வியாழன், ஜூலை 17, 2014

இங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்கு இணைக்கப்பட்ட கடிதம் இது :



இந்த கடிதத்தோடு உங்களின் தேர்வு முடிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த சிக்கலான தேர்வு வாரத்தில் நீ காட்டிய அளவில்லாத அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியைக்கண்ட நாங்கள் பெரிதும் பெருமைப்படுகிறோம்.

ஆனால்,இந்த தேர்வுகள் உன்னை தனித்தவராகவும்,சிறந்தவராகவும் ஆக்கும் பண்புகளை முழுமையாக எடை போடாது என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். இந்த வினாத்தாள்களை தயாரிப்பவர்கள்,இவற்றை திருத்துபவர்கள் ஆகிய ஒவ்வொருவருக்கும உங்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் தனித்தனியாக தெரியாது. உங்களை உங்கள் ஆசிரியரோ,பெற்றோரோ,நான் அறிய முயல்கிற மாதிரியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ அற்புதமாக ஒரு இசைக்கருவியை மீட்டுவாய் என்றோ,பிரமிக்க வைக்கிற வகையில் ஓவியம் வரைவாய் என்றோ அல்லது அழகாக நடனம் ஆடுவாய் என்றோ அவர்களுக்கு தெரியாது.

உன் நண்பர்களுக்கு நீ எவ்வளவு முக்கியமானவர் என்றோ,உன்னுடைய ஒரு புன்னகை அவர்களின் ஒரு நாளை எவ்வளவு சிறப்பானதாக ஆக்கிவிடும் என்றோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ கவிதையோ,பாடலோ எழுதுவாய் என்றோ அல்லது விளையாட்டுகளில் பங்கு பெறுகிறாய் என்றோ அல்லது சிலசமயங்களில் பள்ளி முடிந்த பின்னர் உன்னுடைய குட்டித்தம்பி அல்லது தங்கையை கவனித்துக்கொள்கிறாய் என்றோ அவர்களுக்கு தெரியாது. நீ கச்சிதமான ஒரு இடத்துக்கு பயணம் போய் வந்திருக்கிறாய் என்றோ,ஒரு சிறந்த கதையை அசந்து போகிற வகையில் உனக்கு சொல்லத்தெரியும் என்றோ, முக்கியத்துவம் வாய்ந்த நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களோடு நேரம் செலவிட்டாய் என்றோ அவர்களுக்கு தெரியாது. நீ நம்பிக்கைக்குரியவன்,கருணையானவன அல்லது யோசிக்கக்கூடியவன் என்பதோ,நீ ஒவ்வொரு நாளும் உன்னுடைய பெஸ்ட்டை தர முயல்கிறாய் என்பதோ அவர்களுக்கு தெரியாது. இந்த முடிவுகள் எதோ சிலவற்றை சொல்கின்றன,ஆனால,அவை உன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லவில்லை.

இந்த முடிவுகளை கொண்டாடுங்கள்,வற்றை பற்றி பெருமிதப்படுங்கள். அதே சமயம் நீ சாமர்த்தியசாலியாக இருப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்

https://m.facebook.com/photo.php?fbid=789173177780427&id=100000632559754&set=a.272060919491658.69030.100000632559754&refid=7&_ft_=qid.6036966059671400313%3Amf_story_key.-1876577079999907819&__tn__=*s

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts