அப்ளிகேஷன் என்பது அன்று வேலை தேடுவதற்கான விண்ணப்பம்.
இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.
விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.
கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட்.
கீ போர்ட் என்பது அன்று ஒரு பியானோ. இன்று நம் விரல்களுடன் பாட்டுப் பாடும் ஒரு சாதனம்.
மெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம்.
சி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப் பட்ட பிறகும் வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.
பொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம்.
அன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம்.
எலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டர் குழந்தைக்கான படுக்கை. கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம். பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம்.
எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப்.
காய்ச்சலை வந்தால் காரணம் வைரஸ். இன்று அடுத்தவனைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.
ஆதாரம் & நன்றி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=5086&ncat=4
திங்கள், மே 02, 2011
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக