செவ்வாய், அக்டோபர் 19, 2010

100 வயதில் பிஎச்டி படிக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி !

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் 100 வயதாகும் சுதந்திரப் போராட்ட வீரர், பி.எச்.டி. ஆய்வு மேற்கொள்ள பெயர் பதிவு செய்துள்ளார். 100 கோடி ஜனத்தொகை கொண்ட நம் நாட்டில் மிகவும் வயதான பி.எச்.டி. மாணவர் இவர்தான். கவுகாத்தியில் வசிப்பவர் போலாராம் தாஸ். இந்த வாரக் கடைசியில் இவருக்கு 100வது பிறந்த நாள் வருகிறது. போலாராம் தாஸ் 19 வயது இளைஞனாக இருந்தபோது, 1930&ல் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

அதற்காக 2 மாதம் சிறை தண்டனை பெற்றார். இதன் பின்னர் வணிகவியல், சட்டப்படிப்பு படித்தார். 1945ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1971ம் ஆண்டில் அரசு பதிவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு தாஸ், ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் மாஜிஸ்திரேட்டாகவும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். அவரது மனைவி பெயர் மந்தாகினி. 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிஎச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுவது போலாவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. ஒன்றே மனிதத்துவம், ஒரே கடவுள் என்ற மதங்களின் தத்துவ அடிப்டையிலான நம்பிக்கை மற்றும் ஆர்வம் குறித்து அசாமின் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வை இப்போது செய்து வருகிறார். அதில் பெறப் போகும் பட்டம்தான் தனது 100 ஆண்டு பிறந்த நாள் பரிசு என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் தாஸ்.

தாஸ் பி.எச்.டி. ஆய்வு மாணவராக சேர்ந்துள்ள கவுகாத்தி பல்கலை.யின் துணைவேந்தர் ஓ.கே. மெட்ஹி கூறுகையில், “100 வயதில் ஆய்வு படிப்பை படிக்கும் மாணவரை பார்ப்பது உண்மையில் அரிது. தாசை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. அவரது இந்த முயற்சி, தன்னம்பிக்கை, சமுதாய சேவை ஆகியவை இளைய சமுதாயத்துக்கு உத்வேகத்தை அளிக்கும்Ó என்றார்.

ஆதாரம் : http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=18268&id1=12

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts