செவ்வாய், நவம்பர் 17, 2009

ராகுல் திராவிட் - 11,000 ரன்கள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ராகுல் திராவிட் பெற்றார்.

ஆமதாபாதில் திங்கள்கிழமை [16-11-09] துவங்கிய இலங்கைக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 177 ரன்கள் எடுத்திருந்தபோது திராவிட் இந்தச் சாதனையைச் செய்தார்.

11 ஆயி​ரம் ரன்களை எடுப்பதற்கு இன்னும் 177 ரன்கள் தேவை என்ற நிலை​யில் திராவிட் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டம் முடியும்போது 177 ரன்கள் நாட்-அவுட் என பெவிலியன் திரும்பினார் திராவிட். இந்தியாவின் சுவர் என்று வர்ணிக்கப்படும் திராவிட் ஆமதாபாத் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை நிரூபித்தார்.

இலங்கைக்கு எதிராக திரா​விட் எடுக்கும் 2-வது சதமாகும் இது. டெஸ்ட் போட்டிகளில் இது அவருக்கு 27-வது சதம்.

11 ஆயிரம் ரன்கள் எடுத்த 5-வது வீரர் திராவிட் என்பது குறிப்பிடத்தக்கது. 135-வது டெஸ்டில் இந்த சாதனையை திராவிட் படைத்துள்ளார்.

வீரர் போட்டி ரன்கள் சதம் அரை சதம் சராசரி

சச்சின் (இந்தியா) 160 12777 42 53 54.37

லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34 48 52.88

பாண்டிங் (ஆஸி.,) 136 11345 38 48 55.88

பார்டர் (ஆஸி.,) 156 11174 27 63 50.56

டிராவிட் (இந்தியா) 135 11000 27 57 53.39


Courtesy : http://www.dinamani.com/edition/story.aspx?&Court
SectionName=Sports&artid=155772&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=
&
http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4297&Value3=A

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts