மொபைல் போனில் டெக்ஸ்ட் டைப் செய்வதிலும் தற்போது கின்னஸ் ரெகார்ட் பதிவு செய்யப்படுகிறது. The razortoothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.” என்ற டெக்ஸ்ட்டை மெலிஸ்ஸா தாம்ப்சன் என்பவர் அண்மையில் 26 நொடிகளில் மொபைல் போனில் டைப் செய்து உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதே டெக்ஸ்ட்டை டைப் செய்திட, முன்னர் 36 வினாடிகள் ஆனது. அந்த உலக சாதனையைத் தற்போது இவர் முறியடித்துள்ளார். இவர் சாம்சங் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் வெளியிட்ட கேலக்ஸி எஸ் என்ற போனை இதற்குப் பயன்படுத்தினார். இவர் இதற்காக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை. சாலையோரக் கடைகளில் பொருள் வாங்கச் சென்ற இவர், அங்கே கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்து என்னவென்று விசாரித்துள்ளார். இந்த சாதனை பற்றிக் கூறியவுடன், தானும் கலந்து கொண்டு, ஜஸ்ட் லைக் தட், டைப் செய்துள்ளார். அதுவே கின்னஸ் சாதனையாக எடுத்துக் கொள்ளப்பட்டு கின்னஸ் நிறுவனத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. தான் நாளொன்றுக்கு 40 முதல் 50 டெக்ஸ்ட் மெசேஜ் போன் மூலம் அனுப்புவதாகவும், அதுவே வேகத்தை வளர்த்துக் கொள்ள உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1646&ncat=5
புதன், செப்டம்பர் 08, 2010
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக