தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, குவாலியரில் நேற்று நடந்த [25-02-2010], இரண்டாவது ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதன்மூலம் இவரது சாதனை பட்டியலில், மேலும் ஒரு புதிய மைல்கல் சேர்ந்தது.
இதன்மூலம் சச்சின், ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை சதம் மற்றும் ஒரு போட்டியில்
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி ஆண்டு இடம்
சச்சின் (இந்தியா) 200* தென் ஆப்ரிக்கா 2010 குவாலியர்
காவன்ட்ரி (ஜிம்பாப்வே) 194* வங்கதேசம் 2009 புலவாயோ
அன்வர் (பாகிஸ்தான்) 194 இந்தியா 1997 சென்னை
* ஒருநாள் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முன்னிலை வகிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 442 17598 46/93
ஜெயசூர்யா (இலங்கை) 444 13428 28/68
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 340 12731 29/76
* டெஸ்ட் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடம் வகிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 166 13447 47/54
லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34/48
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 142 11859 39/51
* நேற்றைய போட்டியில் இரட்டை சதமடித்த சச்சின், ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற தனது பழைய சாதனையை முறிடித்தார். முன்னதாக இவர் கடந்த 1999ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக, ஐதராபாத்தில் நடந்த போட்டியில் 186 ரன்கள் எடுத்திருந்தார்.
இவ்வரிசையில் "டாப்-4' இந்திய வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி இடம் ஆண்டு
சச்சின் 200* தென் ஆப்ரிக்கா குவாலியர் 2010
சச்சின் 186* நியூசிலாந்து ஐதராபாத் 1999
தோனி 183* இலங்கை ஜெய்ப்பூர் 2005
கங்குலி 183 இலங்கை டான்டன் 1999
* ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடத்தில் நீடிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' இந்திய வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் 442 17598 46/93
கங்குலி 308 11221 22/71
டிராவிட் 335 10644 12/81
மூன்றாவது முறையாக
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, மூன்றாவது முறையாக 400 ரன்களுக்கும் மேல் கடந்துள்ளது. தவிர, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்து, புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2000த்தில் நாக்பூரில் நடந்த போட்டியில், 310 ரன்கள் எடுத்திருந்ததே அதிகமாக இருந்தது.
இந்தியா எடுத்த அதிக ரன்கள் விபரம்:
ரன்கள் எதிரணி இடம்/ஆண்டு
414/7 இலங்கை ராஜ்கோட்/2009
413/5 பெர்முடா போர்ட் ஆப் ஸ்பெயின்/2007
401/3 தெ.ஆப்., குவாலியர்/2010
சாதனை ஜோடி:
நேற்றைய போட்டியில் இந்தியாவின் சச்சின், தினேஷ் கார்த்திக் ஜோடி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 177 பந்துகளில் 194 ரன்கள் சேர்த்து, சாதனை படைத்தது. இதற்கு முன் சச்சின், டிராவிட் ஜோடி கடந்த 2000த்தில் (நாக்பூர்) தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்து இருந்தனர்.
5 ரன்கள்:
நேற்று சச்சின் 195 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 ரன்களை எடுக்க, 5 ஓவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் விபரம்:
* 45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.
* 46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்.
* 46.3ல் ரன் எதுவும் இல்லை
* 46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.
* 47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை
* 47.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க 199ஐ எட்டுகிறார்.
* கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.
நன்றி :
1. http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage
2. http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5239&Value3=A
3. http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sports&artid=202405
&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=தொடரை%20வென்றது%20இந்தியா:%20வாழும்%20வரலாறு%20சச்சின்%20200%20நாட்-அவுட்
4. http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx
0 comments:
கருத்துரையிடுக