செவ்வாய், ஜூன் 30, 2009

நண்பன்

நாய்க்குப் பேரு முத்து மாலையாம்
நாய்க்கு நெய் செரிக்காது
நாய்க்கு வேலையில்லை, ஆனால் நிக்க நேரமில்லை
நாயக் குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் ...
ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்
கல்லைக் கண்டா நாயக் காணோம் ; நாயக் கண்டா கல்லைக் காணோம்
நாய் கையில கிடைச்ச தேங்காய் மாதிரி - தானும் திங்காது , அடுத்தவனையும் திங்க விடாது
நாய் வால நிமிர்த்த முடியாது
நாயக் கொஞ்சினா வாய நக்கும்
நாய்க்கு வாக்கப்பட்டா குரைச்சு தான் ஆகணும்
நாய் சகவாசம் சேலையக் கிழிக்கும்
குரைக்கிற நாய் கடிக்காது
நாய் நக்கி சமுத்திரம் வத்திப் போயிடுமா ?
நாய் விற்ற காசு குறைக்காது
நாய் குரைச்சு விடியுமா? கோழி கூவி விடியுமா ?
நாய் கேட்ட கேட்டுக்கு மாமரத்து நிழலாம்
சூரியனப் பார்த்து நாய் குரைக்கிற மாதிரி
உங்களுக்குத் தெரிந்த , இதில் விட்டுப் போன பழமொழிகளை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts