சனி, ஜூலை 04, 2009

நியூரல் நெட்வொர்க்ஸ், ஆர்டிஃப்சியல் இண்டலிஜென்ஸ்

எம்.சி.ஏ-என்று ஒரு PG படிப்பு...உடனே, மாஸ்டர் ஆஃப் குக்கிங் அசிஸ்டெண்ட்ன்னு நினைக்காதீங்க! பி.ஈ (கம்ப்யூட்டர் சயின்ஸ்-க்கு) அடுத்து ரொம்ப சூடான படிப்பு!!

மூன்று வருடங்கள்.அதில் 6 மாதங்கள்(கடைசி செமஸ்டர்) ப்ராஜக்ட்!
பி ஈ சேர இயலாதவர்களுக்கு நல்ல சான்ஸ்..ஏறக்குறைய பி.ஈ (கம்ப்யூட்டர் சயின்ஸ்)-இல் வரும் அதே பேப்பர்கள்தான். சில பேப்பர்கள் அதிகமாகவும் இருக்கும்.
30-32 பேப்பர்கள், அப்ளிகேஷன் சார்ந்தது-என்பதால் கொஞ்சம்
ஹெவியாகவும் இருக்கும். (ஒரு சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் ஆகற அளவுக்கு!)

நியூரல் நெட்வொர்க்ஸ், ஆர்டிஃப்சியல் இண்டலிஜென்ஸ்,
க்ராபிக்ஸ், எக்ஸ்பர்ட் சிஸ்டம்ஸ், ரோபோட்டிக்ஸ், கம்பைலர் டிசைன்,
என்று ரொம்ப சுவாரசியமான பாடங்கள் இருக்கும்! சுவாரசியமா இல்லையா எனபது, அதை எடுக்கும் பேராசிரியகர்களையும், நம்முடைய ஆர்வத்தையும் பொறுத்தது!

நியூரல் நெட்வொர்க் என்பது, நம் மூளையில இருக்கும் ஆயிரக்க்கணக்கான் நியுரான்கள் எப்படி வேலை செய்கின்றனவோ அதே போல், ஒரு கம்ப்யூட்டர் (node)நோடை சிமுலேட் செய்வது,அது எப்படி மற்ற நோட்களுடன் வேகமாக தொடர்பு கொண்டு வேலை செய்வது ம்ற்றும் கற்றுகொள்ளும் திறனையும் செயற்கையாக வரவைப்பது!
(யாராவது எக்ஸ்பெர்ட்ஸ் இருந்தா கரெக்ட் பண்ணுங்க, ரொம்ப காலம்
ஆச்சு அதயெல்லாம் படிச்சு!)!!

இன்னொரு சுவாரசியமான் பேப்பர், ஆர்டிபீசியல் இண்டலிஜென்ஸ் - கம்பியூட்டருக்கு ஐ.க்யூ வை செயற்கையாக புகுத்தி மனித மூளை போல் செயல்படவைப்பது. இப்போ நம்ம ஃபிரிஜ்-ல பால் இல்லன்ன உடனே, நம்ம ப்ரிஜ் பால் பூத்துக்கு செய்தி அனுப்பி, பால் நம்ம வீட்டு வாசலுக்கே வந்து விடும். இது ஒரு சின்ன உதாரணம்.ஒருவேளை சுஜாதா கதைகளில் இன்னும் அதிகமா சொல்லப்ப்ட்டிருக்கலாம்.

எக்ஸ்ப்ர்ட் சிஸ்டம் என்பது, எந்த் உதவி வேண்டும் என்றாலும் நாம் அணுகக் கூடிய ஒரு
சிஸ்டம். மனிதனுக்கு பதில்!! அது ஒரு துறை சார்ந்த எக்ஸ்ப்ர்ட்டாக இருக்கும். உதாரணதுக்கு, இப்பொ நமக்கு உடம்பு சரியில்லன்ன, டாக்டர்கிட்ட போக வேணாம். அதான் எல்ல இண்டலிஜென்ஸூம் இதுகிட்டா இருக்குமே..உடனே, டாக்டர் கேக்கிற அதே கேள்விகளை/அதைவிட கூடக் குறைய (!)கேட்கலாம். ஒவ்வொரு சிம்டம்ஸா பார்த்து சாரி..அது ஆராய்ச்சி செய்து, எதனால் ஜூரம், என்ன மருந்துகள், எப்போ குணமாகுமென்று சொல்லும்!!செயற்கையாக ஒரு நிபுணத்துவத்தை கொண்டு வருவது!!
இதுவும் ஒருவகை ஆர்டிஃப்சியல் இண்டலிஜென்ஸ்னும் சொல்லலாம்..ஆனா இது பொதுவாக
ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்ததாக இருக்கும்!


சரி, எதர்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், இதையெல்லாம் படிக்கும் போது ஒரே கனவுதான்..ஓ நாம் எம்.சி.ஏ முடிச்சிட்டு, இதுலல்லாம் வேலை செய்ய போகிறோமா என்று!! அது மட்டுமா, சும்மா இருக்காமல், பேப்பர் எல்லாம் எழுதி இன்ஃபோசியத்திற்கு அனுப்ப வேண்டியது. அங்கு, என்னவோ நாம் எழுதியதை நாளைக்கே implement செய்வது போல் கேள்விகள் வேறு.இது எல்லா எம்.சி.ஏ மாண்வர்களின் வாழ்க்கையில் நடக்கக் கூடியதுதான்!!


ஆனா, படித்து முடித்து வெளியில் வந்து பார்த்தால்தான் தெரியும், இவற்றில் எந்த பேப்பருமே இந்தியாவில் வேலைக்கு ஆகாதென்று! நாம் படித்த கம்ப்யூட்டர் மொழிகள்
கூட outdate ஆகியிருக்கும். சில சமயம் தனியாக கோர்ஸ் படித்து வேலை தேட வேண்டும். அப்படி தேடின வேலை என்னவாக இருக்கும் என்கிறீர்கள்..
யாராவது ஏற்கெனவே எழுதின நிரலியில், இருக்கும் தவறுகளை சரி செய்வது, இல்லையெனில் ஒரு சின்ன அப்ளிகேஷனைச் சேர்ப்பது, இருப்பதை மாற்றுவது..இல்லையெனில் இருக்கவே இருக்கிறது....தப்பு கண்டுபிடித்து மேலிடத்திற்கு
சொல்லும் வேலை!


ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு கனவுகளோடு படித்த அந்த துறைகளிலெல்லாம் நம் நாட்டில்
எங்காவது ரிசர்ச் நடக்கின்றதா? வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்/ஆய்வகங்களில் இருக்கலாம். ஆனா, நம் நாட்டில் படித்தவர்களுக்கு இங்கே அந்த துறையில் மேலே தொடர்வதற்கு வழி இருக்கிறதா என்பது சந்தேகமே!! அப்படியே இருந்தாலும், அவர்கள் பி.ஹெச்டி தான் செய்ய வேண்டும், ஆனா அதுக்கேத்த மாதிரி வேலையோ சம்பளமோ இருக்காது என்பது எனது அவதானிப்பு.


நான் உதாரணத்திற்கு கணினித் துறையைச் சொல்லியிருக்கிறேன். ஆனால் bio-informatics என்று எடுத்துக் கொண்டாலும் கூட, மேலே ஆராய்ச்சி, அல்லது மேல் படிப்புக்குக் கூட
வெளிநாடுகளில்தான் வாய்ப்பு உண்டு!! ஐஐடி-யில் இருக்கலாம். ஆனால் விரும்புகிற அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லையே!! ஏன் bio-informatics படித்த நிறைய பேர், அவர்கள் படித்த துறைக்கு தொடர்பில்லாத சாப்ட்வேரில் வேலை செய்வதை
மறுக்கமுடியாது!!

ரோபோ என்றால் ஜப்பான் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. இதுவரை நாம் ஏதாவது ரோபோக்கள் செய்திருக்கிறோமா? நாம் ஏன் எந்த product-ஐயும் சொந்தமாக தயாரிப்பது இல்லை? சாப்ட்வேர் என்றால் இந்தியர்கள்தான் என்ற நிலையில், எல்லாமே மற்ற நாடுகளுக்கு நாம் சர்வீஸ்களாகவே இருப்பது ஏன்? (டாலிதான் இந்திய product). ஒருவேளை இந்த மாதிரித் துறைகளில் ஆராய்ச்சிகள் நடந்து, நமக்கு வெளியில் தெரிவது இல்லையா?

தெரிந்தவர்கள் அல்லது பேராசிரியர்கள் யாராவது விளக்குங்களேன், ஒருவேளை எனது அறியாமையாகக் கூட இருக்கலாம்!!

பி.கு : நான் சொன்ன உதாரணங்களான் ப்ரிஜ்ஜில் பால், நியூரான்கள் இவையெல்லாம்
இன்னும் நடைமுறை வாழ்வில் சாமான்ய மனிதனுக்கு (செல்போன் போல) எட்டும் வரை உலகமும், கணினித் துறைக்கான தேவையும்/மவுசு இருக்கும்.

Source : http://sandanamullai.blogspot.com

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts