1 மாணிக்கம் [Ruby]
மாணிக்கமும் ரத்தினமும் அண்ணன் தம்பி போல . குணாதிசயங்களில் அவ்வளவு ஒற்றுமை . பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகைக் கல்தான் இது . ஆக்ரோஷமான காதலின் அடையாளமான இது உலகக் காதலர்களிடையே ஃபேமஸ் !
2 முத்து [Pearl]
கடலில் சிப்பிக்கு உள்ளே செல்லும் தூசு , மணல் துகள் போன்றவையே முத்தாக உருவெடுக்கின்றது . வெள்ளை மட்டும் அல்ல ... பழுப்பு , பச்சை , நீலம் , இளஞ்சிவப்பு , கறுப்பு நிறத்திலும்கூட , முத்துக்கள் உண்டு . முழுக்க முழுக்க கால்ஷியம் கார்பனேட்தான் முத்து . கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் ரேட் ஜாஸ்தி . இப்போது சிப்பிக்குள் செயற்கையாகத் தூசுகளை அனுப்பி முத்துக்களை உருவாக்குகிறார்கள் . கடையில் கிடைக்கும் பெரும்பாலான முத்துக்கள் செயற்கைதான் !
3 பவழம் [Red Coral]
பவழத்துக்கும் கடல்தான் வீடு . வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில்தான் இது விளையும் . பவழப்பூச்சி எனும் கடல்வாழ் உயிரினம் , கரையான் போல் கட்டும் புற்றே பவழப் பாறையாகிறது . ரத்தச் சிவப்பில் ஜொலிக்கும் பவழம் தான் ஒரிஜினல் . சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவழப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்ட பிறகு , மார்க்கெட்டில் பவழங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது !
4 மரகதம் [Emerald]
பச்சை நிறத்தில் பளபளக்கும் மரகதம் நோய் எதிப்புச் சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . அதனால் தம்மாத்தூண்டு இருக்கும் கல்லே சில லட்சங்கள் வரை விலை போகும் . உத்தரகோசமங்கையில் இருக்கும் மங்கள நடராஜர் கோயிலில் ஏழரை அடி உயரத்தில் மரகதத்தால் ஆன மூலவர் சிலை இருக்கிறது . பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக மரகதம் கிடைக்கிரது . அந்தப் பகுதியில் இருக்கும் தலிபான்களுக்கு அதுதான் பெரிய வருமானம் .
5 புஷ்பராகம் [Topaz]
'ஏழைகளின் வைரம் ' என்று இதற்குப் பெயர் . தேன் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் இந்தக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கும் . 18 - ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய மன்னர் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,680 கேரட் .
6 வைரம் [Diamond ]
வைரம் என்பது படிக நிலையில் உள்ள கரிமம். பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்க சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகும்.
7 நீலக்கல் [Blue Sapphire]
நீலக்கல் என்பது குருந்ததால் ஆனதும் சிவப்பு நிறமல்லாத ஒரு நிறத்தைக் கொண்டதுமான ஒரு இரத்தினக் கல்லைக் குறிக்கும். சிவப்பு நிறமான இரத்தினக்கல் சிவப்புக்கல் அல்லது மாணிக்கம் என அழைக்கக்கப்டும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்க்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும். இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பத்பராட்ச்சம் என அழைக்கப்படுகிறது.
8 கோமேதகம் [Hessonite]
நவரத்தினங்களில் விலை குறைந்தது இதுதான் . பசுவின் சிறு நீர் நிறத்தில் இருப்பதால் , இந்தப் பெயர் .நகைகளில் பளபளப்பைக் கூட்டப் பயன்படுகிறது . ஜீரண சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை.
9 வைடூரியம் [Cats Eye]
க்ரைசோபெரில் என்ற இந்தக் கல்லின் செல்லப் பெயர் பூனைக் கண் . தமிழில் வைடூரியம் . பூமிக்கு அடியில் அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக உள்ளே இருக்கும் லாவா என்கிற எரிமலைக் குழம்பு எக்குத்தப்பாக எகிறி வெளியே வந்தால் , அதுதான் வைடூரியம் . வைரம் , மாணிக்கம் என்று வலிமை வரிசைப் பட்டியலில் இதற்கு மூன்றாவது இடம் !
ஆதாரம் & நன்றி : http://santhanamk.blogspot.com/2010/02/blog-post_11.html &
http://www.prohithar.com/gemstones.html
புதன், ஜூலை 06, 2011
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக