வியாழன், ஜனவரி 13, 2011

செல்போன், லேப்டாப் ‘2 இன் 1’

லாஸ்வேகாஸ் கம்ப்யூட்டர் வைப்பதற்கு ஒரு கிரவுண்டு பரப்பில் இடம் தேவைப்பட்டது ஒரு காலம். சைஸ் சுருங்கி சுருங்கி டேபிளுக்கு வந்தது. லேப்டாப், பாம்டாப் என்று தொடர்ந்து சுருங்கிக் கொண்டே இருக்கிறது. அடுத்த பரிணாம வளர்ச்சிதான் மோட்டரோலா நிறுவனத்தின் ‘2 இன் 1’ கண்டுபிடிப்பான ‘ஆட்ரிக்ஸ் 4ஜி’ ஸ்மார்ட்போன். வழக்கமான ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா அம்சங்களும் இதில் உண்டு. இன்னொரு கூடுதல் வசதி. இதை இன்ஸ்டன்ட் லேப்டாப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்காக டம்மி பீஸ் கீபோர்டு மற்றும் மானிட்டர் உருவாக்கியுள்ளனர்.




அதன் பின்பகுதியில் செல்போனை சொருகினால் செல்போனின் குட்டித் திரைக்கு பதிலாக, டம்மி பீஸின் அகன்ற மானிட்டரில் பார்த்துக் கொள்ளலாம். தாராளமாக மடியில் வைத்து டைப் செய்யலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இமெயில் அனுப்பலாம். டம்மி பீஸ் லேப்டாப்புக்கு என்று சாப்ட்வேர் எதுவும் கிடையாது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சர்வதேச நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி நேற்று தொடங்கி 9&ம் தேதி வரை நடக்கிறது. இதில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்ரிக்ஸ் 4ஜி, அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நன்றி : http://www.tamilulakam.com/news/view.php?id=21627

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts