புதன், ஜூன் 18, 2014

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

மஞ்சள் - தீமைகளிலிருந்து
நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் ! எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம். புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்து வித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது....

வாழை இலையில் உணவு பரிமாறும் முறை சாப்பிடுவது எப்படி

வாழை இலையில் உணவு பரிமாறும் முறை

வாழை இலையின் இடது மூலையில் உப்பினை வைத்தல் வேண்டும். வலது கீழ்ப்பக்க மூலையில் இனிப்பு பலகாரம், பாயாசம் வைக்க வேண்டும்.மேல்பக
ுதியில் வலதிலிருந்து இடது பக்கமாக பச்சடி, கூட்டுக்கறி, பொரித்த கறி, பால்கறி, வறுவல், ஊறுகாய் ஆகியவற்றையும் வைத்தல் வேண்டும்.இடது பக்கத்தின் கீழ்ப்புறமாக அப்பளம், வடை, பொறியல் பரிமாற வேண்டும். இனிப்பு பலகாரம் அருகில் சித்ரான்னமும், பருப்பு, நெய் பரிமாறவும். அடுத்து, சோறுடன் குழம்பும், அடுத்து ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாற வேண்டும். கடைசியாக தயிர் சோற்றுடன் பரிமாறி முடித்தல் வேண்டும்.

இனி சாப்பிடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிரில் முடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சாப்பாட்டின் போது சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும்.

தெரிந்துகொள்வோம : தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் ...!



1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!
 
நன்றி : https://m.facebook.com/dinakarannews?refid=28&_ft_=qid.6026235272743794241%3Amf_story_key.-4967402461725395451&__tn__=C

செவ்வாய், ஜூன் 10, 2014

மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு !!! ..



மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..

1.
வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;

2.
நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;

3.
தாகவிடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;

4.
கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்;
5.
கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;

6.
பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;

7.
நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.

நன்றி : https://m.facebook.com/story.php?story_fbid=790101874356280&id=100000694231141&_rdr

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts