சிலர் உடல் மெலிந்த நிலையில் காணப்படுகின்றனர். அதற்கு மரபணு அதிக அளவில் இருப்பதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் பிலிப் புரோகல் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 95 ஆயிரம் பேரிடம் மரபணு(டி.என்.ஏ) சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் உடல் நலத்தை பேணி காக்கும் குரோமோசோம்-16ல் மரபணு அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவற்றில் உள்ள "ஜீணோம்" என்ற மூலக்கூறில் அதிக துவாரங்கள் இருப்பதாலும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் தான் நோய் ஏற்பட்டு உடல் மெலிகிறது.
பொதுவாக மரபணு அதிகம் உள்ள குழந்தைகள் சாப்பாட்டை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் உடல் ஆரோக்கியமின்றி மெலிந்து காணப்படுகிறார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி & ஆதாரம் : http://www.z9tech.com/view.php?203609F220eZnBd24ea4mOlT4cbdQCAAcddcySMQUdbc43lOmae43dBnZ3e033F90602
சனி, செப்டம்பர் 03, 2011
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக