சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்து இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலக சாதனை படைத்துள்ளார்.
30 ஆயிரம் ரன்களை எடுக்கும் முதலாவது வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமதாபாதில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் சச்சின் 35 ரன்களை எடுத்தபோது அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் புரிந்தார்.
1989-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சச்சின் தற்போது கிரிக்கெட் வாழ்க்கையில் 21-ம் ஆண்டில் நுழைந்துள்ளார். 20-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் அவர் இந்தப் போட்டியில் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெஸ்ட் போட்டிகள், ஒரு தின போட்டிகள், சர்வதேச டி20 போட்டிகள் என மூன்றிலும் சேர்த்து அவர் தற்போது 30,065 ரன்களைச் சேர்த்துள்ளார்.
சச்சின் குவித்த ரன்கள் விவரம்:
போட்டி ரன்கள் சதம் அரை சதம் சராசரி
டெஸ்ட் - 160 12,877 43 53 54.79
ஒரு நாள் - 436 17,178 45 91 44.50
டி20 - 1 10 - - 10.00
நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sports&artid=157611&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30 ஆயிரம் ரன் கடந்து புதிய சாதனை படைத்தார். அகமதாபாத் டெஸ்டின் கடைசி நாளான நேற்று, சச்சின் 35 ரன் எடுத்த போது ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் சேர்த்து 30 ஆயிரம் ரன்னை எட்டினார். சர்வதேச கிரிக்கெட்டில் 30 ஆயிரம் ரன் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இதுவரை 160 டெஸ்ட், 436 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் அவர் 88 சதம், 144 அரை சதம் மற்றும் 199 விக்கெட் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக ரன் குவித்த
டாப் 5 வீரர்கள் விவரம்:
பெயர் போட்டி ரன்கள் சதம் சராசரி
சச்சின் 597 30065 88 48.33
பான்டிங் 483 24057 66 47.92
லாரா 430 22358 53 46.28
டிராவிட் 474 21803 39 45.32
காலிஸ் 436 20974 47 49.11
நன்றி : http://www.dinakaran.com/sportsdetail.aspx?id=748
சனி, நவம்பர் 21, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக