செவ்வாய், ஜூலை 05, 2011

கிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை: ஒரு பார்வை

தற்போது சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில் விவாதிக்கப்படவிருந்த இரண்டு பிரச்சனைகளில் ஒன்றில் சமரசத் தீர்வு கிடைத்துள்ளது. மற்றொன்று சுழற்சி முறையில் ஐசிசி தலைவரை நியமிப்பது ஆகும். யுடிஆர்எஸ் முறை அனைத்து சர்வதேச போட்டிகளிலும் இனிமேல் அமலில் இருக்கும். ஆனால், அதில் ஒருநிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.

இம் முறையில் இரண்டு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஹாட் ஸ்பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண்டு நுட்பங்களில் ஹாட் ஸ்பாட் மட்டும் பயன்படுத்தப்படும். ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தில் கறுப்பு வெள்ளை படத்தில் பந்து மட்டையில் பட்டதா இல்லையா என்பதைக் காண முடியும். இதற்கு தெர்மல் இமே ஜிங் என்று பெயர். இதில் ஒலி தொழில்நுட்பமும் உண்டு. பந்து மட்டையில் பட்டவுடன் ஏற்படும் ஒலியைக் கூறும் சவுண்ட் தொழில் நுட்பமும் பொருத்தப்படும். பந்தை சரியான முறையில் பிடித்தனரா? பந்து மட்டையில் அல்லது கையுறையில் பட்டுச் சென்றதா? என்பதை இம்முறைகளில் கண்டறியலாம். ஹாக்ஸ் ஐ மற்றொரு தொழில் நுட்பமாகும். இது தற்போதைக்கு நடைமுறைக்கு வராது. பந்தின் போக்கை அதனுடைய சுழற்சி, வேகம், எடை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்க இது பயன்படும். வீசப்பட்டு அடிக்கத் தவறிய பந்து ஆடுபவரின் காலால் அல்லது உடலின் அங்கமொன்றால் தடுக்கப்படாவிட்டால் பந்து ஸ்டம்பில் பட்டிருக்கும் என்ப தைத் தீர்மானிக்க இது உதவும். ஆனால், இது தற்போதைக்கு பயன்படுத்தப்படமாட்டாது. எனவே, எல்பிடபிள்யு (டயே) பற்றி தீர்மானிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது. மனிதனின் கண்ணும் மூளையும் மட்டும் இதைத் தீர்மானிக்கும்.
அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஹாட்ஸ் பாட், ஹாக்ஸ் ஐ ஆகிய இரண் டும் நடைமுறையில் இருந்தது. இவ்விரண்டையும் உள்ளடக்கிய யுடிஆர்எஸ் முறையை இந்தியா ஆடும் போட்டிகளில் பயன் படுத்த மறுத்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக் கெட் வாரியம் மிகப்பெரும் நிதியை வைத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இத்தொழில்நுட்பத்தை மறுத்ததால் பெரும் சர்ச்சை உருவானது. ஐசிசி மாநாட்டில் இந்தியாவை தனிமைப்படுத்தி, தேவைப்பட்டால் தோற்கடித்தாவது யுடிஆர்எஸ் முறையை நடைமுறைக்கு கொண்டு வருமாறு பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் பாய்காட் வேண்டுகோள் விடுத்தார்.


இம்முறை நூறு விழுக்காடு கூர்மையானதும் முழுமையானதும் அல்ல என்று இந்திய கிரிக் கெட் வாரியம் கூறிவந்தது. ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் இருந் தால் யுடிஆர்எஸ் முறையை ஏற் றுக் கொள்ளலாம் என்று டெண்டுல்கர் கூறினார். தோனியும் யுடி ஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மற்ற டெஸ்ட் நாடுகள் இம்முறைக்கு ஆதரவு தந்ததால் இந்தியா தனது எதிர்ப்பை ஹாக்ஸ் ஐ வேண்டியதில்லை என்ற நிபந்தனையுடன் விலக்கிக் கொண்டது. ஐசிசி உறுப்பு நாடுகளில் நிதி வல்லரசை பகைத்துக் கொள்ள விரும்பாத ஐசிசி இதை ஏற்றுக் கொண்டது.


ஹாட்ஸ்பாட், ஸ்னிக்கோ மீட்டர் ஆகிய இரண்டையும் பயன்படுத்த நாளொன்றுக்கு 57 ஆயி ரம் டாலர்கள் செலவாகும். இந்தியாவின் தயக்கத்துக்கு இது காரணமாக இருக்க முடி யாது. மிகவும் நெருக்கடியில் இருக் கும் இலங்கை கூட யுடிஆர்எஸ் முறையை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒரு கேள்வி நியாயமானது. இம்முறையின் செயல்பாட்டால் தவறான முடிவு கள் இருக்காது என்பது உறுதி யென்றால், மேல்முறையீட்டுக்கு வரம்பு தேவையா? என்ற கேள்வியை இந்தியா எழுப்புகிறது.

கடந்த டிசம்பரில் இந்திய வாரியப் பொருளாளர் என்.சீனிவாசனும், இந்திய கிரிக்கெட் வாரிய நடுவர் துணைக்குழு இயக்குநரும், ஐசிசியின் எலைட் நடுவர் குழு நடுவராக இருந்து ஓய்வு பெற்ற வெங்கட்ராகவனும் ஆஸ்திரேலியா சென்றனர். ஆஷஸ் தொடரில் பயன்பட்ட யுடிஆர்எஸ் முறையை நேரில் கண்டறிந்தனர். யுடிஆர்எஸ் நடை முறையை இருவரும் நம்ப மறுத்தனர். ஐசிசி அளித்த தகவல் குறிப்புகளும் இருவரையும் நம்ப வைக்கவில்லை. எனவே, இந்தியா யுடிஆர்எஸ் முறையை தொடர்ந்து எதிர்த்தது.
உலகக் கோப்பையில் கிடைத்த அனுபவம் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களையும், வாரியத்தையும் இந்நிலைபாட்டில் மீண்டும் உறுதியுடன் நிற்கவைத்தன. இந்தியாவும், இங்கிலாந்தும் மோதிய போட்டியில் இயான் பெல் எல்பி டபிள்யு முறையீட்டில் தப்பினார். ஆடுகளத்தில் 2.5 மீ. தொலைவுக்கு பெல் முன்னேறிச் சென்றதால் அவர் ஆட்டமிழக்கவில்லை என்று யுடி ஆர்எஸ் முறையில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தோனியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2008ல் இலங்கை தொடரில் யுடிஆர்எஸ் பயன்பட்டது. டெண்டுல்கர் நிருபர்களிடம் எதிர்ப்பைக் கூறினார். வீரர்களும், மற்றவர்களும் இம்முறையில் உள்ள குறைகளை வாரியத்திடம் கூறினர். அதற்குப்பின் இந்திய நிலைபாடு குறித்து உள் விவாதங்கள் நடைபெறவில்லை. இந்திய நிலைபாடு மாறவும் இல்லை.

மேற்கிந்தியாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக மூன்று தீர்ப்புகள் அமைந்தன. மூன்றும் நடுவர் ஹார்ப்பர் அளித்த தீர்ப்புகள் ஆகும். இந்தியா யுடிஆர்எஸ் முறையை ஏற்றிருந்தால் இம்மூன்றும் இந்தி யாவுக்கு பெரிதும் உதவியிருக்கும். சில தீர்ப்புகள் மேற்கிந்தியாவுக்கு சாதகமாக அமைந்தன. யுடிஆர்எஸ் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதனுடைய செயல் பாட்டுக்கும் சில வரையறைகள் உண்டு. ஆனாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்க முடியாது. யுடிஆர்எஸ் முடிவுகள் 95 விழுக்காடு நிறைவாக இருக்கும். மனித நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்வதால் தவறின் அளவுமிகக் குறைவாகவே இருக்கும். இது நடை முறைக்கு வந்தால் நடுவர் திறமையற்றவர் அல்லது ஒருசார் புடையவர் என்று கூற முடியாது.
தற்போதாவது இந்தியா யுடி ஆர்எஸ் முறையை சில சமரசத்துக்குட்பட்டு ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆதாரம் & நன்றி : http://tamilvaasi.blogspot.com/2011/07/blog-post_05.html

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts