கர்நாடகா & மும்பை அணிகளிடையே மைசூரில் நடந்த ரஞ்சி இறுதிப் போட்டியில், கர்நாடக வீரர் மணிஷ் பாண்டேவின் அற்புதமான கேட்ச் ‘நூற்றாண்டின் சிறந்த கேட்ச்’ என பிரமிப்புடன் பார்க்கப்படுகிறது. மும்பை அணியின் 2வது இன்னிங்சில் அபிஷேக் நாயர் (50 ரன்) தூக்கி அடித்த பந்தை, சூப்பர் மேன் போல அப்படியே அந்தரத்தில் பறந்து மணிஷ் பாண்டே பிடித்த விதத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நேரடி ஒளிபரப்பில் மிஸ் செய்தவர்கள், யூ டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பார்த்து வாய் பிளக்கிறார்கள். கடந்த வாரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 வீடியோவில் இந்த கேட்ச் இடம் பிடித்துள்ளது. லட்சக்கணக்கான இணையதள ரசிகர்கள் இந்த வீடியோவை மொய்த்தபடி உள்ளனர். இந்தியாவின் ஜான்டி ரோட்ஸ் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மணிஷ், கடந்த ரஞ்சி சீசனில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் (882 ரன், 4 சதம், 5 அரைசதம், சராசரி 63.00) பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நகம் கடிக்க வைத்த பைனலில் மணிஷ் அதிரடியாக 144 ரன் (151 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அசத்தினார். பரபரப்பான அந்த போட்டியில் மும்பை 6 ரன் வித்தியாசத்தில் வென்றது.
தென் ஆப்ரிக்க அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதவுள்ள வாரியத் தலைவர் அணிக்கு மணிஷ் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியிலும் இவர் மிக விரைவில் இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
Visit this youtube : http://www.youtube.com/watch?v=TQAD_ygfS_g
Courtesy : http://www.dinakaran.com/sportsdetail.aspx?id=4802
சனி, ஜனவரி 30, 2010
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக