சனி, அக்டோபர் 24, 2009

இந்தியாவுக்கு "நம்பர்-1' வாய்ப்பு

சொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றும் பட்சத்தில், உலகின் "நம்பர்-1' அணியாக முன்னேற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. முதல் போட்டி நாளை வதோதராவில் நடக்கிறது. தற்போது ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி (124 புள்ளிகள்), இத்தொடரில் ஆஸ்திரேலியாவில் (128 புள்ளிகள்) வீழ்த்தினால் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம்.

"நம்பர்-1' வாய்ப்பு: ஒரு நாள் தொடரை 4-3 கணக்கில் இந்தியா கைப்பற்றினால் 127 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

* 5-2 என தொடரை வென்றால் 129 புள்ளிகளும், 6-1 என தொடரை தன்வசப்படுத்தினால், 131 புள்ளிகளும் பெற்று இந்திய அணி முதலிடத்தை கைப்பற்றும். ஆஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெறும்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை அப்படியே (7-0) வெல்லும் பட்சத்தில், இந்திய அணிக்கு 133 புள்ளிகள் கிடைக்கும். ஆஸ்திரேலியா 120 புள்ளிகளுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்படும்.

* தற்போது "நம்பர்-1' இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை வென்றால் தனது இடத்தில் நீடிக்கும்.

இரண்டு முறை: இதற்கு முன் இந்திய அணி இந்த ஆண்டு இரண்டு முறை "நம்பர்-1' வாய்ப்பை பெற்றது. ஆனால் இந்த வாய்ப்பு நிரந்தரமாக நீடிக்க வில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சாதித்தால், முதலிடத்தில் சிறிது காலம் நீடிக்கலாம்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=4063&Value3=A#

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts