திங்கள், மார்ச் 25, 2013

43 ஆண்​டு​க​ளுக்​குப் பிறகு...

தில்லி போட்​டி​யில் தோற்​ற​தன் மூலம் டெஸ்ட் கிரிக்​கெட்​டில் 43 ஆண்​டு​க​ளுக்​குப் பிறகு மீண்​டும் "ஒயிட் வாஷ்' ஆகி​யுள்​ளது ஆஸ்​தி​ரே​லியா.​ முன்​ன​தாக 1970-ல் தென் ஆப்​பி​ரிக்​கா​வுக்கு எதி​ராக 4-0 என்ற கணக்​கில் "ஒயிட் வாஷ்' தோல்​வி​யைச் சந்​தித்​துள்​ளது.​ 4 போட்​டி​கள் கொண்ட டெஸ்ட் தொட​ரில் 2-வது முறை​யாக இப்​போது "ஒயிட் வாஷ்' ஆகி​யி​ருக்​கி​றது.​ ​
அதே​நே​ரத்​தில் டெஸ்ட் கிரிக்​கெட்​டில் ஒட்​டு​மொத்​த​மாக 4-வது முறை​யாக "ஒயிட் வாஷ்' தோல்​வி​யைச் சந்​தித்​துள்​ளது.​ 1886-ல் இங்​கி​லாந்​துக்கு எதி​ரா​க​வும்,​​ 1982-ல் பாகிஸ்​தா​னுக்கு எதி​ரா​க​வும் 3 போட்​டி​கள் கொண்ட டெஸ்ட் தொட​ரில் 3-0 என்ற கணக்​கில் ஆஸ்​தி​ரே​லியா தோல்வி கண்​டுள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது.​ ஒரு டெஸ்ட் தொட​ரில் 4 அல்​லது அதற்கு மேற்​பட்ட போட்​டி​க​ளில் ஆஸ்​தி​ரே​லியா தோற்​பது 6-வது முறை​யா​கும்.​
தொடர்​நா​ய​கன் அஸ்​வின்இந்​தத் தொட​ரில் மொத்​தம் 29 விக்​கெட்​டு​களை வீழ்த்​திய அஸ்​வின் தொடர் நாய​கன் விரு​தைப் பெற்​றார்.​ தில்லி போட்​டி​யில் 7 விக்​கெட்​டு​களை வீழ்த்​திய அஸ்​வின்,​​ டெஸ்ட் போட்​டி​யில் 3-வது முறை​யாக தொடர்​நா​ய​கன் விரு​தைப் பெற்​றுள்​ளார்.​
இந்​தத் தொட​ரில் அதிக விக்​கெட் வீழ்த்​தி​ய​வர் என்ற பெரு​மையை மட்​டு​மின்றி,​​ ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொட​ரில் அதிக விக்​கெட்​டு​களை வீழ்த்​திய இந்​திய பந்​து​வீச்​சா​ளர்​கள் வரி​சை​யி​லும் 3-வது இடத்​தைப் பிடித்​துள்​ளார் அஸ்​வின்.​
ஹர்​ப​ஜன் சிங் ​(32 விக்​கெட்​டு​கள்,​​ 2000-01,​ 3 போட்​டி​கள்)​,​​ பிஷன் சிங் பேடி ​(31 விக்​கெட்​டு​கள்,​​ 1978-79,​ 5 போட்​டி​கள்)​ ஆகி​யோர் முதல் இரு இடங்​க​ளில் உள்​ள​னர்.
முதல்​மு​றை​யாக...​இந்​தியா முதல்​மு​றை​யாக தொடர்ச்​சி​யாக 4 போட்​டி​க​ளில் வென்று 4-0 என்ற கணக்​கில் டெஸ்ட் தொடரை வென்​றுள்​ளது.​ இதற்கு முன்​ன​தாக 3 முறை 3-0 என்ற கணக்​கில் டெஸ்ட் தொட​ரைக் கைப்​பற்​றி​யுள்​ளது.​ அதில் 1993-ல் இங்​கி​லாந்​தை​யும்,​​ 1994-ல் இலங்​கை​யை​யும் "ஒயிட் வாஷ்' ஆக்​கி​யுள்​ளது இந்​தியா.
தில்​லி​யில் 12-வது வெற்றி!​​தில்லி ஃபெ​ரோஸ் ஷா கோட்லா மைதா​னத்​தில் இது​வரை 32 போட்​டி​க​ளில் விளை​யா​டி​யுள்ள இந்​தியா,​​ அதில் 12-ல் வெற்றி கண்​டுள்​ளது.​
6-ல் தோல்வி கண்​டுள்ள இந்​தியா,​​ 14 போட்​டி​களை டிரா செய்​துள்​ளது.​ கடை​சி​யாக இங்கு விளை​யா​டிய 10 போட்​டி​க​ளில் 9-ல் இந்​தியா வெற்றி பெற்​றுள்​ளது.​ ஒரு போட்​டியை டிரா செய்​துள்​ளது.​ ​
சென்​னைக்கு ​(13 வெற்றி)​ அடுத்​த​ப​டி​யாக தில்​லி​யில்​தான் இந்​தியா அதிக வெற்​றி​க​ளைப் பெற்​றுள்​ளது.​ கடை​சி​யாக இங்கு 1987-ல் மேற்​கிந்​தி​யத் தீவு​க​ளி​டம் இந்​தியா தோற்​றது.​ இங்கு இது​வரை 7 டெஸ்ட் போட்​டி​க​ளில் விளை​யா​டி​யுள்ள ஆஸ்​தி​ரே​லியா ஒன்​றில் மட்​டுமே வென்​றுள்​ளது.​ தற்​போது 3-வது தோல்​வி​யைப் பதிவு செய்​துள்​ளது.
முரளி விஜய் 430இந்​தத் தொட​ரில் அதிக ரன்​கள் குவித்​த​வர்​கள் வரி​சை​யில் இந்​தி​யா​வின் முரளி விஜய் முத​லி​டம் பிடித்​தார்.​ 4 போட்​டி​க​ளில் விளை​யா​டிய அவர் 2 சதம் உள்​பட 430 ரன்​கள் குவித்​தார்.​ இதன்​மூ​லம் ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொட​ரில் அதிக ரன்​கள் குவித்த இந்​திய தொடக்க ஆட்​டக்​கா​ரர்​கள் வரி​சை​யில் 5-வது இடத்​தைப் பிடித்​தார்.​
இஷாந்துக்கு அப​ரா​தம்​​3-வது நாளில் பட்​டின்​சனை போல்​டாக்​கிய இஷாந்த் சர்மா,​​ அவரை வெளியே செல்​லுங்​கள் என்று கூறு​வ​து​போல் சைகை காண்​பித்​தார்.​ இதை​ய​டுத்து இஷாந்த் சர்​மாவை நடு​வர் எச்​ச​ரித்​தார்.​ எனி​னும் போட்டி முடிந்த பிறகு விதி​மு​றை​களை மீறி​ய​தாக இஷாந்த் சர்​மா​வுக்கு போட்டி ஊதி​யத்​தில் 15 சத​வீ​தம் அப​ரா​த​மாக விதிக்​கப்​பட்​டது.​
இதே​போல் ஜடேஜாவும் நடு​வ​ரால் எச்​ச​ரிக்​கப்​பட்​டார்.​
டாஸூம்,​​ தோல்​வி​யும்...​இந்​தத் தொட​ரில் 4 போட்​டி​க​ளி​லுமே டாஸ் வென்ற ஆஸ்​தி​ரே​லியா அனைத்​தி​லும் தோல்வி கண்​டுள்​ளது.​ டெஸ்ட் கிரிக்​கெட் வர​லாற்​றில் ஒரு தொட​ரில் ஓர் அணி 4 அல்​லது அதற்கு மேற்​பட்ட போட்​டி​க​ளில் டாஸ் வென்று அனைத்​தி​லும் தோற்​பது 2-வது முறை​யா​கும்.​
முன்​ன​தாக ஆஸ்​தி​ரே​லி​யா​வில் 1978-79-ல் நடை​பெற்ற ஆஷஸ் தொட​ரின்​போது 6 போட்​டி​க​ளில் 5-ல் டாஸ் வென்ற ஆஸ்​தி​ரே​லியா,​​ அந்த 5-லும் தோல்வி கண்டு,​​ தொடரை 1-5 என்ற கணக்​கில் இழந்​துள்​ளது.
"பெஸ்ட் கேப்​டன்' தோனி​​ இந்​திய மண்​ணில் ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு எதி​ராக தொடர்ச்​சி​யாக 8 போட்​டி​க​ளில் இந்​தி​யா​வுக்கு வெற்றி தேடித்​தந்த கேப்​டன் என்ற பெரு​மையை தோனி பெற்​றுள்​ளார்.​
தோனி​யின் தலை​மை​யில் இந்​திய அணி இது​வரை 47 போட்​டி​க​ளில் விளை​யாடி 24-ல் வெற்றி கண்​டுள்​ளது.​ 12-ல் தோல்வி கண்​டுள்​ளது.​ 11 போட்​டி​கள் டிரா​வில் முடிந்​துள்​ளன.​
அதிக டெஸ்ட் போட்​டி​க​ளில் இந்​தி​யா​வுக்கு வெற்றி தேடித்​தந்த கேப்​டன்​கள் வரி​சை​யி​லும் தோனி முத​லி​டத்​தில் உள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது.​ ​
மன​நி​றைவு அளிக்​கி​றதுஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்​கில் கைப்​பற்​றி​யி​ருப்​பது மன​நி​றைவு அளிப்​ப​தாக இந்​திய கேப்​டன் தோனி தெரி​வித்​துள்​ளார்.​ வெற்​றிக்​குப் பிறகு அவர் மேலும் கூறு​கை​யில்,​​ "கடந்த ஆண்டு ஆஸ்​தி​ரே​லி​யா​வி​டம் கண்ட தோல்​விக்கு இப்​போது பழி​தீர்த்​து​விட்​ட​தா​கப் பேசு​கி​றார்​கள்.​ ஆனால் அப்​ப​டிச் சொல்​வது சரி​யா​ன​தல்ல.​ நாம் அந்த வார்த்​தை​யைப் பயன்​ப​டுத்​தக்​கூ​டாது.​ கடி​ன​மான சூழ​லி​லும் சிறப்​பாக விளை​யாடி ரன் குவித்த அனைத்து பேட்ஸ்​மேன்​க​ளுக்​கும் நன்றி தெரி​வித்​துக் கொள்​கி​றேன்.​ குறிப்​பாக ரவீந்​திர ஜடேஜா சிறப்​பாக விளை​யா​டி​னார்' என்​றார்.​
பீட்​டர் சிடில் 50-50தில்லி போட்​டி​யில் ஆஸ்​தி​ரே​லி​யா​வின் பீட்​டர் சிடில் இரு இன்​னிங்ஸ்​க​ளி​லும் 9-வது வீர​ராக கள​மி​றங்கி அரை சதம் ​(51,​ 50) அடித்​தார்.​ இதன்​மூ​லம் டெஸ்ட் கிரிக்​கெட் வர​லாற்​றில் 9-வது வீர​ராக கள​மி​றங்கி இரு இன்​னிங்ஸ்​க​ளி​லும் அரை​ச​தம் கண்ட முதல் வீரர் என்ற சாத​னைக்கு சொந்​தக்​கா​ர​ரா​னர்.​ ​


http://dinamani.com/sports/article1515698.ece


43 ஆண்டுக்கு பின்
ஆஸ்திரேலிய அணி 43 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக 4-0 என டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்துள்ளது. இதற்கு முன் கடந்த 1969-70ல் தென் ஆப்ரிக்காவிடம் 4-0 என தொடரை இழந்தது.

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts