இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் 51 நாள் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள், இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்திய சுற்றுப்பயண விவரத்தை கொழும்பில் இலங்கை கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நவம்பர் 8-ம் தேதி இந்தியா வரும் இலங்கை அணி டிசம்பர் 28-ம் தேதி இலங்கைக்குத் திரும்பிச் செல்கிறது. இலங்கை சுற்றுப்பயண விவரம்:
நவம்பர் 8: இலங்கை அணி மும்பை பயணம்.
நவம்பர் 11-13: ஆமதாபாத்தில் போர்டு பிரசிடெண்ட் லெவன்-இலங்கை அணி மோதும் 3 நாள் போட்டி.
நவம்பர் 16-20: ஆமதாபாதில் முதல் டெஸ்ட்.
நவம்பர் 24-28: கான்பூரில் 2வது டெஸ்ட்.
டிசம்பர் 2-6: மும்பையில் 3-வது டெஸ்ட்.
டிசம்பர் 9: மொஹாலியில் முதலாவது டி20 போட்டி.
டிசம்பர் 12: நாகபுரியில் 2-வது டி20 போட்டி.
டிசம்பர் 15: ராஜ்கோட்டில் முதலாவது ஒரு நாள் ஆட்டம்.
டிசம்பர் 18: விசாகப்பட்டணத்தில் 2-வது ஒரு நாள் ஆட்டம்.
டிசம்பர் 21: கட்டாக்கில் 3-வது ஒரு நாள் ஆட்டம்.
டிசம்பர் 24: கோல்கத்தாவில் 4-வது ஒரு நாள் ஆட்டம்.
டிசம்பர் 27: தில்லியில் 5-வது ஒரு நாள் ஆட்டம்.
டிசம்பர் 28: கொழும்பு வருகை.
நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sports&artid=139402&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=இந்தியாவில்%2051%20நாள்%20சுற்றுப்பயணம்:%203%20டெஸ்ட்,%205%20ஒரு%20நாள்,%202%20டி20%20போட்டிகளில்%20இலங்கை%20அணி%20விளையாடுகிறது
புதன், அக்டோபர் 14, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக