதல் கீப்பராக சகாவை தேர்வு செய்துள்ளோம். உள்ளூர் தொடர்களில் மிதுன் சிறப்பாக பந்துவீசிய காரணத்தினால், அவரை தேர்வு செய்துள்ளோம்,'' என்றார்.
15 பேர் கொண்ட இந்திய அணி:
தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், லட்சுமண், முரளி விஜய், பத்ரிநாத், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, சுதீப் தியாகி, பிரக்யான் ஓஜா, அபிமன்யூ மிதுன், விரிதிமன் சகா.
-----------------
ரோகித் கேப்டன்
வரும் பிப்., 2ம் தேதி நாக்பூரில் நடக்கும் இரண்டு நாள் பயிற்சி போட்டியில் இந்திய கிரிக்கெட் போர்டு பிரசிடென்ட் லெவன் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய அணியில் இடம் பிடிக்காத ரோகித் சர்மா, பிரசிடென்ட் லெவன் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அணி விபரம்: ரோகித் சர்மா (கேப்டன்), மனீஷ் பாண்டே,அபினவ் முகுந்த், பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே, சேட்டிஸ்வர் புஜாரா, அபிஷேக் நாயர், பியுஸ் சாவ்லா, அஸ்வின், வினய் குமார், அபிமன்யூ மிதுன், ஷிகர் தவான், உமேஷ் யாதவ், மன்பிரீத் கோனி.
-----------------
புதுமுகம்... அறிமுகம்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமாகும் இரண்டு இந்திய வீரர்கள்:
விரிதிமன் சகா: பெங்கால் வீரரான விரிதிமன் சகா (25 வயது), விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக (வலது கை), வலம் வருகிறார். இவர் பெங்கால், இந்தியா "ஏ', ஐ.பி.எல்., கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 24 முதல் தர போட்டி ( 1256 ரன், 65 கேட்ச், 3 ஸ்டெம்பிங்), 33 "ஏ' பிரிவு போட்டி (878 ரன், 32 கேட்ச், 7 ஸ்டெம்பிங்), 28 உள்ளூர் "டுவென்டி-20' போட்டியில் (419 ரன், 13 கேட்ச், 3 ஸ்டெம்பிங்) பங்கேற்றுள்ளார்.
அபிமன்யூ மிதுன்: கர்நாடகா வீரரான அபிமன்யூ மிதுன் (20 வயது), சிறந்த வேகப்பந்துவீச்சாளர். இவர், ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 9 முதல் தர போட்டி (75 ரன், 47 விக்.,), 5 "ஏ' பிரிவு போட்டி (6 ரன், 4 விக்.,), 3 உள்ளூர் "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை சூப்பர் லீக் தொடரில் 9 போட்டியில் பங்கேற்ற இவர், 47 விக்கெட் வீழ்த்தினார்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4989&Value3=I

திங்கள், ஜனவரி 18, 2010

சச்சின் 13 ஆயிரம் ரன்....:

சச்சின் 13 ஆயிரம் ரன்....:
சச்சின் தனது சாதனை பயணத்தில் இன்னொரு மைல்கல்லை எட்டினார். நேற்று 30 ரன்கள் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 13 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற என்ற சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவர், ஏற்கனவே 17,394 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள்:

வீரர்/அணி போட்டி ரன் சதம்/அரைசதம் அதிகபட்சம்

சச்சின் (இந்தியா) 163 13046 43/55 248*

லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34/48 400*

பாண்டிங் (ஆஸி.,) 142 11859 39/51 257

டிராவிட் (இந்தியா) 138 11260 28/58 270

பார்டர்(ஆஸி.,) 156 11174 27/63 205

ஸ்டீவ் வாக்(ஆஸி.,) 168 10927 32/50 200

காலிஸ்(தெ.ஆப்.,) 135 10640 33/52 189*

கவாஸ்கர்(இந்தியா) 125 10122 34/45 236*

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4899&value3=I

செவ்வாய், ஜனவரி 12, 2010

சிந்தனை

”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”

நன்றி : http://www.pkp.blogspot.com/

திங்கள், ஜனவரி 11, 2010

சாதனை நோக்கி : இந்தியா, இலங்கை அணிகள் 120வது முறையாக ஒருநாள் போட்டி

ஒருநாள் அரங்கில் 100 போட்டிகளுக்கு மேல் மோதிய இரு அணிகள்:

அணிகள் போட்டி

ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் 120

இந்தியா-இலங்கை 120

இலங்கை-பாகிஸ்தான் 119

இந்தியா-பாகிஸ்தான் 118

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து 118

பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் 114

இந்தியா-ஆஸ்திரேலியா 103

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 101


10-01-2010, இந்தியா, இலங்கை அணிகள் 120வது முறையாக ஒருநாள் போட்டியில் மோதின. இதன்மூலம் அதிக போட்டிகளில் மோதியுள்ள ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டன. வரும் 13ம் தேதி நடக்கவுள்ள முத்தரப்பு தொடரின் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதன்மூலம் கிரிக்கெட் அரங்கில் அதிக ஒருநாள் போட்டியில் மோதிய அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைக்க காத்திருக்கின்றன.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4819&Value3=I

சனி, ஜனவரி 09, 2010

விர்ச்சுவல் மெமரி

விர்ச்சுவல் மெமரி என்பது என்ன?

ஆங்கிலத்தில் இதனை nonphysical memory என்று சொல்வார்கள். விண்டோஸ் தன் சிஸ்டத்தில் பிசிகல் மெமரி எனச் சொல்லப்படும் ராம் மெமரி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால், விர்ச்சுவல் மெமரியினைப் பயன்படுத்தும். வழக்கமான ராம் மெமரியில் போட்டுப் பயன்படுத்தும் டேட்டாவினை, உங்கள் ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில் 1 ஜிபி ராம் மெமரி இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் அது, இது என்று நிறைய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களை இயக்குகிறீர்கள். இவை எல்லாம் இயங்க எடுத்துக் கொள்ளும் மெமரி 1 ஜிபிக்கு மேல் செல்கையில், விண்டோஸ் மீதம் உள்ள டேட்டாவினை, ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும். கவலைப்பட வேண்டாம்; வேலை முடிந்தவுடன், விண்டோஸ், ஹார்ட் டிரைவில் எடுத்த இடத்தைக் காலி செய்து உங்களுக்கு வழங்கிவிடும்.
அப்படியானால் கூடுதலாக ராம் மெமரி சிப்களை வாங்கி ஏன் இணைக்கச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். ராம் மெமரி விரைவாகச் செயல்படும். விர்ச்சுவல் மெமரி அப்படி இல்லை. இப்போது புழக்கத்தில் உள்ள புரோகிராம்களுக்கு குறைந்தது 2 ஜிபி ராம் மெமரி வேண்டியதுள்ளது.

நன்றி : http://www.dinamalar.com/Supplementary/cmalar_detail.asp?news_id=1015

திங்கள், ஜனவரி 04, 2010

My Dear Vickey

My Dear Vickey

நீ என்றும் எங்கள் நினைவுகளுடன்

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts