வெள்ளி, பிப்ரவரி 26, 2010
பிராட்மேனை மிஞ்சிய சச்சின்: வீரர்கள் புகழாரம்
குவாலியரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடியாக பேட் செய்த சச்சின், 200 ரன்களை விளாசி உலக சாதனை படைத்தார். சுமார் 40 ஆண்டு கால ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் எடுக்கும் முதல் வீரரான இவர், மீண்டும் ஒரு முறை வெற்றி நாயகனாக ஜொலித்தார். 36 வயதான நிலையில், மிக நீண்ட நேரம் விளையாடியது இவரது உடலுறுதியை காட்டியது.
கிரிக்கெட் கடவுள்:
இது குறித்து பிரிட்டன் மீடியா வெகுவாக புகழ்ந்துள்ளது. பி.பி.சி., வெளியிட்டுள்ள செய்தியில்,""கடைசி ஓவரில் ஒரு ரன் எடுத்து சச்சின் நிகழ்த்திய சாதனை பிரம்மிக்க வைத்தது. ஒரு இன்னிங்ஸ் முழுமையாக விளையாடியது அவரது உடல் வலிமையை சுட்டிக் காட்டியது,'' என குறிப்பிட்டுள்ளது. பிரபல டைம்ஸ் பத்திரிகை செய்தியில்,""கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் சச்சினின் சாதனையை அனைவரும் பாராட்ட வேண்டும. 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவருக்கு, இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது,'' என குறிப்பிட்டுள்ளது.
சச்சின் சாதனை குறித்து பல்வேறு அணிகளின் முன்னாள் கேப்டன்கள் புகழ்ந்து கூறியது:
கவாஸ்கர்(இந்தியா): சர்வதேச கிரிக்கெட்டில், சச்சினை போல் 93 சதங்கள் மற்றும் 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் வேறு யாரும் எடுக்கவில்லை. இவரை போன்ற சாதனையாளரின் கால் தொட்டு வணங்க ஆசைப்படுகிறேன். சச்சினுக்குள் எப்போதுமே ஒரு சிறுவனின் உணர்வு உண்டு. அந்த உணர்வு தான் தொடர்ந்து சாதிக்க தூண்டுகிறது. இவரது அகராதியில் "போதும்' என்ற வார்த்தைக்கு இடமில்லை. எனவே, டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 450 ரன், ஒரு நாள் போட்டிகளில் 250 ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும். பின் அவரது விருப்பத்திற்கு ஏற்ப, 2011ல் உலக கோப்பை கைப்பற்ற வேண்டும்.
வெங்கசர்க்கார்(இந்தியா): ஒரே நாளில் சச்சின் 200 ரன்கள் எடுத்துள்ளது வியக்கத்தக்க விஷயம். இந்த இலக்கை வெறும் 147 பந்துகளில் எட்டியது அவரது மனம் மற்றும் உடல் வலிமையை எடுத்துக் காட்டுகிறது. தனது விக்கெட்டை வீணாக இழக்க மாட்டார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விட்டால் மிகப் பெரும் இலக்குகளை எளிதாக எட்டி விடுவார்.
அஜித் வடேகர்(இந்தியா): சச்சின் சாதனைக்காக விளையாடுவதில்லை. சாதனைகள், அவரை தேடி வருகின்றன. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி வருகிறார். இவரது, "சூப்பர் பார்மை' பார்க்கும் போது, 2011ல் இந்தியா உலக கோப்பையை கைப்பற்றுவது உறுதி.
நாசர் ஹூசைன்(இங்கிலாந்து): பொதுவாக வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது இல்லை. ஆனாலும், குவாலியரில் சச்சினின் ஆட்டத்தை பார்த்த போது, கவாஸ்கர், ஆலன் பார்டர், லாரா, பாண்டிங்கை காட்டிலும் சிறந்த வீரராக தோன்றினார். தவிர, ஆஸ்திரேலிய "பேட்டிங் பிதாமகன்' பிராட்மேனை காட்டிலும் மிகச் சிறந்த வீரராக காட்சி அளித்தார்.
இம்ரான் கான்(பாகிஸ்தான்): ஒரு நாள் போட்டிகளில் சேவக் தான் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், இச்சாதனையை சச்சின் படைத்துள்ளார். இவர் நிறைய சாதனைகள் படைத்திருக்கலாம். அதில், 147 பந்தில் 200 ரன்கள் என்பது மிகவும் "ஸ்பெஷல்'. இதனை ஒரு அற்புதமான வீரர் நிகழ்த்திய அதிசயமாக கருதுகிறேன்.
சயீத் அன்வர்(பாக்.,): கடந்த 1997ல் சென்னையில் நான் 194 ரன்கள் விளாசி சாதனை படைத்த போது, சச்சின் தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது முதல் ஆளாக என்னை பாராட்டினார். பதிலுக்கு இப்போது, எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது சாதனை 13 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். தற்போது 200 ரன்கள் விளாசி சாதித்துள்ள சச்சின், தன்னை நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரராக அடையாளம் காட்டியுள்ளார்.
இதுவே ஆசை:
"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் கூறுகையில்,""நான் சாதனைக்காக கிரிக்கெட் விளையாடவில்லை. காலப் போக்கில் சாதனைகள், தானாகவே வருகின்றன. குவாலியர் போட்டியில் 175 ரன்களை எட்டிய போது, 200 ரன்களை எடுக்கலாம் என மனதில் தோன்றியது. சாதனைகள் முறியடிப்பதற்கே என கூறுவதுண்டு. இதன் அடிப்படையில் எனது சாதனையை, இந்திய வீரர் ஒருவர் தகர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்,''என்றார்.
அஞ்சலி பெருமிதம்:
சச்சின் சாதனையை அவரது குடும்பத்தினர் முழுமையாக காண முடியவில்லையாம். பள்ளி தேர்வு நடப்பதால் மகள் சாரா, மகன் அர்ஜூன் ஆகியோர் மாலை முழுவதும் படித்துள்ளனர். இவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில் தான் மனைவி அஞ்சலி அதிக கவனம் செலுத்தியுள்ளார். அஞ்சலி கூறுகையில்,""இரட்டை சதம் அடித்த விஷயத்தை "போன்' மூலம் கூறி இன்ப அதிர்ச்சி தந்தார் சச்சின். கிரிக்கெட் மீதுள்ள பக்தி தான் அவரது சாதனைகளுக்கு முக்கிய காரணம்,''என்றார்.
சாதனைக்கு அங்கீகார:
சச்சின் சாதனை படைத்த குவாலியர் ரூப் சிங் மைதானத்தின் ஒரு பகுதிக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, ம.பி.,யில் உள்ள "சிட்டி சென்டர்-ஹுரவாலி' சாலைக்கு சச்சின் பெயர் வைக்கப்படும் என முதல்வர் சிவராஜ் சவுகான் தெரிவித்தார்.
லோக்சபாவில் பாராட்டு:
சாதனை நாயகன் சச்சினுக்கு, லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் மீராகுமார் வாசித்த செய்தியில்,"" ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த உலகின் முதல் வீரர் என்ற, மகத்தான சாதனை படைத்த சச்சின், தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இது இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். எதிர்காலத்திலும் சச்சின் இதுபோன்று சாதிக்க வாழ்த்துக்கள்,'' என தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் வாழ்த்து
உலக சாதனை படைத்த சச்சினுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
சச்சினுக்கு முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்து தந்தி: குவாலியரில் நடந்த சர்வதேச ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த உங்களுக்கு எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள். முந்தைய சாதனைகள் அனைத்தையும் நீங்கள் கடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அருமையான உலக சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தாங்கள் கூறியதால், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தேசமே தங்களால் மிகவும் பெருமைப்படுகிறது.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சச்சின் "நம்பர்-3'
ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலை, ஐ.சி.சி., துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் சச்சின் (766 புள்ளி) மூன்று இடங்கள் முன்னேறி, "நம்பர்-3' இடம் பிடித்தார். இதற்கு குவாலியர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து சாதித்ததே காரணம். இப்போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய கேப்டன் தோனி (827), முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி (809), இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ஹர்பஜன் சிங், தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளார்.
இந்தியா "நம்பர்-2':
அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணி (115), மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ஐ.சி.சி., சார்பில் வழங்கப்படும், ரூ. 35 லட்சம் பரிசு இந்திய அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5253&Value3=A
வியாழன், பிப்ரவரி 25, 2010
சாதனை மன்னன் சச்சின்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, குவாலியரில் நேற்று நடந்த [25-02-2010], இரண்டாவது ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதன்மூலம் இவரது சாதனை பட்டியலில், மேலும் ஒரு புதிய மைல்கல் சேர்ந்தது.
இதன்மூலம் சச்சின், ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை சதம் மற்றும் ஒரு போட்டியில் 
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர்    ரன்    எதிரணி    ஆண்டு    இடம்
சச்சின் (இந்தியா)    200*    தென் ஆப்ரிக்கா    2010    குவாலியர்
காவன்ட்ரி (ஜிம்பாப்வே)    194*    வங்கதேசம்    2009    புலவாயோ
அன்வர் (பாகிஸ்தான்)    194    இந்தியா    1997    சென்னை
* ஒருநாள் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முன்னிலை வகிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர்    போட்டி    ரன்    சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா)    442    17598    46/93
ஜெயசூர்யா (இலங்கை)    444    13428    28/68
பாண்டிங் (ஆஸ்திரேலியா)    340    12731    29/76
* டெஸ்ட் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடம் வகிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர்    போட்டி    ரன்    சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா)    166    13447    47/54
லாரா (வெ.இண்டீஸ்)    131    11953    34/48
பாண்டிங் (ஆஸ்திரேலியா)    142    11859    39/51
* நேற்றைய போட்டியில் இரட்டை சதமடித்த சச்சின், ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற தனது பழைய சாதனையை முறிடித்தார். முன்னதாக இவர் கடந்த 1999ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக, ஐதராபாத்தில் நடந்த போட்டியில் 186 ரன்கள் எடுத்திருந்தார்.
இவ்வரிசையில் "டாப்-4' இந்திய வீரர்கள்:
வீரர்    ரன்    எதிரணி    இடம்    ஆண்டு
சச்சின்    200*    தென் ஆப்ரிக்கா    குவாலியர்    2010
சச்சின்    186*    நியூசிலாந்து    ஐதராபாத்    1999
தோனி    183*    இலங்கை    ஜெய்ப்பூர்    2005
கங்குலி    183    இலங்கை    டான்டன்    1999
* ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடத்தில் நீடிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' இந்திய வீரர்கள்:
வீரர்    போட்டி    ரன்    சதம்/அரைசதம்
சச்சின்    442    17598    46/93
கங்குலி    308    11221    22/71
டிராவிட்    335    10644    12/81
மூன்றாவது முறையாக
 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, மூன்றாவது முறையாக 400 ரன்களுக்கும் மேல் கடந்துள்ளது. தவிர, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்து, புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2000த்தில் நாக்பூரில் நடந்த போட்டியில், 310 ரன்கள் எடுத்திருந்ததே அதிகமாக இருந்தது. 
இந்தியா எடுத்த அதிக ரன்கள் விபரம்:
ரன்கள்    எதிரணி    இடம்/ஆண்டு
414/7    இலங்கை    ராஜ்கோட்/2009
413/5    பெர்முடா    போர்ட் ஆப் ஸ்பெயின்/2007
401/3    தெ.ஆப்.,    குவாலியர்/2010
சாதனை ஜோடி:
நேற்றைய போட்டியில் இந்தியாவின் சச்சின், தினேஷ் கார்த்திக் ஜோடி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 177 பந்துகளில் 194 ரன்கள் சேர்த்து, சாதனை படைத்தது. இதற்கு முன் சச்சின், டிராவிட் ஜோடி கடந்த 2000த்தில் (நாக்பூர்) தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்து இருந்தனர். 
5 ரன்கள்:
நேற்று சச்சின் 195 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 ரன்களை எடுக்க, 5 ஓவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் விபரம்:
* 45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார். 
* 46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்.
* 46.3ல் ரன் எதுவும் இல்லை
* 46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.
* 47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை
* 47.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க 199ஐ எட்டுகிறார்.
* கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.

நன்றி : 
1. http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage
2. http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5239&Value3=A
3. http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sports&artid=202405
&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=தொடரை%20வென்றது%20இந்தியா:%20வாழும்%20வரலாறு%20சச்சின்%20200%20நாட்-அவுட்
4. http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx
வெள்ளி, பிப்ரவரி 19, 2010
கோல்கட்டா டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது மற்றும் ரூ. 81 லட்சம் பரிசு
கோல்கட்டா டெஸ்டில், இந்திய அணி வெற்றி பெற்றதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வெளியிடப்படும், டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், 124 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி, வரும் ஏப்ரல் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது மற்றும் ரூ. 81 லட்சத்தை முதன் முறையாக பெற உள்ளது. கடந்த 2003ல் ரேங்கிங் அறிமுகமானதில் இருந்து, இவ்விருதை ஆஸ்திரேலியா தான் 7 முறை பெற்றது. இதற்கு இப்போது இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஐ.சி.சி., ரேங்கிங்கில் "டாப்-5' டெஸ்ட் அணிகள்:
ரேங்க் அணி புள்ளி
1 இந்தியா 124
2 தென் ஆப்ரிக்கா 120
3 ஆஸ்திரேலியா 116
4 இலங்கை 115
5 இங்கிலாந்து 107
டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. பரபரப்பான கோல்கட்டா டெஸ்டில், தென் ஆப்ரிக்காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுழலில் அசத்திய ஹர்பஜன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இத்தொடரில் 100 ரன்களுக்கு மேல் சேர்த்த பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன் அதிகபட்சம் சதம்/அரைசதம்
ஆம்லா (தெ.ஆ.,) 2 490 253* 3/0
சேவக் (இந்தியா) 2 290 165 2/0
சச்சின் (இந்தியா) 2 213 106 2/0
காலிஸ் (தெ.ஆ.,) 2 203 173 1/0
தோனி (இந்தியா) 2 163 132* 1/0
லட்சுமண் (இந்தியா) 1 143 143* 1/0
பீட்டர்சன் (தெ.ஆ.,) 1 121 100 1/0
ஸ்டைன் மிரட்டல்
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் முதலிடம்(11) பிடித்தார். இத்தொடரில் 3 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட் வி.கொ.ரன் சி.பந்துவீச்சு
ஸ்டைன் (தெ.ஆ., 2 11 223 7/51
ஹர்பஜன் (இந்தியா) 2 10 289 5/59
ஜாகிர் (இந்தியா) 2 7 218 4/90
ஹாரிஸ் (தெ.ஆ.,) 2 5 297 3/76
மார்கல் (தெ.ஆ.,) 2 4 238 2/115
மிஸ்ரா (இந்தியா) 2 4 288 3/78
* வி.கொ.ரன்- விட்டுக்கொடுத்த ரன்
** சி. பந்துவீச்சு- சிறந்த பந்துவீச்சு
நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5175&Value3=A
செவ்வாய், பிப்ரவரி 16, 2010
திங்கள், பிப்ரவரி 15, 2010
பாதங்களை பாருங்கள்
என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. இதில் பெண்களுக்கென அப்படி என்ன தனியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. என்று நீங்கள் கேட்கலாம். பெண்களது கால்கள், ஆண்களின் கால்களை விட நான்கு மடங்கு அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. குதியுயர்ந்த செருப்புக்களை அணிவதாலும் நின்ற படி சமைக்கும் சமையல் அறைகளும் நடையை குறைத்துக் கொண்ட வாழ்க்கை முறைகளுமே இதற்குக் காரணமாகின்றது.
எனவே பெண்கள், கால்களின் பராமரிப்பிற்கு என்று அதிக கவனம் எடுத்துக் கொள்வது என்பது மிக மிக அவசியமாகிறது. அழகிய பாதங்கள் அனைவருடைய கவனத்தையும் கவரும் அளவிற்கு சிறப்பைப் பெற்றிருக்கின்றன. பாதப்பராமரிப்பில் முக்கிய இடத்தை வகிப்பது அவரவர் பயன்படுத்தும் செருப்புகள் தான்.
அண்மைக் காலமாக பெரும்பாலான பெண்கள் cut shoe, high – helad shoe என்று சொல்லப்படும் நாகரீக செருப்புக்கள் மற்றும் தாங்கள் உடுத்தியிருக்கும் உடைகளின் வண்ணங்களிலேயே அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
நீங்களும் அவ்வாறே என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் shoe, high – helad shoe – க்களை மிகுந்த கவனமுடன் தேர்ந்தெடுங்கள். இவை கால் விரல்கள் தொர்த்த நிலையில் இருப்பதற்குப் போதுமான இடத்தைக் கொண்டுள்ளனவா என்றும் இவற்றைக் காலில் அணிந்து கொண்டு நடக்கும் போது எந்த சிரமமும் இல்லாதவாறும் இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். குதிங் காலுக்கும், ஆர்ச் போன்ற வளைவைப் பெற்றிருக்கும் கால்களின் மையப் பகுதிக்கும் சரியான பக்க வலுவை (support) நீங்கள் வாங்கப் போகும் காலணி அல்லது
பாதங்களில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கோளாறுகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
1. மிகுந்த அழுத்தத்தினால் ஏற்படும் கால் ஆணி, கால் காய்ப்பு (corn, calluses).
2. பூஞ்சாளத் தொற்றினால் ஏற்படும் பழுப்புநிறப் புள்ளிகள் (Brown Spots).
3. பூஞ்சாள வகை நுண்மத் தொற்றாலும், ஈரமான சாக்ஸ் மற்றும் செருப்புகளால் ஏற்படும் பித்த வெடிப்பு (Athlets Foot).
4. கால் வரல்களில் குறிப்பாக கட்டை விரலில் நகம் வளர்ந்து, மடங்கி, உள் தசைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் பாதிப்பு.
சரியான செருப்புகளை உபயோகிக்காத காரணத்தால் மூட்டுக்கள்
வீக்கமடைக்கின்றன. இது பரம்பரை காரணமாக ஏற்பட்டாலும் சரியான செருப்புகள் அணிவதன் மூலம் சீர் செய்ய இயலும்.
சருமத்தை மென்மையாக்க உதவும் ஆலிவ் எண்ணெய், கால் மற்றும் பாதங்களுக்கும் சிறந்த நன்மையளிக்கின்றது. கோடை காலங்களில் செருப்புகளில் உட்புறம் சிறிதளவு பவுடரை தூவினால் கால்கள் மெத்தென்ற உணர்வுடன் இருக்கும்.
கால்களைக் கழுவும் நீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கழுவினால் கால்கள் தூய்மையாகவும், பொலிவாகவும், தோற்றமளிக்கும். கால்களைக் கழுவுவதற்கு வெந்நீர் பயன்படுத்தக் கூடாது. இது காலில் உள்ள இயற்கையான சரும மென்மையை நீக்கி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. அதனால் பாதங்கள் வெடிப்பு மற்றும் காய்ப்பிற்கு உள்ளாகிறது.
கால் பாதங்களுக்கு வலிமையூட்டும் சில பயிற்சிகள்
1. வெறுங்காலுடன், கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றி சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். அதன் பின்னர் ஒரிடத்தில் அமர்ந்து கொண்டு கால் விரல்களை மேலேயும், கீழேயும் முறையே தூக்கி, கீழே இறக்கி பயிற்சி செய்யுங்கள். இது போல் குறைந்தது 50 தடவை செய்து வந்தால் சோர்வடைந்த கால்கள் புத்துணர்வு பெறும்.
2. உள்ளங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகள் வலிமை பெற, வசதியான நிலையில் (தரையிலோ, நாற்காலியிலோ) அமர்நது கொள்ளுங்கள். விரல்களை ஒன்று சேர்த்து உள்ளங்கால்களை அகலமாக விரித்து பின்னர் பழைய நிலைக்கு கொண்டு வந்து மறுபடியும் விரித்து இவ்வாறாக தொடர்ந்து 30 முறை செய்து வந்தால் கால்கள் நல்ல பலம் பெறும்.
3. பூஞ்சாள வகை நுண்மத் தொற்றாலும், ஈரமான சாக்ஸ் மற்றும் செருப்புகளால் ஏற்படும் பித்த வெடிப்பு (Athlets Foot).
4. கால் வரல்களில் குறிப்பாக கட்டை விரலில் நகம் வளர்ந்து, மடங்கி, உள் தசைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் பாதிப்பு.
5. கால்களில் மென்மையைப் பராமரிக்கவும், பாத விரல்களில் வலிமையைப் பாதுகாக்கவும், விரும்புவோர், ஒருபென்சிலை தரையிலிருந்து எடுக்கும் பயிற்சியை பின்பற்றலாம். ஒவ்வொரு காலிலும் தனித் தனியாக இப்பயிற்சியை குறைந்தது பத்து தடவைகள் மேற்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
சரியான செருப்புகளை உபயோகிக்காத காரணத்தால் மூட்டுக்கள்
வீக்கமடைக்கின்றன. இது பரம்பரை காரணமாக ஏற்பட்டாலும் சரியான செருப்புகள் அணிவதன் மூலம் சீர் செய்ய இயலும்.
சருமத்தை மென்மையாக்க உதவும் ஆலிவ் எண்ணெய், கால் மற்றும் பாதங்களுக்கும் சிறந்த நன்மையளிக்கின்றது. கோடைகாலங்களில் செருப்புகளில் உட்புறம் சிறிதளவு பவுடரை தூவினால் கால்கள் மெத்தென்ற உணர்வுடன் இருக்கும்.
கால்களைக் கழுவும் நீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கழுவினால் கால்கள் தூய்மையாகவும், பொலிவாகவும், தோற்றமளிக்கும். கால்களைக் கழுவுவதற்கு வெந்நீர் பயன்படுத்தக் கூடாது. இது காலில் உள்ள இயற்கையான சரும மென்மையை நீக்கி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. அதனால் பாதங்கள் வெடிப்பு மற்றும் காய்ப்பிற்கு உள்ளாகிறது.
காலணிகளில் கவனம்:
செருப்புக்களும் சில வேளைகளில் கால் பாதங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே கால்களுக்கு செருப்புகளை தேர்ந்தெடுக்கும் போது, அவை கூர்மையான முனைகள் இல்லாதவாறிருக்க வேண்டும். ஏனெனில் கூரிய முனைகள் கொண்ட செருப்புகள், பாதங்களில் மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து காய்ப்புக்கள், மற்றும் எலும்புக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும். கால் பாதங்களின் அசைவிற்குப் போதுமான இடத்தைக் கொண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பாதங்கள் நுழைவதற்கு தகுந்த அளவு இடம் பற்றாமல் இருந்தால் அது கால்களைச் செருப்புக்களின் முனைப்பக்கம் நோக்கி நகரச் செய்து பெருந் தொந்தரவைத் தரும்.
இதோடு மட்டுமன்றி, கால் விரல்கள் மடங்கிப் போவதுடன் காய்ப்பு மற்றும் கால் விரல்களில் கோளாறுகளும் ஏற்படலாம். எனவே நீங்கள் வாங்கப் போகும் காலணி எதுவாக இருப்பினும் அதிக கவனமுடன் தேர்ந்தெடுப்பது நல்லது.
நன்றி : http://ayurvedham.com/tamil/self-help/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d.html
சனி, பிப்ரவரி 06, 2010
கவிதை
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
காலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.
சில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றை நினைவுகள் என்போம்.
சில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.
அவற்றைக் கனவுகள் என்போம்.
நன்றி : http://www.pkp.blogspot.com
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "




