உங்களையே நீங்கள் அறியுங்கள்; இன்பம் வெளியே இல்லை; நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்றார் எழுத்தாளர் தமிழருவி மணியன்.
"மனிதனை இயக்கும் மனதில் இருந்துதான் எண்ணம் தோன்றுகிறது. அதிலிருந்துதான் வார்த்தை,செயல் எல்லாமே உருவாகிறது. ஆகவே மனம் எவ்வழியோ அவ்வழியே வாழ்வும் இருக்கும்".
கோயிலின் கருவறையில் உள்ள கடவுள் ஏன் கல்லில் காட்சி அளிக்கிறார்? கூட்டினால் கிடைப்பதானே கலை? ஆனால், சிற்பமோ கழித்தலில் கண்டெடுக்கப்படுவது. கல்லில் வேண்டாதவற்றை கழித்துக்கொண்டே வந்தால் கடவுள் தெரியும்; நம்மில் வேண்டாதவற்றை கழித்துக்கொண்டே வந்தால் அந்தக் கடவுள் நமக்குள்ளும் தெரியும்.
மனதில் இருக்கும் வேண்டாதவற்றை அகற்ற வேண்டும் என்றால் முதலில் நாம் நம்மை அறிய வேண்டும். நமக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்து, கேள்விகளைக் கேட்கும்போதுதான் அதற்கான விழிப்புணர்வு உண்டாகும். வெளியே தேடினால் இன்பமும் துன்பமும் இணைந்த விஞ்ஞானம் தோன்றும்; உள்ளே தேடினால் இன்பத்தை மட்டுமே கொடுக்கின்ற மெய்ஞானம் தோன்றும். ஆகையால், உங்களுக்குள்ளே உள்ள உங்களைக் கண்டறியுங்கள்; கடவுளைக் கண்டடைவீர்கள்"
நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=207916&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=உங்களையே%20நீங்கள்%20அறியுங்கள்:%20தமிழருவி%20மணியன்
திங்கள், மார்ச் 08, 2010
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக