வியாழன், ஏப்ரல் 28, 2011

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பிளட்சர் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜிம்பாப்வேயை சேர்ந்த டங்கன் பிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன், பொறுப்பேற்கிறார்.
இந்திய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளர் கிறிஸ்டன். சமீபத்திய உலக கோப்பை தொடருடன் இவரது மூன்றாண்டு பயிற்சிக்காலம் முடிந்தது. தொடர்ந்து பதவியில் நீடிக்க விருப்பம் இல்லாத கிறிஸ்ட்ன், சமீபத்தில் தென் ஆப்ரிக்கா திரும்பினார். இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) புதிய பயிற்சியாளர் தேர்வில் தீவிரமாக இறங்கியது.
இந்த போட்டியில் ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர், ஆன்டி பிளவர், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் இருந்தனர். நேற்று, பி.சி.சி.ஐ., செயற்குழு மும்பையில் கூடியது. இதன் முடிவில், பிளட்சர் (62) இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வானார்.
இவர் கடந்த 1983 உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்காக பங்கேற்றுள்ளார். தவிர, கடந்த 1999 முதல் 2007 வரை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியில் இங்கிலாந்து அணி, 2005ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, ஆஷஸ் தொடரை வென்றது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறுகையில்,"" இந்திய அணியின் பயிற்சியாளராக, பிளட்சர் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இவர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும், அணியில் சேர்ந்து கொள்வார். பவுலிங் பயிற்சியாளர் பணியில் எரிக் சிம்மன்ஸ் தொடர்வார்,'' என்றார்.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=9296&Value3=A

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts