ஆஸ்திரேலியாவுடன் 7 ஒரு நாள் ஆட்டங்களில் இந்தியா விளையாடவுள்ளது. இதற்காக இம்மாத கடைசியில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி வரவுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கவலையில் உள்ளது. இதையடுத்து இந்திய தேர்வுக் குழுவினர் அணியைத் தேர்வு செய்வதில் கவனத்துடன் செயல்படவுள்ளனர்.
நடந்து முடிந்த என்கேபி சால்வே சாலஞ்சர் டிராபி போட்டியில் விளையாடிய வீரர்களை தேர்வுக் குழுவினர் கவனித்துள்ளனர். இதிலிருந்தே இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.
அணித் தேர்வு அக்டோபர் 15-ம் தேதி சென்னையில் நடைபெறும்.
ஆஸ்திரேலியாவுடன் முதல் ஒரு நாள் ஆட்டம் அக்டோபர் 25-ம் தேதி வதோதராவில் நடைபெறும். கடைசி ஆட்டம் நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நவம்பர் 11-ம் தேதி நடைபெறும்.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் ஆட்டங்கள் விவரம்:
அக்டோபர் 25 - முதல் ஒரு நாள் ஆட்டம் - வதோதரா.
அக்டோபர் 28 - 2-வது ஒரு நாள் ஆட்டம் - நாகபுரி.
அக்டோபர் 31 - 3-வது ஒரு நாள் ஆட்டம் - தில்லி.
நவம்பர் 2 - 4-வது ஒரு நாள் ஆட்டம் - மொஹாலி.
நவம்பர் 5 - 5-வது ஒரு நாள் ஆட்டம் - குவாஹாட்டி.
நவம்பர் 8 - 6-வது ஒரு நாள் ஆட்டம் - ஹைதராபாத்.
நவம்பர் 11 - 7-வது ஒரு நாள் ஆட்டம் - நவி மும்பை.
நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Headlines&artid=139026&SectionID=128&MainSectionID=128&SEO=&Title=ஆஸ்திரேலியாவுடன்%20ஒரு%20நாள்%20தொடர்:%20இந்திய%20கிரிக்கெட்%20அணி%20அக்டோபர்%2015-ல்%20சென்னையில்%20தேர்வு
செவ்வாய், அக்டோபர் 13, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக