இலவச வலைப்பூ சேவையில் முன்னணி வகிப்பது ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ். இந்த இரண்டில் எது சிறந்தது என்று அறிந்துக்கொள்ள ஒரு சிறிய தேடல். வேர்ட்பிரஸில் இலவச, மற்றும் கட்டண சேவை இரண்டும் இருந்தாலும் இலவச சேவையை மட்டுமே இங்கே ப்ளாக்கரோடு ஒப்பிட்டிருக்கிறேன்.
ஏன் பெரும்பாலானவர்கள் ப்ளாக்கர் சேவையில் வலைப்பூ ஆரம்பிக்கிறார்கள்...?
· இலவசம் + எளிமையானது.
· கூகிள் என்ற மதிப்புமிக்க நிறுவனத்தின் சேவை.
· ஆட் சென்ஸ், பிகாஸா, பிரண்ட் கனெக்ட், யூடியூப் போன்ற இணைந்த
சேவைகள்
· எண்ணிலடங்கா இலவச விட்ஜெட்டுகள்.
· எத்தனை வலைப்பூ வேண்டுமானால் ஆரம்பித்துக்கொள்ளலாம். இலவசமாக.
· குறிச்சொற்களுக்கு ஏற்ப கூகிள் தேடுபொறியில் உங்கள் வலைப்பூ
முன்னிலைப்படுத்துப்படும்.
வேர்ட்பிரஸ்
· இலவசம். எளிமையானது எனினும் ப்ளாக்கர் அளவிற்கு எளிமையானது அல்ல.
· தனி வலைத்தளமாக மாற்றும் செய்முறை சுலபமானது.
· பிற சேவையில் இருந்து வலைப்பூவை ஏற்றுமதி செய்வது எளிது.
· ஏகப்பட்ட டெம்ப்ளேட்ஸ்.
· சேவையைப் பற்றி விசாலமான உதவி வழங்க: en.forums.wordpress.com/
வேர்ட்பிரஸ் சேவையை பயன்படுத்துவது கடினமா...?
· கொஞ்சம் கடினம்தான். ஆனால் பழகினால் இரண்டே நாட்களில் எளிமையாகிவிடும்.
புதிதாக வலைப்பூ ஆரம்பிக்கப் போகிறீர்களா...?
முதலில் நீங்கள் என்ன காரணத்திற்காக வலைப்பூ ஆரம்பிக்க விரும்புகிறீர்கள் என்பதை சிந்தியுங்கள்.
· பொழுதுபோக்கிற்காகவும், பர்சனல் விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காகவும் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் ப்ளாக்கர் சேவையே போதுமானது. எளிமையானதும் கூட.
· டெக்னிக்கலான விஷயங்களை எழுதுவும், தனி வலைத்தளமாக மாற்ற திட்டம் வைத்திருந்தாலும் வேர்ட்பிரஸ் சேவையை தேர்ந்தெடுக்கவும்.
ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாறும் வசதி இருக்கிறதா...?
· ப்ளாக்கரிலிருந்து வேர்ட்பிரஸ் சேவைக்கு மாறுவது சாத்தியம். ஆனால் வேர்ட்பிரஸ் சேவையில் இருந்து ப்ளாக்கருக்கு மாறுவது சாத்தியமில்லை.
பிற இலவச வலைப்பூ சேவைகள்...?
· TypePad
· Yahoo 360
· Live Journal
· BlogSome
இன்னும் ஏராளமான இலவச சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன.
நன்றி : http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/vs.html
வியாழன், ஜனவரி 27, 2011
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக