செவ்வாய், மே 06, 2014

10th Picnic to Nanjunkodu, Shivasamudram Waterfalls, etc on 04-05-2014 [Sunday]

* 04:30 am [04-05-2014 Sun] – We begin our 10th Pinic, with our friends Bharathi, Chithambaram,Palanisamy [Sakthi] Anna, Pojaraj, Shampu, Senthil [Eswaran], Vijian and Driver anna.
* 04:45 am – Pooja @ Puthumariamman Kovil [Vijian], Kasiplayam, Gobichettipalayam
* 05:45 am – Pooja @ Bannari Amman Kovil [Vijian], Bannari, Sathiytamangalam
* 07:00 am – Morning refreshment @ Near Chamraj nagar
* 07:40 – 08:15 am – Nanjankodu Kabila river water bath
* 08:30 – 10:30 am – Srikanteshwara Dharsanam
“Nanjundeshwara (Srikanteshwara) Temple, Nanjangud is situated on right banks of Kapila (Kabini) River and is one of the oldest temples in India. The Shiva Linga in the temple is believed to be installed by the sage Gauthama who had stayed here for some time. This Shiva Linga was also worshiped by Parashurama when he had stayed for some time in this town on his journey to get cleansed from the sin of beheading his mother.
* 10:30 am – Breakfast [Idli with Satni & Guruma]
* 11:30 am – 12:15 pm – Chennakesava Temple, Somanathapura
The Chennakesava Temple (Kannada: ಶ್ರೀ ಚೆನ್ನಕೇಶವ ದೇವಸ್ಥಾನ) (also spelt Chennakeshava) located at Somanathapura is one of the finest examples of Hoysala architecture. The temple was built by Soma, a Dandanayaka (lit, “commander”) in 1268 C.E. under Hoysala king Narasimha III, when the Hoysala Empire was the major power in South India.
* 12:45 – 01:30 pm – Lunch @ Talakad
* 02:00 – 04:00 pm – Talakad The 10th century Pataleshvara temple, River, etc.,
Talakad or Talakadu is a desert-like town on the left bank of the Kaveri river at a spot where the river makes a sharp bend. It is 45 km from Mysore and 133 km from Bangalore in Karnataka, India. A historic site, Talakadu once had over 30 temples, most of which lay buried in sand. The extant goup of temples is a popular pilgrimage site for Hindus. Here the eastward flowing Kaveri river changes course as the sand on its banks spreads over a wide area.
* 05:15 – 06:15 pm – Shivanasamudra Falls [Bharachukki.]
The Shivanasamudra Falls is on the Kaveri River after the river has wound its way through the rocks and ravines of the Deccan Plateau and drops off to form waterfalls. The island town of Shivanasamudra divides the river into twin waterfalls. This creates the fourth largest island in the rivers course. A group of ancient temples are located here and there likely was a village.
* 09:45 pm – respective Home.
So far,
1. 00-00-2002 [Sunday] – Ooty & Then Thiruppathi
2. 27-05-2003 [Sunday] – Kodaikanal & Palani
3. 30-05-2004 [Sunday] – Guruvayoor & Thiruchur
4. 22-05-2005 [Sunday] – Thekkadi, Suruli Falls, Kutchnur Saneshwar Kovil
5. 29-04-2006 [Sunday] – Samundeshwar Kovil, Mysore & Krishnaraja sekar Dam
6. 27-06-2010 [Sunday] – Yercaud & 1008 shivalinghas
7. 04-06-2111 [Sunday] – Munnar
8. 14-05-2012 [Sunday] – Kollimalai
9. 12-05-2013 [Sunday]- Ooty
10. 04-05-2014 [Sunday] – Nanjunkodu, Shivasamudram Waterfalls, etc

வெள்ளி, மார்ச் 28, 2014

உளவியல் சொல்லும் உண்மைகள்



1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.
3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.
4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.
7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

வெள்ளி, பிப்ரவரி 28, 2014

படிப்பது எப்படி?

படிப்பதன் நோக்கம் என்ன? என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். “பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், அறிவை பெருக்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பழக்கங்ளை நீக்கிக் கொள்வதற்கும், ஆளுமையை மேம்படுத்துவதற்கும் முழுமையாகப் பயன்படுவதுதான் படிப்பதன் முக்கிய நோக்கம்” – என்பதை பள்ளிப் பருவத்தில் அறிந்து கொண்டவர்கள் தங்கள் படிக்கும் பழக்கத்தை நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்.
எவ்வாறு படிக்க வேண்டும்? என்பதை அறிந்துகொள்வது தான் படிக்கும் பழக்கத்தின் முதல்படி ஆகும். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களின் கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். வெவ்வேறு விதமான படிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி “கற்றல்” (Learning) கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தான் கற்கும் முறை சரியானதுதானா? என்பதுகூட தெரியாமல் சில மாணவ – மாணவிகள் பள்ளிகளில் பாடங்களை படிப்பதும் உண்டு. எனவே முறைப்படி கற்கும் கலையைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

ஒரு நிகழ்வில் இருந்துகூட பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் விளையாட்டாக விளையாடும்போதும் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக – நாம் பார்க்கும் பார்வைகள் (Sight), கேட்பவைகள் (Hearing), செய்யும் செயல்கள் (Doing) ஆகியவற்றின்மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
“மெய்”, “வாய்”, “கண்”, “மூக்கு”, “செவி” – என்னும் இந்த ஐம்புலன்களும் (Five Senses) நம்மைச் சுற்றி நடக்கின்ற பல்வேறு தகவல்களை நம் மனதினுள் கொண்டுவருகிறது. இந்தத் தகவல்களை முறைப்படுத்தி தேவையானவற்றை மட்டும் உள்வாங்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் படிக்கும் காலத்திலேயே “நெறிவாழ்க்கை” வாழ்வதற்கான பயிற்சியை எளிதாகப் பெற்றுவிடலாம்.

“பார்த்தல்”, “கேட்டல்”, “செய்தல்” – ஆகிய 3 முறைகளையும் பயன்படுத்தி முறையாக கல்வி கற்க வேண்டும்.

“பார்த்தல்” எனப்படும் “பார்வை” என்பதுதான் கற்பவருக்கு அவர் படித்தத் தகவல்களை எளிதான முறையில் நினைவில் கொண்டுவருவதற்கு உதவுகிறது. எனவே பாடத்தை கவனமுடன் படிக்கும்போது எவற்றையெல்லாம் படிக்க வேண்டும்? என்பதை மனதிற்குள் முதலில் காட்சிப்படுத்திக் (Visualisation) கொள்ள வேண்டும்.

“காட்சிப்படுத்துதல்” என்பது செய்யவேண்டிய செயல்களை மனக்கண்ணில் கொண்டுவந்து ஒவ்வொன்றாக சிந்தித்து பார்ப்பது ஆகும். உதாரணமாக – “இன்று மாலை படிக்க வேண்டும்? என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் காட்சிப்படுத்துதல் முறையில் இதனைப்பற்றி இப்படி கீழ்க்கண்டவாறு சிந்திக்கலாம்.
நான் பள்ளியைவிட்டு 4 மணிக்கு வீட்டுக்கு புறப்பட வேண்டும். சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும்போது மணி 4.30 ஆகிவிடும். முகம் கழுவ வேண்டும். அம்மா டீ தருவார்கள். அதனை சாப்பிட்டு முடிக்கும்போது மணி 5 ஆகிவிடும். அதன்பின்னர் முதலில் ஆங்கிலம் பாடத்தை படிக்கவேண்டும். ஆங்கிலப் பாடத்தை படித்தபின்பு அறிவியல் பாடத்தை முடிக்க வேண்டும். பின்பு “ஹோம் வொர்க்”கை செய்துமுடிக்க வேண்டும். இரவு 7 மணி வரை படித்தபின்பு கொஞ்சநேரம் டி.வி. பார்க்க வேண்டும் 7.30 மணிக்கு சாப்பிட்டுவிட்டு செய்தித்தாள்கள் படிக்கவேண்டும். சாப்பிடும்போது அம்மாவிடமும், தங்கையிடமும் இன்று நடந்த செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். 8.30 மணியிலிருந்து 10.30 மணிவரை மீண்டும் பாடங்களைப் படிக்க வேண்டும்” – என்று காட்சிப்படுத்துதல் முறையில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
ஒரு திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள்போல செய்யவேண்டிய பணிகளை முறைப்படுத்தி மனதிற்குள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதைத்தான் “காட்சிப்படுத்துதல்” என அழைப்பார்கள்.
படிப்பது மட்டுமல்ல, எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் “காட்சிப்படுத்துதல்” அந்த செயல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். செய்ய வேண்டிய செயல்களை காட்சிப்படுத்துதல் மூலம் முன்கூட்டியே திட்டமிட்ட பின்பு அதனை நடைமுறைப்படுத்துவது எளிதாகும்.
காட்சிப்படுத்துதலை அடுத்து எப்படி படிக்க வேண்டும்? என்பவற்றையும் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும். படிப்பதற்காக நேரம் ஒதுக்கி வீட்டில் படிக்கும் நேரத்தில் தேவையான நோட்டுப் புத்தகங்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தேவையான புத்தகங்களும், நோட்டுகளும் எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் “தேடுதல் வேட்டை”யில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகிவிடும்.
வகுப்பில் பாடவேளையில் எடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்ட நோட்டுகளையும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குறிப்பு நோட்டுகளில் குறிக்கப்பட்ட மிகவும் முக்கியமான குறிப்புகளை மட்டும் கலர் பென்சில் கொண்டு அடிக்கோடு இட்டுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் முக்கியக் குறிப்புகளை மனதில் எளிய முறையில் பதியச் செய்யலாம்.
வகுப்பில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களையும் காட்சிப்படுத்துதல் முறையில் அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். தேவையான இடங்களில் படங்கள் வரையவும், வரைபடங்களை பயன்படுத்தவும் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். சிலவேளைகளில் பாடங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்கவில்லையென்றால் இண்டர்நெட்டை பயன்படுத்தி இணையதளங்கள் மூலம் படிக்கும் பாடத்திற்கு உதவும் வகையில் அதிக தகவல்களை அதிகமாக சேகரித்துக் கொள்வதன் மூலமும் பாடங்களை எளிதில் கற்க இயலும்.
சிறந்த முறையில் படிப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு ஆடியோ சி.டிக்கள் (CD) வெளிவந்துள்ளன. அதைப்போலவே வீடியோ சி.டி.க்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாடத்தை எளிதாக கற்கும் வகையில் அந்தவகை சி.டி.க்கள் உதவுவதால் அவைகளையும் பயன்படுத்தி கற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தனியாக இருந்து அறையில் படிக்கும்போது படித்தவற்றை திரும்ப ஒருமுறை புத்தங்களைப் பார்க்காமல் சொல்லிப்பார்த்து நினைவாற்றலை வளர்க்கலாம். மேலும் நெருங்கிய வகுப்பு நண்பர்களை சந்தித்தும் தான் படித்த பாடங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டு பாடம் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
வகுப்பில் ஆசிரியர்கள் சிலவேளைகளில் குழு விவாதம் (Group Discussion) மூலம் பாடங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவார்கள். அந்தவேளைகளில் ஆர்வத்தோடு மற்ற குழு உறுப்பினர்களோடு சேர்ந்து கருத்துக்களை பரிமாறுவதற்கும், முரண்பாடுகள் இல்லாமல் மற்ற குழு உறுப்பினர்களோடு பழகுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். குழு விவாதத்தின்போது ஒருவர் தனது பகுப்பாய்வு திறனையும் (Analytical Skill), முடிவெடுக்கும் திறனையும் (Decision Making Skill), பிறறோடு இணைந்து பழகும் திறனையும் (Interpersonal Skill) வளர்த்துக் கொள்வதற்கு அருமையான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு குழு விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும். அப்போதுதான் அறிவாற்றலையும், மற்றவர்களோடு பிரச்சினை இல்லாமல் இணைந்து பழகும் திறனையும் வளர்க்க இயலும்.
அறையில் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து பல மணிநேரங்கள் படிக்கும்போது களைப்பு ஏற்படலாம். இந்தக் களைப்பைப் போக்குவதற்கு இடையிடையே எழுந்துநின்று கொள்ளலாம். சிலவேளைகளில் புத்தகத்தை மூடிவைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக கொஞ்சநேரம் நடந்தும் வரலாம். தொடர்ந்து படிக்கும்போது ஏற்படும் களைப்பை நீக்குவதற்கு இடையிடையே இடைவெளிவிட்டு (Breaks) படிப்பது நல்லது.
படித்த பாடங்கள் எளிதில் நினைவில் நிற்கும் வகையில் படித்தவற்றை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப்பார்ப்பது நல்லது. இதேபோல் அறிவியல் பாடங்களில் உள்ள சோதனைகளை (Experiments) வீட்டில் தனியாக செய்து பார்த்து அந்தப் பாடம் பற்றி மேலும் கற்றுக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டும்.
படிப்பது என்பது நினைவுக்கலையை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி என்பதை புரிந்துகொண்டவர்கள் சிறுவயது முதலே பாடங்களை ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்.
மனதை ஒருமுகப்படுத்தவும், திறமைகளை வளர்க்கவும், வாழ்க்கையை வளப்படுத்தவும் கல்விதான் மிகப்பெரிய துணை என்பதை அனைவரும் புரிந்துகொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்.

நன்றி :
ஆசிரியர் :
http://thannambikkai.org/2013/11/07/17979/

புதன், பிப்ரவரி 12, 2014

லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்



அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள் .


பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது , கோழைத்தனம் என புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடிலா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.


வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும்,சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் ,பசுமையான மலை யடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.


மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என அறிவுறுத்துங்கள் .எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள் .. துயரமான வேளைகளில்

சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள் ;. போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்


சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.


இப்படிக்கு,
ஆபிரஹாம் லிங்கன்.

நன்றி : மூலத்திற்கு

வெள்ளி, பிப்ரவரி 07, 2014

சிதம்பர இரகசியம் என்றால் என்ன...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான இரகசியங்கள் மற்றும் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.

சிதம்பரம் நடராஜர் கோயில் இரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

(1) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்சபூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது "மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்" என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்தப் படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

வெள்ளி, ஜனவரி 03, 2014

மூன்று


மிகக் கடினமானவை மூன்றுண்டு

1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.

நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்

1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்றுண்டு

1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு

1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று வகையிலுண்டு

1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்

1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

https://www.facebook.com/ragavi.priya.509?sk=wall

திங்கள், டிசம்பர் 30, 2013

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும் ?

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும் ? 1. வருமானம் 2. ஒத்துழைப்பு 3. மனித நேயம் 4. பொழுதுபோக்கு 5. ரசனை 6. ஆரோக்கியம் 7. மனப்பக்குவம் 8. சேமிப்பு 9. கூட்டு முயற்சி 10.குழந்தைகள் கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன? 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். 14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். 16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். 17. ஒளிவு மறைவு கூடாது. 18. மனைவியை நம்ப வேண்டும். 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும். 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது. 21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும். 22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும். 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும். 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது. 27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி. 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். 29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும். 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும். 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும். 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும். 34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது. 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும். மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். 2. காலையில் முன் எழுந்திருத்தல். 3. எப்போதும் சிரித்த முகம். 4. நேரம் பாராது உபசரித்தல். 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது. 8. அதிகாரம் பணணக் கூடாது. 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது. 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும். 11. கணவனை சந்தேகப்படக் கூடாது. 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது. 13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும். 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது. 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும். 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும். 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது. 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும். 20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும். 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும். 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும். 24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும். 25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும். 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது. 27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும். 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும். 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது. 32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது? பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள். 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள். 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம். 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல். 4. விரும்பியதைப் பெற இயலாமை. 5. ஒருவரையொருவர் நம்பாமை. 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை. 7. உலலாசப் பயணம் போக இயாலாமை. 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை. 9. விருந்தினர் குறைவு. 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல். 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை. 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு. 13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல். 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு. பத்து கட்டளைகள்: 1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள். 2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள். 3.இன்சொல் கூறுங்கள். ‘நான்’, ‘எனது’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள். 4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள். 5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள். 6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள். 7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள். 8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். 9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள். 10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள். வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம். https://www.facebook.com/gurutamilnews

சனி, டிசம்பர் 14, 2013

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன. 4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன. திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன. ==================== 1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. 2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும். 3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும். 4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். 5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது. 6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும். 8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய். 9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. 10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள். 11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி. 12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார். 13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார். 14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை. 15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. 16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார். 17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. 18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம். 19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். 20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார். 21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர். 22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள். 23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன. 24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது. 25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும். 25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார். 26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன. 27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார். 28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன

வெள்ளி, நவம்பர் 29, 2013

உன்னதமான உறவு

ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் ,ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு .ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு . புது புது உறவுகளை உருவாக்க கூடியது .இதை விட புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல்லை, இது ஒரு தெய்விகமான உறவு .

இன்றைய காலகட்டத்தில் நமது அறியாமையால், நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்கின்ற பொருளாதார சிக்கல்களினால், அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளால் ,
தனது ஆதிக்கமே நடைபெற வேண்டுமென்ற தன்முனைப்பால் உண்மையான உறவுகள் பல உடைந்து போகின்றது .

ஒருவரின் பெருமையை ஒருவர் உணராத சிறுமையால் இன்று பரவலாக பல இல்லங்களில் கணவன் மனைவி உறவு தன் புனிதத்தை இழந்து புழுதியாகிவிட்டது ,இந்த உறவின் வீழ்ச்சியால் தான் உருவாகிறது ,சமூகதின் அத்தனை வீழ்ச்சிகளும் .உடல்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்து கொள்ளாததே இந்த வீழ்ச்சிக்கு முழுக்காரணம் .எந்த வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி ஆண் வெற்றி பெறுகிறானோ ,அங்கே வெல்வது ஒரு மிருகம் ,எந்த வீட்டில் ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாளோ அங்கே ஒரு பிடாரி ஜெயித்ததாகப் பொருள் .

தலை தாழ்ந்த பெண்ணும் தலை உயர்த்திய ஆணும் உள்ள இல்லத்தில் இருமனம் இணைந்து அன்பாலும் நம்பிகையாலும் இன்ப துன்பங்களை இணைத்து பகிர்கிறது .


நன்றி : https://www.facebook.com/first.scientists?ref=stream

வியாழன், அக்டோபர் 24, 2013

தெலுங்கு விஸ்வகர்மாக்களின் வீட்டுப்பெயர்கள்



  குலப்பெயர்              ரிஷி கோத்ரம் 

1 மிண்டுகண்டூர் வார்ளு         - மானூஷ மனுரிஷி கோத்ரம்
2 பூவோஜூர் வார்ளு - தக்ஷரிஷி கோத்ரம்
3 முத்தோஜூர் வார்ளு - ப்ரவாரிஷி கோத்ரம்
4 கட்டாரூர் வார்ளு         - ஜயதரிஷி கோத்ரம்
5 எக்டோஜூர் வார்ளு - பாலபோதரிஷி கோத்ரம்
6 எடகோடூர் வார்ளு         - பரிசங்குரிஷி கோத்ரம்
7 கதிரூர் வார்ளு         - ஸனாதனரிஷி கோத்ரம்
8 அப்பனூர் / அப்போஜூலு வார்ளு - பக்ஞஸேனரிஷி கோத்ரம்
9 போத்தனூ / போத்தோஜூலு வார்ளு - ப்ரசிக்ஷரிஷி கோத்ரம்
10 தோடூர் / தோட்ட வார்ளு - விதாதுரிஷி கோத்ரம்
11 ஆதிவூர் வார்ளு         - சுவேதரிஷி கோத்ரம்
12 பாலகுடூர் வார்ளு - பாலபோதமனுரிஷி கோத்ரம்
13 சுரிகிலூர் வார்ளு - ஸுனந்த மனுரிஷி கோத்ரம்
14 அரிசந்திரமூர் வார்ளு         - ஸுகுர்தரிஷி கோத்ரம்
15 மூளிகண்டூர் வார்ளு - மானூஷ மனுரிஷி கோத்ரம்
16 குந்தூர் வார்ளு         - ஸனத்குமாரரிஷி கோத்ரம்
17 நூனகண்டூர் வார்ளு - யக்னஸேனரிஷி கோத்ரம்
18 நூலேடூர் வார்ளு         - யக்னஸேனரிஷி கோத்ரம்
19 குப்பிலூர் வார்ளு         - ஜய்தரிஷி கோத்ரம்
20 கத்தலூர் வார்ளு         - ஸுமேதரிஷி கோத்ரம்
21 சேகிலூர் வார்ளு         - தார்மினிரிஷி கோத்ரம்
22 கல்லகோடூர் வார்ளு         - ஜய்த்ருரிஷி கோத்ரம்
23 மகாதேவியூர் வார்ளு         - மானூமூமனுரிஷி கோத்ரம்
24 திப்பூர்  வார்ளு         - விஸ்வதரிஷி கோத்ரம்
25 நலுபோச்சலூர் வார்ளு         - பன்னரிஷி கோத்ரம்

                            முதல் வரிசையினர்

=====================================


  குலப்பெயர்             ரிஷி கோத்ரம்
1 வெங்ககோஜூர் வார்ளு         - கஸிபரிஷி கோத்ரம்
2 மத்திகண்டூர் வார்ளு - மாமன்யுடுதரிஷி கோத்ரம்
3 சிந்தோஜூர் வார்ளு - சித்ரதர்மரிஷி கோத்ரம்
4 வாட்டமூர் வார்ளு         - விப்ராஜரிஷி கோத்ரம்
5 ராஜமூர் வார்ளு         - சித்ரவஸூரிஷி கோத்ரம்
6 வரபலூர் வார்ளு         - விஸ்வாத்ரிஷி கோத்ரம்
7 திக்கோஜூர் வார்ளு - தாபரிஷி கோத்ரம்
8 பந்துகோலூர் வார்ளு - பானுமதிரிஷி கோத்ரம்
9 வட்லூர் வார்ளு         - விஸ்வக்ஞரிஷி கோத்ரம்
10 பெணுகொண்டூர் வார்ளு - அர்ச்சதரிஷி கோத்ரம்
11 யெர்னோஜூர் வார்ளு         - கார்த்தமரிஷி கோத்ரம்
12 ஸோமோஜூர் வார்ளு         - செளஸேனரிஷி கோத்ரம்
13 நனபரோஜூர் வார்ளு - நிகமரிஷி கோத்ரம்
14 கந்துகூர் வார்ளு         - செளக்ஞரிஷி கோத்ரம்
15 ஸெக்கூர்  வார்ளு - ஆதித்யஸேனரிஷி கோத்ரம்
16 கூராகூர் வார்ளு         - உபகல்யரிஷி கோத்ரம்
17 தங்கடகொண்டூர் வார்ளு - தேஜேதருமரிஷி கோத்ரம்
18 கோலுகொண்டூர் வார்ளு - யக்ஞகரிஷி கோத்ரம்
19 யெப்படமூர் வார்ளு - பாராச்சதரிஷி கோத்ரம்
20 குண்டோஜூர் வார்ளு         - உபசோபரிஷி கோத்ரம்
21 மஞ்சாலுர் வார்ளு         - மூனீஸ்வாதரிஷி கோத்ரம்
22 போத்தமநோட்டியூர் வார்ளு - ஸூதர்ஸனரிஷி கோத்ரம்


                           இரண்டாம் வரிசையினர்

முதல் வரிசையினரும் இரண்டாவது வரிசையிரும் ஒருவருக்கொருவர் சம்பந்தி முறையினர்

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts