சனி, ஜனவரி 09, 2010

விர்ச்சுவல் மெமரி

விர்ச்சுவல் மெமரி என்பது என்ன?

ஆங்கிலத்தில் இதனை nonphysical memory என்று சொல்வார்கள். விண்டோஸ் தன் சிஸ்டத்தில் பிசிகல் மெமரி எனச் சொல்லப்படும் ராம் மெமரி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றால், விர்ச்சுவல் மெமரியினைப் பயன்படுத்தும். வழக்கமான ராம் மெமரியில் போட்டுப் பயன்படுத்தும் டேட்டாவினை, உங்கள் ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரில் 1 ஜிபி ராம் மெமரி இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் அது, இது என்று நிறைய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களை இயக்குகிறீர்கள். இவை எல்லாம் இயங்க எடுத்துக் கொள்ளும் மெமரி 1 ஜிபிக்கு மேல் செல்கையில், விண்டோஸ் மீதம் உள்ள டேட்டாவினை, ஹார்ட் டிரைவில் வைத்துப் பயன்படுத்தும். கவலைப்பட வேண்டாம்; வேலை முடிந்தவுடன், விண்டோஸ், ஹார்ட் டிரைவில் எடுத்த இடத்தைக் காலி செய்து உங்களுக்கு வழங்கிவிடும்.
அப்படியானால் கூடுதலாக ராம் மெமரி சிப்களை வாங்கி ஏன் இணைக்கச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். ராம் மெமரி விரைவாகச் செயல்படும். விர்ச்சுவல் மெமரி அப்படி இல்லை. இப்போது புழக்கத்தில் உள்ள புரோகிராம்களுக்கு குறைந்தது 2 ஜிபி ராம் மெமரி வேண்டியதுள்ளது.

நன்றி : http://www.dinamalar.com/Supplementary/cmalar_detail.asp?news_id=1015

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts