ஜோகனஸ்பர்க்: "கடந்த 2004ல் டிராவிட்டுக்குப் பின்னர், ஐ.சி.சி.,யின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதை பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கவுதம் காம்பிர் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., விருதுகள், ஜோகனஸ்பர்கில் நடந்த விழாவில் நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்டன. சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் விருதை கேப்டன் தோனியும், சிறந்த டெஸ்ட் போட்டிக்கான விருதை கவுதம் காம்பிரும் பெற்றனர்.
விழாவில் தோனி பங்கேற்காததால், அவ்விருதை காம்பிர் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு, சிறந்த ஒரு நாள் வீரர் விருதை தோனி பெற்றிருந்தார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் பெற்றுள்ளார்.
2008 ஆக.13 முதல் 2009 ஆக.24 வரையான காலத்தில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் சிறந்த டெஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இச்சமயத்தில் நடந்த, 24 ஒரு நாள் போட்டிகளில் 967 ரன்களும், கீப்பராக 26 விக்கெட் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தார். இப்போட்டிகளில் கேப்டனாக 17 போட்டிகளில் வெற்றி பெற்றுத் தந்தார்.
இந்த ஆண்டுக்கான சிறந்த ஐ.சி.சி., வீரர் விருது தேர்வு நான்கு முனை போட்டியாக இருந்தது. தோனி, காம்பிருடன், இங்கிலாந்து கேப்டன் ஆன்ட்ரூஸ் ஸ்டிராசும் போட்டியில் இருந்தார். ஆனால் கடைசியில் விருதை ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஜான்சன் தட்டிச் சென்றுவிட்டார்.
விருதுக்கான காலகட்டத்தில், 27 வயதான மிட்சல் ஜான்சன், 17 போட்டிகளில் 80 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 632 ரன்களையும் எடுத்தார். அதில் ஒரு சதமும் அடங்கும். 16 ஒரு நாள் போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி, 83 ரன்களை எடுத்திருந்தார்.
இந்த காலகட்டத்தில், எட்டு டெஸ்ட் போட்டிகளில் பேட் செய்த காம்பிர், 84.60 சராசரியுடன், ஐந்து சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்களை காம்பிர் விளாசியிருந்தார்.
விருது பெற்ற மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் மீடியாவுக்கு பேட்டியளித்தார் காம்பிர். அப்போது அவர் தெரிவித்த போது, "நான் இந்த விருது பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் நல்ல பார்முக்கு திரும்புவேன் என்று கூட சில நேரங்களில் உறுதியாக நம்பவில்லை. என்னுடைய பயிற்சியாளர் பரத்வாஜ் என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். என்னை சுற்றி இருந்தவர்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள்.
டில்லியில் நடந்த ஆஸி.,க்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் மற்றும், நேப்பியரில் நியூசிலாந்துக்கு எதிராக 178 ரன் எடுத்த போட்டிகள் இரண்டும் என்றும் மறக்க முடியாதவை. தற்போது நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது' என்றார்.
கடந்த 2004ல் ஐ.சி.சி., விருதுகள் நிறுவப்பட்ட போது, சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும், டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதையும் டிராவிட் பெற்றார். அதன் பிறகு எந்த இந்திய வீரரும் இந்த பெருமையை பெறவில்லை.
==============================================================================
கிரிக்கெட் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி., சர்வதேச விருது பெற்ற வீரர்கள்.
சிறந்த கிரிக்கெட் வீரர்: மிட்சல் ஜான்சன் (ஆஸி.,)
சிறந்த டெஸ்ட் வீரர்: கவுதம் காம்பிர் (இந்தியா)
சிறந்த ஒருநாள் வீரர்: தோனி (இந்தியா)
"டுவென்டி-20' சிறந்த வீரர்: தில்ஷன் (இலங்கை)
சிறந்த அம்பயர்: அலீம்தார் (பாக்.,)
சிறந்த அணி: நியூசிலாந்து
சிறந்த வளரும் வீரர்: பீட்டர் சிடில் (ஆஸி.,)
இந்த ஆண்டின் சிறந்த இணை வீரர்: வில்லியம் போர்ட்பீல்டு (அயர்லாந்து)
சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: கிளைர் டெய்லர் (இங்கிலாந்து).
ஐ.சி.சி.,யின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் வெளியிடப்பட்டுள்ளன. தோனி, சச்சின், சேவக், காம்பிர், யுவராஜ் மற்றும் ஹர்பஜன் இந்த அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளிலும் கேப்டன் பொறுப்பைப் பெற்று தோனி சாதித்துள்ளார்.
ஐ.சி.சி., டெஸ்ட் அணி: கவுதம் காம்பிர் (இந்தியா), ஆன்ட்ரூ ஸ்டிராஸ் (இங்கிலாந்து), டிவிலியர்ஸ் (தெ.ஆ.,), சச்சின் (இந்தியா), சமரவீரா (இலங்கை), கிளார்க் (ஆஸி.,), தோனி (இந்தியா - கேப்டன்), அல் ஹசன் (வ.தேசம்) மிட்சல் ஜான்சன் (ஆஸி.,) ஸ்டூவர்ட் பிராட் ( இங்கிலாந்து), டேல் ஸ்டைன் (தெ.ஆ.,) மற்றும் ஹர்பஜன் சிங் (இந்தியா)
ஐ.சி.சி., ஒருநாள் அணி: சேவக் (இந்தியா), கெய்ல் (வெ.இ.,) பீட்டர்சன் (இங்கிலாந்து),
தில்ஷன் (இலங்கை), யுவராஜ் (இந்தியா) மார்ட்டின் குப்தில் (நியூசி.,) தோனி (இந்தியா -கேப்டன், வி.கீ.,) பிளின்டாப் (இங்கிலாந்து) குலசேகரா, மெண்டிஸ் (இலங்கை), உமர் குல் (பாக்.,). 12வது வீரர்: திலன் துஷாரா (இலங்கை)
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3861&Value3=I
சனி, அக்டோபர் 03, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக