வெள்ளி, செப்டம்பர் 30, 2011

ஐ.சி.சி., புதிய விதிமுறைகள் அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வரும் அக்., 1 முதல் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன. இது இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் தொடரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் படி, ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 பந்துகள் பயன்படுத்தப்படும்.
* பேட்ஸ்மேன் ரன் எடுக்க ஓடும் போது, பீல்டிங் செய்யும் அணி வீரர்களை தொல்லை செய்யக்கூடாது. "ரன் அவுட்' செய்வதை தடுக்கும் விதத்தில், பேட்ஸ்மேன் செயல்படுவதாக அம்பயர் நினைத்தால், மூன்றாவது அம்பயரிடம் முறையிடலாம். இறுதி முடிவை களத்தில் இருக்கும் அம்பயர் எடுக்கலாம்.
* "பவர்பிளே' விதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி முதல் 10 ஓவர்கள் "பவர்பிளே' முடிந்தவுடன், "பவுலிங் பவர்பிளேயை' 16 ஓவருக்கு முன்னதாக எடுக்கக் கூடாது. "பேட்டிங் பவர்பிளேயை' 40 ஓவருக்கு முன்னதாக எடுக்க வேண்டும்.
* மூன்று வித போட்டிகளிலும், இனி பேட்ஸ்மேன் காயமடைந்தால், "ரன்னர்' கிடையாது. ஒருவேளை 9 விக்கெட் வீழ்ந்த பின், காயமடைந்த வீரர் மீண்டும் பேட்டிங் செய்ய அல்லது பவுலிங் செய்ய விரும்பினால், அவர் காயமடைந்த சூழல், எவ்வளவு நேரம் களத்தில் இல்லாமல் இருந்தார் என்பதைப் பொறுத்து அனுமதிக்கப்படும்.
* பவுலிங் செய்யும் போது, அம்பயர் அருகில் நிற்கும் பேட்ஸ்மேன் "கிரீசை' விட்டு வெளியே இருந்தால், அவரை "அவுட்' செய்யலாம். அந்த பந்து கணக்கில் எடுக்கப்படாது.
* டெஸ்ட் போட்டியில் உணவு, தேநீர் இடைவேளைக்கு முன், 15 நிமிடம் கூடுதலாக பவுலிங் செய்துகொள்ள, இரு கேப்டன்களின் முடிவின் படி அனுமதிக்கலாம். ஒருவேளை முடிவு கிடைக்க தாமதமாகும் எனத் தெரிந்தால், அம்பயர்கள் இதை ஏற்கக்கூடாது.
* டெஸ்டில் 9 விக்கெட் விழுந்த நிலையில், போட்டியின் முடிவுக்காக உணவு, தேநீர் இடைவேளையை 30 நிமிடம் வரை தாமதப்படுத்தலாம்.
* ஒருநாள் போட்டிகளில் உணவு இடைவேளை, 20 ல் இருந்து 30 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நன்றி & ஆதாரம் : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=10873&Value3=A

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts