Longest Solar Eclipse in India on 22-07-09 @ 05:28 - 07:40am [IST]
The next solar eclipse will occur Jan 15, 2010.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும்போது சூரியகிரணம் ஏற்படுகிறது.
ஜோதிட ரீதியாகப் பார்த்தல் சூரியன், சந்திரன் ஆகியவை ராகு- கேது சேர்க்கை பெற்று சஞ்சரிக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. 22-ந்தேதி அன்று நடைபெறும் சூரிய கிரகணத்தின்போது கேதுவுடன் சேர்க்கை பெற்று சூரியன், சந்திரன் ஆகிய கிரகணங்கள், கடகத்தில் சஞ்சரிக்கிறார்கள்.
இக்கிரகணம் 22-ந்தேதி காலை 5.29 மணிக்கு தொடங்கி 7.18 மணிக்கு முடிவடைகிறது.
இக்கிரகணம் பூச நட்சத்திரத்தில் உண்டாவதால் புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரக்காரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள 5 நட்சத்திரக்காரர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த 5 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் கூறியதாவது:-
புனர்பூசம்:- புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் சூரிய கிரகண தோஷம் நீங்க குரு, விஷ்ணு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. ஏழைகளுக்கு கொண்டைக்கடலை, கொள்ளு தானம் செய்வது சிறப்பை தரும்.
பூசம்:- பூசம் நட்சத்திரக்காரர்கள் விநாயகர், சிவன், பார்வதியை வழிபட வேண்டும். கோவில்களுக்கு சென்று எள்ளு, கொள்ளு தானம் செய்வது நல்லது. பார்வையற்றோருக்கு உதவி செய்வது சிறப்பை தரும்.
ஆயில்யம்:- ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் விஷ்ணு, பார்வதி, பெரு மாள் கோவில்களுக்கு சென்று வழிபடுவது நல்லது. பச்சைப்பயிர், கொள்ளு தானம் செய்வது சிறப்பைத் தரும். ஊனமுற்றோருக்கு நிதி உதவி செய்யலாம்.
அனுஷம்:- அனுஷம் நட்சத்திரக்காரர்கள் ஆஞ்சநேயர், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். எள்ளு, கொள்ளு தானம் செய்வது சிறப்பை தரும். ஏழை, முதியோருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
உத்திரட்டாதி:- உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தட்சிணாமூர்த்தி, சிவன், விநாயகர் கோவில்களில் வழிபாடு செய்வது சிறப்பை தரும். கொள்ளு, எள்ளு தானம் செய்வது மிகவும் நல்லது. ஊனமுற்றோர்- பார்வையற்றோருக்கு இயன்ற உதவிகளை செய்யலாம்.
பொதுவாக சூரிய கிரகணத்திற்கு பிறகு குளித்து விட்டு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பை தரும். ஏழை- எளியோருக்கு தானியங்களை தானம் செய்வது நல்லது.
கிரகணத்தன்று வீடு களிலும் சிறப்பு வழிபாடு செய்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.
இவ்வாறு ஜோதிடர் முருகு பாலமுருகன் கூறினார்.
Source : http://www.maalaimalar.com/2009/07/14121337/CNI0250140709.html
செவ்வாய், ஜூலை 14, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக