தற்போது லட்சக்கணக்கான மக்கள் கான்டக்ட் லென்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அகாந்தாமோபோ என்ற நுண்ணுயிர் பாக்ட்டீரியா தாக்குதலால் கண் பார்வை பாதித்து குருடாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாக்ட்டீரியா, தூசி மற்றும் கடல் நீர், நீச்சல் குளம் போன்றவற்றில் உள்ள தண்ணீரின் மூலம் பரவுகிறது. கான்டக்ட் லென்ஸ் மூலம் இந்த கிருமி கண்களுக்குள் மிக எளிதாக புகுந்து விடுகிறது.
அந்த லென்ஸ்சில் படிந்திருக்கும் இக்கிருமி கண், வெண் படலத்துக்குள் சென்று அதை தின்று விடும். மேலும் அங்கு தங்கி தனது இனப் பெருக்கத்தை மேற்கொள்கிறது. இந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நமைச்சல் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும்.
கண்களில் இருந்து நீர் வடியும். சிறிது சிறிதாக பார்வை மங்கும், கண்ணின் மேல் இமையில் வீக்கம் ஏற்படும். கடுமையாக வலி ஏற்படும். இந்த நோய் முற்றிய நிலையில் சில வாரங்களில் கண் பார்வை முற்றிலும் இழந்து குருட்டு தன்மை ஏற்படும்.
இவற்றை குணப்படுத்த கண் சொட்டு மருந்துகளை 20 நிமிடத்துக்கு ஒரு முறை என 3 வாரத்திற்கு போட்டு வரவேண்டும். இந்த நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கண்வெண் படலம் மாற்று ஆபரேசன் செய்து கொள்ளலாம்.
மூலம் : http://www.maalaimalar.com/2012/09/08141938/contact-lens-fault-to-eyes.html
0 comments:
கருத்துரையிடுக