புதன், அக்டோபர் 28, 2009

நிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!

1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

3. கூகுள் (GOOGLE):சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.

4.ஹாட் மெயில் (HOTMAIL) இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி NTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

6. மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.

7. யாஹூ (YAHOO): தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.


மூலம் : http://www.dinamalar.com/Supplementary/cmalar_detail.asp?news_id=899

சனி, அக்டோபர் 24, 2009

இந்தியாவுக்கு "நம்பர்-1' வாய்ப்பு

சொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றும் பட்சத்தில், உலகின் "நம்பர்-1' அணியாக முன்னேற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. முதல் போட்டி நாளை வதோதராவில் நடக்கிறது. தற்போது ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி (124 புள்ளிகள்), இத்தொடரில் ஆஸ்திரேலியாவில் (128 புள்ளிகள்) வீழ்த்தினால் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம்.

"நம்பர்-1' வாய்ப்பு: ஒரு நாள் தொடரை 4-3 கணக்கில் இந்தியா கைப்பற்றினால் 127 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

* 5-2 என தொடரை வென்றால் 129 புள்ளிகளும், 6-1 என தொடரை தன்வசப்படுத்தினால், 131 புள்ளிகளும் பெற்று இந்திய அணி முதலிடத்தை கைப்பற்றும். ஆஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெறும்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை அப்படியே (7-0) வெல்லும் பட்சத்தில், இந்திய அணிக்கு 133 புள்ளிகள் கிடைக்கும். ஆஸ்திரேலியா 120 புள்ளிகளுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்படும்.

* தற்போது "நம்பர்-1' இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை வென்றால் தனது இடத்தில் நீடிக்கும்.

இரண்டு முறை: இதற்கு முன் இந்திய அணி இந்த ஆண்டு இரண்டு முறை "நம்பர்-1' வாய்ப்பை பெற்றது. ஆனால் இந்த வாய்ப்பு நிரந்தரமாக நீடிக்க வில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சாதித்தால், முதலிடத்தில் சிறிது காலம் நீடிக்கலாம்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4063&Value3=A#

புதன், அக்டோபர் 14, 2009

இந்தியாவில் 51 நாள் சுற்றுப்பயணம்: 3 டெஸ்ட், 5 ஒரு நாள், 2 டி20 போட்டிகளில் இலங்கை அணி விளையாடுகிறது

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் 51 நாள் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள், இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்திய சுற்றுப்பயண விவரத்தை கொழும்பில் இலங்கை கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நவம்பர் 8-ம் தேதி இந்தியா வரும் இலங்கை அணி டிசம்பர் 28-ம் தேதி இலங்கைக்குத் திரும்பிச் செல்கிறது. இலங்கை சுற்றுப்பயண விவரம்:

நவம்பர் 8: இலங்கை அணி மும்பை பயணம்.

நவம்பர் 11-13: ஆமதாபாத்தில் போர்டு பிரசிடெண்ட் லெவன்-இலங்கை அணி மோதும் 3 நாள் போட்டி.

நவம்பர் 16-20: ஆமதாபாதில் முதல் டெஸ்ட்.

நவம்பர் 24-28: கான்பூரில் 2வது டெஸ்ட்.

டிசம்பர் 2-6: மும்பையில் 3-வது டெஸ்ட்.

டிசம்பர் 9: மொஹாலியில் முதலாவது டி20 போட்டி.

டிசம்பர் 12: நாகபுரியில் 2-வது டி20 போட்டி.

டிசம்பர் 15: ராஜ்கோட்டில் முதலாவது ஒரு நாள் ஆட்டம்.

டிசம்பர் 18: விசாகப்பட்டணத்தில் 2-வது ஒரு நாள் ஆட்டம்.

டிசம்பர் 21: கட்டாக்கில் 3-வது ஒரு நாள் ஆட்டம்.

டிசம்பர் 24: கோல்கத்தாவில் 4-வது ஒரு நாள் ஆட்டம்.

டிசம்பர் 27: தில்லியில் 5-வது ஒரு நாள் ஆட்டம்.

டிசம்பர் 28: கொழும்பு வருகை.

நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sports&artid=139402&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=இந்தியாவில்%2051%20நாள்%20சுற்றுப்பயணம்:%203%20டெஸ்ட்,%205%20ஒரு%20நாள்,%202%20டி20%20போட்டிகளில்%20இலங்கை%20அணி%20விளையாடுகிறது

செவ்வாய், அக்டோபர் 13, 2009

ஆஸ்திரேலியாவுடன் ஒரு நாள் தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர் 15-ல் சென்னையில் தேர்வு

ஆஸ்திரேலியாவுடன் 7 ஒரு நாள் ஆட்டங்களில் இந்தியா விளையாடவுள்ளது. இதற்காக இம்மாத கடைசியில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி வரவுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கவலையில் உள்ளது. இதையடுத்து இந்திய தேர்வுக் குழுவினர் அணியைத் தேர்வு செய்வதில் கவனத்துடன் செயல்படவுள்ளனர்.

நடந்து முடிந்த என்கேபி சால்வே சாலஞ்சர் டிராபி போட்டியில் விளையாடிய வீரர்களை தேர்வுக் குழுவினர் கவனித்துள்ளனர். இதிலிருந்தே இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

அணித் தேர்வு அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் நடைபெறும்.

ஆஸ்திரேலியாவுடன் முதல் ஒரு நாள் ஆட்டம் அக்டோபர் 25-ம் தேதி வதோதராவில் நடைபெறும். கடைசி ஆட்டம் நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நவம்பர் 11-ம் தேதி நடைபெறும்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் ஆட்டங்கள் விவரம்:

அக்டோபர் 25 - முதல் ஒரு நாள் ஆட்டம் - வதோதரா.
அக்டோபர் 28 - 2-வது ஒரு நாள் ஆட்டம் - நாகபுரி.
அக்டோபர் 31 - 3-வது ஒரு நாள் ஆட்டம் - தில்லி.
நவம்பர் 2 - 4-வது ஒரு நாள் ஆட்டம் - மொஹாலி.
நவம்பர் 5 - 5-வது ஒரு நாள் ஆட்டம் - குவாஹாட்டி.
நவம்பர் 8 - 6-வது ஒரு நாள் ஆட்டம் - ஹைதராபாத்.
நவம்பர் 11 - 7-வது ஒரு நாள் ஆட்டம் - நவி மும்பை.

நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Headlines&artid=139026&SectionID=128&MainSectionID=128&SEO=&Title=ஆஸ்திரேலியாவுடன்%20ஒரு%20நாள்%20தொடர்:%20இந்திய%20கிரிக்கெட்%20அணி%20அக்டோபர்%2015-ல்%20சென்னையில்%20தேர்வு

வியாழன், அக்டோபர் 08, 2009

India get easy draw for 2011 World Cup

India will be hosting 29 of those matches with Sri Lanka holding 12 and remaining eight going to Bangladesh, which will host two of the four quarterfinals. India and Lanka will hold other two last-eight clashes besides a semifinal each. The final will be held at the renovated Wankhede Stadium.

Group A: Australia (holders), Pakistan, New Zealand, Sri Lanka (co-hosts), Zimbabwe, Canada, Kenya
Group B: India (co-hosts), South Africa, England, West Indies, Bangladesh, Ireland and The Netherlands

Source : http://www.dnaindia.com/sport/report_india-get-easy-draw-for-2011-world-cup_1296192

==================================================================================

Dubai, Oct 7 (ANI): The International Cricket Council (ICC) on Wednesday announced the groups for the 2011 World Cup to be held in the sub-continent.

India is placed in Group B along with South Africa, England and the West Indies. Netherlands, Ireland and Bangladesh were the other three teams in India’s group.

While, Pakistan is staying in ‘Group A’ along world champions Australia, New Zealand, Sri Lanka, Zimbabwe, Kenya and Canada. (ANI)

Source : http://trak.in/news/icc-announces-world-cup-2011-groups/11593/

செவ்வாய், அக்டோபர் 06, 2009

பேசும் வினாடிக்கு கட்டணம்





நன்றி : http://dkn.dinakaran.com/firstpage.aspx#

சனி, அக்டோபர் 03, 2009

ICC Champions Trophy 2009/10 / Points table as on 01-10-09 & 1st Semi-Final Result


ICC Champions Trophy 2009/10 / Points table as on 01-10-09

Group A

Teams Mat Won Lost Tied N/R Pts Net RR For Against

Australia 3 2 0 0 1 5 +0.510 481/100.0 430/100.0
Pakistan 3 2 1 0 0 4 +0.999 641/130.3 587/150.0
India 3 1 1 0 1 3 +0.290 378/82.1 431/100.0
West Indies 3 0 3 0 0 0 -1.537 487/150.0 539/112.4

Group B

Teams Mat Won Lost Tied N/R Pts Net RR For Against

New Zealand 3 2 1 0 0 4 +0.782 676/127.1 640/141.1
England 3 2 1 0 0 4 -0.487 682/145.0 660/127.1
Sri Lanka 3 1 2 0 0 2 -0.085 750/137.4 734/132.4
South Africa 3 1 2 0 0 2 -0.177 724/128.5 798/137.4

1st Semi-Final: Australia v England at Centurion - Oct 2, 2009

Australia won by 9 wickets (with 49 balls remaining)

England 257 (47.4 ov); Australia 258/1 (41.5 ov)

Source : http://www.cricinfo.com/iccct2009/engine/series/374074.html?view=pointstable
http://www.cricinfo.com/ci/engine/current/match/scores/recent.html

ஐ.சி.சி., விருது: காம்பிர் மகிழ்ச்சி

ஜோகனஸ்பர்க்: "கடந்த 2004ல் டிராவிட்டுக்குப் பின்னர், ஐ.சி.சி.,யின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதை பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கவுதம் காம்பிர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., விருதுகள், ஜோகனஸ்பர்கில் நடந்த விழாவில் நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்டன. சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் விருதை கேப்டன் தோனியும், சிறந்த டெஸ்ட் போட்டிக்கான விருதை கவுதம் காம்பிரும் பெற்றனர்.
விழாவில் தோனி பங்கேற்காததால், அவ்விருதை காம்பிர் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு, சிறந்த ஒரு நாள் வீரர் விருதை தோனி பெற்றிருந்தார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் பெற்றுள்ளார்.

2008 ஆக.13 முதல் 2009 ஆக.24 வரையான காலத்தில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் சிறந்த டெஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இச்சமயத்தில் நடந்த, 24 ஒரு நாள் போட்டிகளில் 967 ரன்களும், கீப்பராக 26 விக்கெட் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தார். இப்போட்டிகளில் கேப்டனாக 17 போட்டிகளில் வெற்றி பெற்றுத் தந்தார்.

இந்த ஆண்டுக்கான சிறந்த ஐ.சி.சி., வீரர் விருது தேர்வு நான்கு முனை போட்டியாக இருந்தது. தோனி, காம்பிருடன், இங்கிலாந்து கேப்டன் ஆன்ட்ரூஸ் ஸ்டிராசும் போட்டியில் இருந்தார். ஆனால் கடைசியில் விருதை ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஜான்சன் தட்டிச் சென்றுவிட்டார்.

விருதுக்கான காலகட்டத்தில், 27 வயதான மிட்சல் ஜான்சன், 17 போட்டிகளில் 80 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 632 ரன்களையும் எடுத்தார். அதில் ஒரு சதமும் அடங்கும். 16 ஒரு நாள் போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி, 83 ரன்களை எடுத்திருந்தார்.

இந்த காலகட்டத்தில், எட்டு டெஸ்ட் போட்டிகளில் பேட் செய்த காம்பிர், 84.60 சராசரியுடன், ஐந்து சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்களை காம்பிர் விளாசியிருந்தார்.

விருது பெற்ற மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் மீடியாவுக்கு பேட்டியளித்தார் காம்பிர். அப்போது அவர் தெரிவித்த போது, "நான் இந்த விருது பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் நல்ல பார்முக்கு திரும்புவேன் என்று கூட சில நேரங்களில் உறுதியாக நம்பவில்லை. என்னுடைய பயிற்சியாளர் பரத்வாஜ் என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். என்னை சுற்றி இருந்தவர்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள்.

டில்லியில் நடந்த ஆஸி.,க்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் மற்றும், நேப்பியரில் நியூசிலாந்துக்கு எதிராக 178 ரன் எடுத்த போட்டிகள் இரண்டும் என்றும் மறக்க முடியாதவை. தற்போது நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது' என்றார்.

கடந்த 2004ல் ஐ.சி.சி., விருதுகள் நிறுவப்பட்ட போது, சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும், டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதையும் டிராவிட் பெற்றார். அதன் பிறகு எந்த இந்திய வீரரும் இந்த பெருமையை பெறவில்லை.

==============================================================================

கிரிக்கெட் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி., சர்வதேச விருது பெற்ற வீரர்கள்.

சிறந்த கிரிக்கெட் வீரர்: மிட்சல் ஜான்சன் (ஆஸி.,)

சிறந்த டெஸ்ட் வீரர்: கவுதம் காம்பிர் (இந்தியா)

சிறந்த ஒருநாள் வீரர்: தோனி (இந்தியா)

"டுவென்டி-20' சிறந்த வீரர்: தில்ஷன் (இலங்கை)

சிறந்த அம்பயர்: அலீம்தார் (பாக்.,)

சிறந்த அணி: நியூசிலாந்து

சிறந்த வளரும் வீரர்: பீட்டர் சிடில் (ஆஸி.,)

இந்த ஆண்டின் சிறந்த இணை வீரர்: வில்லியம் போர்ட்பீல்டு (அயர்லாந்து)

சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: கிளைர் டெய்லர் (இங்கிலாந்து).

ஐ.சி.சி.,யின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் வெளியிடப்பட்டுள்ளன. தோனி, சச்சின், சேவக், காம்பிர், யுவராஜ் மற்றும் ஹர்பஜன் இந்த அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளிலும் கேப்டன் பொறுப்பைப் பெற்று தோனி சாதித்துள்ளார்.

ஐ.சி.சி., டெஸ்ட் அணி: கவுதம் காம்பிர் (இந்தியா), ஆன்ட்ரூ ஸ்டிராஸ் (இங்கிலாந்து), டிவிலியர்ஸ் (தெ.ஆ.,), சச்சின் (இந்தியா), சமரவீரா (இலங்கை), கிளார்க் (ஆஸி.,), தோனி (இந்தியா - கேப்டன்), அல் ஹசன் (வ.தேசம்) மிட்சல் ஜான்சன் (ஆஸி.,) ஸ்டூவர்ட் பிராட் ( இங்கிலாந்து), டேல் ஸ்டைன் (தெ.ஆ.,) மற்றும் ஹர்பஜன் சிங் (இந்தியா)

ஐ.சி.சி., ஒருநாள் அணி: சேவக் (இந்தியா), கெய்ல் (வெ.இ.,) பீட்டர்சன் (இங்கிலாந்து),
தில்ஷன் (இலங்கை), யுவராஜ் (இந்தியா) மார்ட்டின் குப்தில் (நியூசி.,) தோனி (இந்தியா -கேப்டன், வி.கீ.,) பிளின்டாப் (இங்கிலாந்து) குலசேகரா, மெண்டிஸ் (இலங்கை), உமர் குல் (பாக்.,). 12வது வீரர்: திலன் துஷாரா (இலங்கை)

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3861&Value3=I

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts