செவ்வாய், நவம்பர் 25, 2014

சுயமுன்னேற்றம்



செரி காட்டர் ஸ்காட்டின் என்பவர் சுயமுன்னேற்றம் பற்றி நிறைய ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அவர் மனிதராயிருக்க பத்து விதிகள் என கீழ்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்.
ஒன்றாம் விதி : நீங்கள் ஒரு உடலைப் பெறுவீர்கள். (நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, வாழ்க்கை முழுவதும் அது உங்களுடையதுதான். ஆகவே,அதை ஏற்றுக்கொள்ளுங்கள். உள்ளே இருப்பதுதான் முக்கியம்.)
இரண்டாம் விதி: உங்களுக்கு பாடங்கள் கிடைக்கும்
மூன்றாம் விதி: தவறுகள் என்பதே கிடையாது. எல்லாமே பாடங்கள்தான்.
நான்காம் விதி: கற்று முடியும்வரை பாடங்கள் தொடரும்.
ஐந்தாம் விதி: கற்றல் முடிவதில்லை.
ஆறாம் விதி: இருக்கும் இடத்தைவிட சிறந்தது எதுவுமில்லை.
ஏழாம் விதி: பிறர் உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளே!
எட்டாம் விதி: உங்கள் வாழ்க்கையை எப்படி அமைக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.
ஒன்பதாம் விதி: உங்களுக்கான பதில்கள் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
பத்தாம் விதி: இவை அனைத்தையும் பிறக்கும்போது மறந்துவிடுவீர்கள்.
( நாம் அனைவரும் இத்தகைய குணங்களோடுதான் பிறக்கிறோம். ஆனால் நமது ஆரம்பகால அனுபவங்கள் நம்மை நமது ஆன்ம பலத்தை இழக்கச் செய்து பொருளியல் உலகினுள் திருப்பி விடுகின்றன. நாம் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் கொண்டவர்களாகிறோம்.)

வியாழன், அக்டோபர் 09, 2014

ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும்
மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள்
கணக்கிடப்படுகின்றது.
அதன் சில
குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440
நிமிடங்களாகும் (60x24=1440)}
ஒரு மனிதன் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.
★ஒரு நிமிடத்திற்கு 15
முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள்
வாழலாம்.
★ஒரு நிமிடத்திற்கு 16
முறை மூச்சு விட்டால் 93ஆண்டுகள்
வாழலாம்.
★ஒரு நிமிடத்திற்கு 17
முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள்
வாழலாம்.
★ஒரு நிமிடத்திற்கு 18
முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள்
வாழலாம்.
★ஒரு நிமிடத்திற்கு 19
முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள்
வாழலாம்.
★ஒரு நிமிடத்திற்கு 20
முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள்
வாழலாம்.
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
நாம் நம் ஆயுளில் 7
வருடங்களை இழக்கிறோம்
என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
*2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு.
*1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு.
*0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை.......

நன்றி : https://www.facebook.com/

திங்கள், ஜூலை 21, 2014

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்க, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன, இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல, நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

நன்றி:https://m.facebook.com/story.php?story_fbid=812225835477217&id=100000694231141&_rdr

வியாழன், ஜூலை 17, 2014

இங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்கு இணைக்கப்பட்ட கடிதம் இது :



இந்த கடிதத்தோடு உங்களின் தேர்வு முடிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த சிக்கலான தேர்வு வாரத்தில் நீ காட்டிய அளவில்லாத அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியைக்கண்ட நாங்கள் பெரிதும் பெருமைப்படுகிறோம்.

ஆனால்,இந்த தேர்வுகள் உன்னை தனித்தவராகவும்,சிறந்தவராகவும் ஆக்கும் பண்புகளை முழுமையாக எடை போடாது என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். இந்த வினாத்தாள்களை தயாரிப்பவர்கள்,இவற்றை திருத்துபவர்கள் ஆகிய ஒவ்வொருவருக்கும உங்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் தனித்தனியாக தெரியாது. உங்களை உங்கள் ஆசிரியரோ,பெற்றோரோ,நான் அறிய முயல்கிற மாதிரியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ அற்புதமாக ஒரு இசைக்கருவியை மீட்டுவாய் என்றோ,பிரமிக்க வைக்கிற வகையில் ஓவியம் வரைவாய் என்றோ அல்லது அழகாக நடனம் ஆடுவாய் என்றோ அவர்களுக்கு தெரியாது.

உன் நண்பர்களுக்கு நீ எவ்வளவு முக்கியமானவர் என்றோ,உன்னுடைய ஒரு புன்னகை அவர்களின் ஒரு நாளை எவ்வளவு சிறப்பானதாக ஆக்கிவிடும் என்றோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ கவிதையோ,பாடலோ எழுதுவாய் என்றோ அல்லது விளையாட்டுகளில் பங்கு பெறுகிறாய் என்றோ அல்லது சிலசமயங்களில் பள்ளி முடிந்த பின்னர் உன்னுடைய குட்டித்தம்பி அல்லது தங்கையை கவனித்துக்கொள்கிறாய் என்றோ அவர்களுக்கு தெரியாது. நீ கச்சிதமான ஒரு இடத்துக்கு பயணம் போய் வந்திருக்கிறாய் என்றோ,ஒரு சிறந்த கதையை அசந்து போகிற வகையில் உனக்கு சொல்லத்தெரியும் என்றோ, முக்கியத்துவம் வாய்ந்த நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களோடு நேரம் செலவிட்டாய் என்றோ அவர்களுக்கு தெரியாது. நீ நம்பிக்கைக்குரியவன்,கருணையானவன அல்லது யோசிக்கக்கூடியவன் என்பதோ,நீ ஒவ்வொரு நாளும் உன்னுடைய பெஸ்ட்டை தர முயல்கிறாய் என்பதோ அவர்களுக்கு தெரியாது. இந்த முடிவுகள் எதோ சிலவற்றை சொல்கின்றன,ஆனால,அவை உன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லவில்லை.

இந்த முடிவுகளை கொண்டாடுங்கள்,வற்றை பற்றி பெருமிதப்படுங்கள். அதே சமயம் நீ சாமர்த்தியசாலியாக இருப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்

https://m.facebook.com/photo.php?fbid=789173177780427&id=100000632559754&set=a.272060919491658.69030.100000632559754&refid=7&_ft_=qid.6036966059671400313%3Amf_story_key.-1876577079999907819&__tn__=*s

புதன், ஜூன் 18, 2014

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

மஞ்சள் - தீமைகளிலிருந்து
நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் ! எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம். புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்து வித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது....

வாழை இலையில் உணவு பரிமாறும் முறை சாப்பிடுவது எப்படி

வாழை இலையில் உணவு பரிமாறும் முறை

வாழை இலையின் இடது மூலையில் உப்பினை வைத்தல் வேண்டும். வலது கீழ்ப்பக்க மூலையில் இனிப்பு பலகாரம், பாயாசம் வைக்க வேண்டும்.மேல்பக
ுதியில் வலதிலிருந்து இடது பக்கமாக பச்சடி, கூட்டுக்கறி, பொரித்த கறி, பால்கறி, வறுவல், ஊறுகாய் ஆகியவற்றையும் வைத்தல் வேண்டும்.இடது பக்கத்தின் கீழ்ப்புறமாக அப்பளம், வடை, பொறியல் பரிமாற வேண்டும். இனிப்பு பலகாரம் அருகில் சித்ரான்னமும், பருப்பு, நெய் பரிமாறவும். அடுத்து, சோறுடன் குழம்பும், அடுத்து ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாற வேண்டும். கடைசியாக தயிர் சோற்றுடன் பரிமாறி முடித்தல் வேண்டும்.

இனி சாப்பிடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிரில் முடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சாப்பாட்டின் போது சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும்.

தெரிந்துகொள்வோம : தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் ...!



1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!
 
நன்றி : https://m.facebook.com/dinakarannews?refid=28&_ft_=qid.6026235272743794241%3Amf_story_key.-4967402461725395451&__tn__=C

செவ்வாய், ஜூன் 10, 2014

மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு !!! ..



மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..

1.
வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;

2.
நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;

3.
தாகவிடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;

4.
கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்;
5.
கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;

6.
பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;

7.
நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.

நன்றி : https://m.facebook.com/story.php?story_fbid=790101874356280&id=100000694231141&_rdr

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts