புது தில்லி, ஜூன் 17: மேற்கிந்தியத் தீவுகளுடனான ஒரு தின கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், ஜாகீர் கான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும், சுரேஷ் ரெய்னா, வீரேந்திர சேவாக் ஆகியோர் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை எனவும் கிரிக்கெட் வாரியச் செயலர் என்.சீனிவாசன் புதன்கிழமை அறிவித்தார்.
4 ஆண்டுகளுக்குப் பின் தேசிய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா இடம்பிடித்துள்ளார். தமிழக வீரர்கள் முரளி விஜய், எஸ்.பத்ரிநாத், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் நாயர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
20-20 உலகக் கோப்பையில் விளையாடிய இர்பான் பதான் அணியிலிருந்து நீக்கப் பட்டார்.
இந்திய அணி இங்கிலாந்திலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு வியாழக்கிழமை செல்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஒரு தின ஆட்டங்கள் ஜமைக்காவில் ஜூன் 26 மற்றும் 28-ம் தேதிகளிலும், செயின்ட் லூசியாவில் ஜூலை 3 மற்றும் 5-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன.
அணி விவரம்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), யுவராஜ் சிங் (துணைக் கேப்டன்), கெüதம் கம்பீர், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, யூசுப் பதான், முரளி விஜய், எஸ்.பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரவீன் குமார், இஷாந்த் சர்மா, அபிஷேக் நாயர், ஆஷிஷ் நெஹ்ரா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.
source : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sports&artid=75350&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=
வியாழன், ஜூன் 18, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக