தில்லி போட்டியில் தோற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் "ஒயிட் வாஷ்' ஆகியுள்ளது ஆஸ்திரேலியா. முன்னதாக 1970-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் "ஒயிட் வாஷ்' தோல்வியைச் சந்தித்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-வது முறையாக இப்போது "ஒயிட் வாஷ்' ஆகியிருக்கிறது.
அதேநேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 4-வது முறையாக "ஒயிட் வாஷ்' தோல்வியைச் சந்தித்துள்ளது. 1886-ல் இங்கிலாந்துக்கு எதிராகவும், 1982-ல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு டெஸ்ட் தொடரில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்பது 6-வது முறையாகும்.
தொடர்நாயகன் அஸ்வின்இந்தத் தொடரில் மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். தில்லி போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டியில் 3-வது முறையாக தொடர்நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.
இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின்.
ஹர்பஜன் சிங் (32 விக்கெட்டுகள், 2000-01, 3 போட்டிகள்), பிஷன் சிங் பேடி (31 விக்கெட்டுகள், 1978-79, 5 போட்டிகள்) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
முதல்முறையாக...இந்தியா முதல்முறையாக தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வென்று 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக 3 முறை 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதில் 1993-ல் இங்கிலாந்தையும், 1994-ல் இலங்கையையும் "ஒயிட் வாஷ்' ஆக்கியுள்ளது இந்தியா.
தில்லியில் 12-வது வெற்றி!தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இதுவரை 32 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, அதில் 12-ல் வெற்றி கண்டுள்ளது.
6-ல் தோல்வி கண்டுள்ள இந்தியா, 14 போட்டிகளை டிரா செய்துள்ளது. கடைசியாக இங்கு விளையாடிய 10 போட்டிகளில் 9-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.
சென்னைக்கு (13 வெற்றி) அடுத்தபடியாக தில்லியில்தான் இந்தியா அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. கடைசியாக இங்கு 1987-ல் மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்தியா தோற்றது. இங்கு இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. தற்போது 3-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
முரளி விஜய் 430இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் இந்தியாவின் முரளி விஜய் முதலிடம் பிடித்தார். 4 போட்டிகளில் விளையாடிய அவர் 2 சதம் உள்பட 430 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் 5-வது இடத்தைப் பிடித்தார்.
இஷாந்துக்கு அபராதம்3-வது நாளில் பட்டின்சனை போல்டாக்கிய இஷாந்த் சர்மா, அவரை வெளியே செல்லுங்கள் என்று கூறுவதுபோல் சைகை காண்பித்தார். இதையடுத்து இஷாந்த் சர்மாவை நடுவர் எச்சரித்தார். எனினும் போட்டி முடிந்த பிறகு விதிமுறைகளை மீறியதாக இஷாந்த் சர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதேபோல் ஜடேஜாவும் நடுவரால் எச்சரிக்கப்பட்டார்.
டாஸூம், தோல்வியும்...இந்தத் தொடரில் 4 போட்டிகளிலுமே டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அனைத்திலும் தோல்வி கண்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் ஓர் அணி 4 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் டாஸ் வென்று அனைத்திலும் தோற்பது 2-வது முறையாகும்.
முன்னதாக ஆஸ்திரேலியாவில் 1978-79-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடரின்போது 6 போட்டிகளில் 5-ல் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, அந்த 5-லும் தோல்வி கண்டு, தொடரை 1-5 என்ற கணக்கில் இழந்துள்ளது.
"பெஸ்ட் கேப்டன்' தோனி இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 8 போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
தோனியின் தலைமையில் இந்திய அணி இதுவரை 47 போட்டிகளில் விளையாடி 24-ல் வெற்றி கண்டுள்ளது. 12-ல் தோல்வி கண்டுள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் வரிசையிலும் தோனி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மனநிறைவு அளிக்கிறதுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருப்பது மனநிறைவு அளிப்பதாக இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். வெற்றிக்குப் பிறகு அவர் மேலும் கூறுகையில், "கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு இப்போது பழிதீர்த்துவிட்டதாகப் பேசுகிறார்கள். ஆனால் அப்படிச் சொல்வது சரியானதல்ல. நாம் அந்த வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. கடினமான சூழலிலும் சிறப்பாக விளையாடி ரன் குவித்த அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடினார்' என்றார்.
பீட்டர் சிடில் 50-50தில்லி போட்டியில் ஆஸ்திரேலியாவின் பீட்டர் சிடில் இரு இன்னிங்ஸ்களிலும் 9-வது வீரராக களமிறங்கி அரை சதம் (51, 50) அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 9-வது வீரராக களமிறங்கி இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கண்ட முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானர்.
http://dinamani.com/sports/article1515698.ece
43 ஆண்டுக்கு பின்
ஆஸ்திரேலிய அணி 43 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக 4-0 என டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்துள்ளது. இதற்கு முன் கடந்த 1969-70ல் தென் ஆப்ரிக்காவிடம் 4-0 என தொடரை இழந்தது.