வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் அசத்திய இந்திய அணி, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
தொடரும் வெற்றிநடை:
கடந்த 2002ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. தற்போது தோனியின் அணி இரண்டாவது முறையாக தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது. தவிர ஒருநாள் போட்டிகளில் தோனி தலைமையிலான அணியின் வெற்றிநடை தொடர்கிறது. கடந்த ஆண்டு இலங்கை, இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்றது. இந்த ஆண்டு இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களை கைப்பற்றியது. தற்போது வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்தி, தொடர்ந்து 5வது ஒரு நாள் தொடரை வென்றுள்ளது
Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=2874&Value3=I
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக